யுத்தச் குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும், சிரியாவில் அதிகாரத்தில் இருக்கும் வரை சிறந்ததொரு தீர்வை எதிர்பார்ப்பு வைக்க முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கட்டார் தெரிவித்துள்ளது.
72 ஆவது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் கட்டார் சார்பில் கலந்துகொண்டுள்ள கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் இதனைக் கூறியுள்ளார்.
சிரியாவின் நெருக்கடி நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் நெருக்கடி நிலைமை உருவாகி தற்பொழுது ஆறு வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்க அந்நாட்டின் நீதித்துறை பலமிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.