அரச திணைக்களம் ஒன்றிற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு முன் கருத்து வெளியிடுவதற்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறித்த ஊடக சந்திப்பில் தனது அமைச்சின் கீழ் இயங்கும் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் தொடர்பில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதிலளிக்கவுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.