Top News

டிசம்பர் முதல் வாரத்தில் உள்­ளூ­ராட்சி சபை தேர்தல்; வாக்களிக்க தயாராகுங்கள்!



உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் எதிர்­வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்­தப்­ப­டு­வ­துடன் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் மாகா­ண­ச­பைகள் தேர்­தலை நடத்த முடியும் என அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளது. 
தேர்­தலை பிற்­போடும் நோக்­கத்தில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வ­தாக அர­சாங்­கதின் மீது குற்றம் சுமத்­தப்­பட்டு வரும் நிலையில் இந்து குறித்து அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
அவர் மேலும் கூறு­கையில், தேர்­தலை தள்­ளிப்­போடும் நிலைப்­பாட்டில் அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அவ்­வா­றான எந்­த­வொரு எண்­ணமும் இல்லை. எனினும் கடந்த கால தேர்தல் குள­று­ப­டி­களில் இருந்து விடு­பட்டு சுயா­தீ­ன­மா­கவும் அனைத்து தரப்­பையும் பாது­காக்கும் வகை­யி­லான தேர்தல் முறை­மை ஒன்றை உரு­வாக்­கவே நாம் கடந்த காலத்தில் முயற்­சித்து வந்தோம். அதற்­கான நகர்­வுகள் இப்­போது முடி­வுக்கு வந்­துள்­ளன. உள்­ளூ­ராட்சி சபை திருத்த சட்­ட­மூலம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­க­வுள்ளோம். அதேபோல் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும். தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு மூன்று மாத காலத்­தினுள் தேர்­தலை நடத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். எவ்­வாறு  இருப்­பினும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்­தலை நடத்த முடியும். சாதா­ரண தரப் பரீட்­சைகள் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. ஆகவே அதற்கு முன்னர் எம்மால் தேர்­தலை நடத்த முடியும். 
மேலும் மாகா­ண­சபை தேர்­தலை அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் நடத்த முடியும். 20 ஆம் திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் ஒன்­பது மாகா­ண ­ச­பை­க­ளுக்­கான தேர்­த­லையும் ஒரே தினத்தில் நடத்த முடியும். அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­புடன் இதனை நாம் நிறை­வேற்ற முயற்­சித்து வரு­கின்றோம். ஒரு­சிலர் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி இதனை தடுக்கும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
எனினும் அர­சாங்கம் மிகவும் உறு­தி­யாக எமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. விரைவில் தேர்­தலை நடத்­து­வதே  எமது ஒரே நிலைப்­பா­டாக உள்­ளது. அதற்கு பார­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல கட்­சி­க­ளி­னதும் பூரண ஒத்­து­ழைப்பு கிடைக்க வேண்டும் என நாம் எதிர்­பார்­க்கின்றோம். 
மேலும் இந்த இரண்டு ஆண்­டு­களில் அர­சாங்கம் மிகவும் மோச­மான ஆட்­சியை முன்­னெ­டுத்து வரு­வ­தாக ஒரு­சிலர் கூறு­கின்­றனர். ஆனால் இந்த இரண்டு ஆண்­டு­களில் நாம் பாரிய மாற்­றங்­களை செய்­துள்ளோம். பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கைகளுக்கு நாம் இன்னும் சற்றுப் போரா­ட­வேண்­டிய நிலைமை உள்­ளது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரும் நிலையில் நாமும் அந்த போராட்­டங்­களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டில் எமது நாடு பலமான நிலையை அடையும். அதேபோல் 2025 ஆம் ஆண்டில் பொருளாதார பலம் மிக்க நாடாக இலங்கையை நாம் மாற்றியமைக்க முடியும்.  அதுவரையில் தேசிய அரசாங்கம் பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post