திறந்த வெளியில் மலசலம் கழிக்கும் மக்கள் இலங்கையில் 1.4 வீதத்திலானோர் இருக்கின்றனர்.
அவ்வாறு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு 2020ஆம் ஆண்டளவில் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் சுகநல பாதுகாப்பு தொடர்பிலான இலக்குகளை அடைவதற்கான தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான குழுவினர் கொழும்பில் கூட உள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் இந்த மாநாடு நடைபெறும்.
சுகநல பாதுகாப்பு தொடர்பிலான தெற்காசிய மாநாட்டின் நிரந்தர வதிவிட காரியாலயம் இலங்கையில் அமைவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
சுத்தமான குடிநீர் குறித்து ஆராயும் மையம் சீன அரசாங்கத்தின் உதவியுடன், கண்டியில் அமைக்கவுள்ள கட்டடத்தில் சுகநல பாதுகாப்பு தொடர்பிலான தெற்காசிய மாநாட்டின் நிரந்தர வதிவிட காரியாலயத்திற்கான செயலகம் அமையவுள்ளது எனவும் நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் குறிப்பிட்டார்.
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform