ஒலுவில் முதல் அக்கரைப்பற்று வரை இனி ஹக்கீம் வரமுடியாது; அதாஉல்லா சவால்!

NEWS


களியோடை ஆற்றுக்கு தென்பக்கமுள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு ஹக்கீம் இனி வரமுடியாது முடிந்தால் வந்து பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா,

இன்று பாலமுனையில் இடம்பெற்ற தேசிய காங்கிரசின் தெளிவூட்டல் பிரச்சாரத்தின் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட அதாஉல்லா,

நான் தான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் காரன் என்னை விட யாரும் இந்த கட்சிக்கு உரிமை கோரிவிட முடியாது, ஹக்கீம் எனும் நயவஞ்சகன் சமூகத்தை கூறுபோட்டு விற்றுவிட்டான், அரசியல் என்று இனி ஒருபோதும் ஹக்கீம் எமது பகுதிகளுக்கு வரமுடியாது வந்தால் எமது பேராளிகள் பார்த்துக் கொள்வார்கள் என சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு அரசியல் பிரச்சாரத்திற்கு ஹக்கீம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/grid1/Political
To Top