விவாக பதிவாளராக மௌலவி அப்துல் ரஹ்மான் நியமனம்

NEWS


கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதேசத்திற்கான விவாக பதிவாளராக ஊடகவியலாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான மௌலவி மௌசூக் அப்துல் ரஹ்மான் (ஹ{ஸைனி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அலரி மாளிகையில் வைத்து நியமனம் பெற்றுக்கொண்டார். 

கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதோசத்தில் நீண்ட காலம் நிலவி வந்த முஸ்லிம் விவாக பதிவாளர் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே அப்துல் ரஹ்மானுக்கு கடந்த வியாழக்கிழமையன்று  அலரிமாளிகையில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் நிலவிய   நூற்றுக்கு அதிகமான விவாக பதிவாளர் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கி 
வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top