அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
நோபல் அமைதி பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பாதிரியாரான டெஸ்மண்ட் டுடு ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி பேச வேண்டும் என்று கோரியுள்ளார்.
தன் அன்புச் சகோதரி போன்று கருதிய ஒருவருக்கு” எதிராக பேச வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளதாகவும், இது ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன ஒழிப்பு மற்றும் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரம் ஆகியவற்றால் தூண்டப்படும் ஒன்றாகும் என்று டுடு கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
அகவை 85 ஐ கொண்டிருக்கும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று இட்ட பதிவில், “ நீண்ட காலத்திற்கு நான் உங்கள் புகைப்படத்தை எனது மேஜையில் வைத்திருந்தேன். அது மியான்மர் மக்களுக்காக நீங்கள் கொண்டிருந்த தியாகத்தை எடுத்துக்காட்டுவதாக கருதினேன். உங்களது அரசியல் பிரவேசம் ரோஹிங்கியா மக்களின் மீது செலுத்தப்படும் வன்முறை குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் நீதிக்கு பொருத்தமற்றமுறையில் வன்முறையுடன் காணப்படும் தேசத்தை வழி நடத்துவது அமையக்கூடாது” என்றார் டுடு.
“உங்களது அரசியல் உயர்வின் பின்னணியில் உள்ள விலை உங்களது மௌனமுள்ளது என்றால் அதன் விலை மிகவும் உயர்ந்தது” என்றார் டுடு.
ஏற்கனவே பல நோபல் பரிசு பெற்ற பிரபலங்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக சூ கி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுடன் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் அறப்போர் புரிந்த பாதிரியார் டெஸ்மண்ட் டுடுவும் இணைந்துள்ளார்.