ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை சீண்டினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

NEWS


ரோஹிங்யா மக்களுக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரோஹிங்யா மக்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் பிக்குமார்கள் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் நடந்து கொண்டது தொடர்பில் வெட்கப்படுகிறேன்.


மஹிந்த ஜனாதியாக இருந்த போதும், அதாவது 2008இலும் ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தார்கள்.
அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்த பிக்குமார்களே தற்போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே ரோஹிங்யா மக்களுக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
6/grid1/Political
To Top