அக்கரைப்பற்றில் அண்மைக்காலமாக வீதி அபிவிருத்தியில் புரட்சி செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் அன்வர்டீன் இடம் எமது செய்தியாளர் மேற்கொண்ட நேர்காணலின் எழுத்து வடிவம்.
யார் நீங்கள்? எப்படி அரசியலுக்குள் வந்தீர்கள் ?
நானும் உங்களைப்போல சாதாரண மனிதன் தான், ஆனால் எல்லோரையும் போல முடங்கிக் கிடக்க முடியாது காரணம்,
எமது சமூகம் அரசியல் அநாதையாக இருந்த பொழுது எமது அபிவிருத்திகள் கொத்தும் குறையுமாக இருந்த பொழுது எமது சமூகத்திற்கான விடியல் இல்லாத போது நான் நேரடி அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டேன், நான் முதலில் சமூகப்பணி செய்யவே எண்ணியிருந்தேன், ஆனால் சமூகப்பணி அரசியலால் தான் முடியும் என்பதால் அதற்குள் பிரவேசித்தேன்.
உங்கள் கட்சிதான் என்ன? ஒருமுறை ராஜிவுடன், பின்னர் பைசர் முஸ்தபாவுடன்? ஏன் இந்த குழப்பம்?
நான் குழம்பவில்லை, நல்லாட்சிதான் எனது கட்சி, மைத்திரியே எனது ஜனாதிபதி, நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிதான், எப்போதும் மாறவில்லை, ராஜித என்னுடைய நல்ல நண்பர், பைசர் முஸ்தபா அரசியல் நண்பர், இதில் குழுப்பம் தேவையில்லை. மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கு.
ஜனாதிபதியுடன் உங்களுக்கு தொடர்பு குறித்து கொஞ்சம் பேசலாமே?
இப்போது இருக்கும் ஜனாதிபதி அன்றைய சுகாதார அமைச்சர், அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் அரசியல் ரீதியிலான பழக்க முடையவர்கள், நான் பைசர் முஸ்தபாவின் தீவிர ஆதரவாளர். பைசர் முஸ்தபாவுக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு வரலாற்று தொடர்பு அந்த தொடர்புதான், அது குறித்து பெரிதாக பேச ஒன்றுமில்லை, எங்கள் கட்சி தலைவர் அவர், தொடர்பை தான் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு வந்தபோது பார்த்திருப்பீர்களே!
வீதி அபிவிருத்தியில் அதிக சரிசனை கொள்ள காரணம் என்ன? கொந்தறாத்து நோக்கமா? அல்லது வேறு அரசியல் காரணங்கள்?
கொந்தறாத்து செய்து பிழைப்பு நடத்த வேண்டு மென்றால் வேறு தொழில்கள் இருக்கிறது, அதனை பலரும் செய்து கொண்டிருக்கின்றனர் அது எனக்கு தேவையில்லை,
வீதி அபிவிருத்தி என்பது ஒரு ஊரின் அபிவிருத்தி, முதலில் கண்களுக்கு தெரிவது வீதிகளே அதை அபிவிது்தி செய்தால் தான் ஊரை அபிவிருத்தி செய்யலாம் கடந்த கால அதிகார வர்க்கத்தினர் வேண்டு மென்று செய்யாதவற்றை நான் செய்கிறேன், இன்னும் செய்வேன்.
உங்கள் கனவு அக்கரைப்பற்றில் மேயராகுவதா? அல்லது மாகாண சபையா?
மக்கள் முடிவு எடுத்துள்ளனர், என்னுடன் அதிகம் பேர் பேசுகின்றனர், நான் மேயராகினால் இந்த ஊருக்கு நல்லம் என்று கூறுகின்றனர், அது இறைவனின் நாட்டம், மாகாண சபை - மாநகர சபை எனக்கு பொருட்டல்ல மக்கள்சேவை தான் எனக்கு முக்கியம்
அரசிய லில் உங்களுக்கு யார் போட்டி குறிப்பாக உங்கள் பிரதேசத்தில்?
என்னுடன் போட்டி போடுமளவுக்கு எனது பிரதேசத்தில் யாருமில்லை, அப்படிப் பார்த்தால் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாதான் எனக்கு போட்டி காரணம் நான் ஜனாதிபதி அமைச்ர்களை கூட்டிவருகின்றேன், அபிவிருத்தி செய்கிறேன். அது அவருக்கு தலையிடிதானே.
உங்கள் இலக்கு? மேயராகுவதா?
எனது ஊருக்கு நான் சேவை செய்ய வேண்டும், மேயராகி அதனை செய்ய முடியும், உண்மையில் இதை மக்களே முடிவு எடுப்பர், காலம் பதில் சொல்லும்.
நேர்காணல் - ஏம்.எம்.எம் மிசாரி
படங்கள் - அன்வர்டீனின் முகநுால் பக்கத்திலிருந்து...