எம்.ரீ. ஹைதர் அலி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முற்றுமுழுதாக காபெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவிருக்கும் காத்தான்குடி தெற்கு எல்லை வீதிக்கான அடிக்கல் நடும் வைபவம் 2017.09.06ஆந்திகதி-புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ் Z.A. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்துகொண்டு இவ்வீதி புணரமைப்புக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சித்திரவேல், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் SMM ஸபி, காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்ப, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் முக்கிய ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி, ஆரயம்பதி ஆகிய இரு நகரங்களுக்கான எல்லை வீதியான இவ்வீதியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதானமான வீதிகளில் ஒன்றாகும்.
இவ்வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
பொதுமக்களின் நன்மைகருதி இவ்வீதியினை புனரமைப்பு செய்து வழங்க வேண்டுமென்ற நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் சுமார் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தற்போது இவ்வீதியானது முற்றுமுழுதாக காபட் வீதியாக புணரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் காத்தான்குடி, ஆரயம்பதி ஆகிய நகரங்களை அடுத்துள்ள ஏனைய பிரதேசங்களுக்கான போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.