அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் இனவழிப்பு நடவடிக்கை நடக்கிறது.
சர்வதேச சமுகம் அராகான் ரோஹிங்கிய முஸ்லிம்கள் முகம் கொடுக்கின்ற மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதில் தோற்றுப் போயுள்ளது. இதற்கு முன் சிரியா விவகாரத்தில் தோற்றுப் போனது போல.
மியன்மாரில் பலநூறு ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொள்ளப் பட்டுள்ளார்கள். பல்லாயிரக் கணக்கானோர் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளார்கள். அந்த நாட்டினால் தனியாக அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளது.
ரோஹிங்கிய முஸ்லிம்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வேண்டி ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் நான் வேண்டுகிறேன்.
இந்த விவகாரம் தான் எனது இரு பக்க சந்திப்புக்கள் அனைத்திலும் பிரதான கருப்பொருளாக இருக்கின்றது.
மியன்மாரிலுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களது அவலத்துக்கு ஒரு முடிவு கட்டா விட்டால் அது மனித வரலாற்றில் ஒரு மாறாத வடுவாக நிலைத்து விடும