Top News

கல்முனை ஸாஹிரா மாணவன் தங்கம் வென்று சாதனை!


எம்.வை.அமீர் 
கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்..சவ்பாத் சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வேதச மட்ட போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்..சவ்பாத் தங்கப் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாநிலத்தில் அமைந்துள்ள “மேர்கு வுஆனா” எனும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் 20 பேர் தங்க பதக்கத்தினையும், 40 வெள்ளிப் பதக்கத்தினையும்,50 வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
இதேவேளை அண்மையில் நடைபெற்ற மற்றுமொரு சர்வதேச போட்டியொன்றில் கொரியா சென்ற அஜாத் என்ற மாணவரும் வெண்கலப் பதக்கம் வென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தான் பங்குபற்றிய முதலாவது சர்வேதச போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று பாடசாலைக்கும்பிரதேசத்திற்கும்நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஏ.எம்.எம்..சவ்பாத் மற்றும் எஸ்.எம்.அஜாத் ஆகியோருக்கு அதிபர் எம்.எஸ்.முஹம்மட் மற்றும்  ஆசிரியர்களும்பாடசாலை சமூகமும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Previous Post Next Post