மியன்மாரில் முஸ்லிம் குழந்தைகளை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அதற்காக தீர்வினை இலங்கையில் உள்ள முஸ்லிம் உறவுகளுக்காக பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்தும் இனப் படுகொலையின் நிறுத்தவேண்டும் என கோரி இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இதன் சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து குழுவின் அமைப்பாளர் ஆர் ரஜீவன் தலைமையில் இன்று (2) இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்டுத்துள்ளனர்..
இதில் 05 அம்ச கோரிக்கையினை வலியூறுத்தி இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
எமது இனத்தின் சரி பாதி எமது முஸ்லிம் மக்களின் இனத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.
சிறுபாண்மையின் இனத்தின் பாராடபட்சம் குழந்தைகளா? இவ்வாறு காணப்படவேண்டுமா?
சமூக நலன் அக்கரையுள்ள பொதுமக்கள் எங்கே?
பர்மாவில் உள்ள முஸ்லிம் மக்களின் உறவினர்கள் இலங்கையில் தானே?
இதற்காக கவனம் உரிய அரசாங்கம் எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இவ் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டனர்