(அஸ்லம் எஸ்.மௌலானா)
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் விஞ்ஞான பாட விசேட செயத்திட்டத்திற்கும் அல்-மதீனா வித்தியாலய புலமைப்பரிசில் பரீடசை பிரிவு மாணவர்களின் விசேட கல்வி செயற்பாடுகளுக்குமாக மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம் (SESEF) நிதியுதவி வழங்கியுள்ளது.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு 25,௦௦௦ ரூபாவும் அல்-மதீனா வித்தியாலயத்திற்கு 30,௦௦௦ ரூபாவும் இந்த அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமையத்தின் விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றசாக் (ஜவாத்) இதற்கான காசோலைகளை குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளித்தார்.
அதேவேளை அமைப்பின் கல்வி செயற்பாடுகளுக்காக அனுசரணை வழங்கிய அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவரான தொழில் அதிபர் ஏ.எம்.கமால்தீன் (B.Com), கலாநிதி ஏ.ஏ.நுபைல் ஆகியோருக்கும் எஸ்.எல்.பி.நிறுவன உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், பிரதம ஆலோசகர் ஏ.எச்.எம்.அன்சார், செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத், நிதிப் பணிப்பாளர் எம்.எப்.எம்.மர்சூக், ஆகியோரும் கலந்து கொண்டனர்.