தபால் நிலைய தீ விபத்தில் நிலைய அதிபர் பலி

TODAYCEYLON


எல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம பிரதேசத்தில் உள்ள உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார். 

இவ் அனர்த்தமானது  இன்று காலை 6.30 மணியளவில் குருந்துகஸ்ஹெத்தக்ம பிரதேசத்தில் உள்ள உப தபால் நிலையத்தில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இத் தீ விபத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த நிலைய பெண் அதிபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் 49 வயதுடைய ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

தீயிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 


6/grid1/Political
To Top