Top News

அதாஉல்லா புரியாமல் உளறுகிறார்; வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யுப்



இப்போது வந்திருப்பது அரசியலமைப்பு முன்மொழிவுகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை மாத்திரமே, இறுதி அறிக்கை, அதன் பின்னரான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும், அதன் பின்னரான பொதுசனை வாக்கெடுப்பு என்கின்ற படிகள் தாண்டப்படல் வேண்டும்  ஆனால் அதாஉல்லா போன்ற மஹிந்த கட்சி தலைவர்கள் 20ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது, வடகிழக்கு இணையப்போகிறது என புரியாமல் உளறிக்கொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யுப் தெரிவித்துள்ளார். 

இப்போது ஒரு சில குறைபுத்தியுள்ளோர் மேற்படி இடைக்கால அறிக்கையே இறுதியானது என்கின்ற போக்கில் கருத்துக்களைக் கூற முண்டாசு கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றார்கள். அத்தோடு இவ்வரசியல் யாப்புருவாக்கத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை இலக்கு வைத்து தாக்குவற்கும் தயாரிகிவருகின்றார்கள். இத்தகைய நயவஞ்சக நாசகாரிகளின் சதிகளுக்குள் சிக்கிவிடாமல், 

வெளியிடப்பட்டிருக்கின்ற 120 பக்க அறிக்கையினை முழுமையாகப் படிப்பதற்கு முயற்சியுங்கள், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து திறந்த மனதோடு கருத்துப்பறிமாற்றம் செய்யுங்கள், இறுதி அறிக்கையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த ராஜதந்திர வழிகளில் முயற்சியுங்கள்.
Previous Post Next Post