Top News

ரோஹிங்கிய முஸ்லிம்கள் ; அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை



ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர மியான்மார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ரக்கின் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கை மற்றும் வன்முறைகள் காரணமாக நான்கு லட்சத்து 22 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேறிமை தொடர்பாகவே மியான்மாரிடம் அமெரிக்கா இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மியான்மாரின் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் முடக்கப்படவேண்டிய நிலை ஏற்படும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்கத்தின் பிரதி செயலாளர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post