Top News

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் துவிச்சக்கரவண்டிகள்


கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்புப்படை தலைமையக இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 'தாமரைத் தடாக' கேட்போர் கூடத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 80 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

இதற்கான அன்பளிப்பினை நீர்கொழும்பு ரொட்டரி கழகம் வழங்கியது. டொன் பொஸ்கோ கல்லூரியில் கல்விகற்கும் மல்லாவி, விஸ்வமடு ஆகிய பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறம் குடும்பங்களிலிருந்து 65 மாணவர்களும், பூநேரியன் பகுதியிலிருந்து வறிய குடும்பத்தைச் சேர்ந்த 15 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவினால் நீர்கொழும்பு ரொட்டரிக் கழக உறுப்பினர்களிடத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில், டொன் பொஸ்கோ கல்லூரி அதிபர் அருட் தந்தை பயஸ் ஜோர்ஜ், நீர்கொழும்பு ரொட்டரிக் கழக தலைவர் திரு. பிரெட்டி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post