தற்போது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளில் மண் சரிவு அனர்த்தநிலை இன்று மாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைவாக இந்த மலைப்பிரதேசத்திற்கு அருகாமையில் உள்ள பிரதேசங்களில் மண்ணில் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.