Top News

புதிய மாணவர் அனுமதியின் போது முறைகேடு – இரு அதிபர்கள் சிக்கினர்,


கம்பஹா பிரதேச பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரின் பதவி நீக்கப்பட்டுள்ளது.
2016ஆம் வருடத்துக்கான முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே குறித்த பிரதி அதிபரின் வேலை நீக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்வி செயலாளர் காமினி விஜயபந்து தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னரே அவரின் பதவி நீக்கப்பட்டுள்ளதாக கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊழல் மோசடி தொடர்பில் அக்குரஸ்ஸ தெலிஜ்ஜிவெல பிரதேசத்தின் பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் 3ஆம் தரத்திற்கு மாணவி ஒருவரை சேர்க்கும் போது 10,000 பணம் பெற்றமை தொடர்பிலேயே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் மூலம் பணம் பரிமாற்றப்படும் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Previous Post Next Post