Top News

இறக்காமம் மாயக்கள்ளி பிரதேசத்தில் பதற்றம்.......

எஸ்.எம் சன்சீ்ர்,
சிலோன் முஸ்லிம் காரியாலயம்
இறக்காமம்


இறக்காமம் மானிக்கமடு பிரதேசத்தின் நேற்று காலை முதல் மாலை வரை சில சிங்கள புத்தர்களும், சிங்களவர்களுக்கும் இணைந்து தமிழ் நபரிடம் இருந்து காணி ஒன்றைக் கொள்வன்வு செய்து அதனுள் சில சுத்த நடவடிக்கைகளையும் அவர்களுக்கான அமைவிடங்களையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக இன்று (03.09.2017) மேற்கொண்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.



குறித்த சில மாதங்களுக்கு முன் கிழக்குமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தின் அடிப்படையில் குறித்த நீதிமன்ற தடை உத்தரவின் அடிப்படையில் யாரும் இதை அன்டிய பிரதேசத்தில் எவ்வித செயற்பாடுளிளும் ஈடுபடக்கூடாது என்றிருக்க நேற்றைய ஹஜ்ஜூப்பெருநாள் தினத்தன்று பிரதேச மக்களை கவலையில் ஆழ்த்தும் செயற்பாடொன்று இப்பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக பிரதேச வாசிகள், முன்னால் தவிசாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தணியுமான ஆரிப் சம்சூதீன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும், பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெற இருந்த வேலைத்திட்டங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இது தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியின் கவனதிற்கொண்டு வருவதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடந்து குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்கு திரும்பியதுடன் இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பெளத்த நபர்களால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.











Previous Post Next Post