Top News

ஆங் சாங் சூகி குப்பற விழுந்தார்; கடு­மை­யான சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்ளார்


மியன்­மாரின் தலைவி ஆங் சாங் சூகி, ராக்கைன் மாநி­லத்தில் நடக்கும் வன்­மு­றை­க­ளையும், ரோஹிங்யா அக­திகள் பிரச்­சி­னை­யையும் கையாளும் விதம் குறித்து கடு­மை­யான சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்ளார்.
செவ்­வா­யன்று ஆற்­றிய ஓர் உரை­யில ஆங் சாங் சூகி தமது நாட்டில் இடம்­பெறும் உரிமை மீறல்­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்தார். ஆனாலும், மியன்மார் இரா­ணு­வத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்­தி­க­ரிப்பு குறித்த குற்­றச்­சாட்­டுகள் குறித்தோ பேச­வில்லை.
அந்த வகையில் ஆங் சாங் சூகியின் நிலைப்­பாடு பெருத்த ஏமாற்­றத்தை அளிப்­ப­தாக பல தலை­வர்­களும் தூது­வர்­களும் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு இலட்சம் ரோஹிங்­யர்கள் பங்­க­ளா­தே­ஷுக்குச் சென்­றுள்­ளனர்.கடந்த மாதம் ராக்கைன் மாநி­லத்தில் உள்ள காவ­ல­ரண்கள் மீது நடத்­தப்­பட்ட கடு­மை­யான தாக்­கு­தலே அண்மைக் காலத்தில் உள்ள அமை­தி­யின்­மைக்கு கார­ண­மாக கூறப்­ப­டு­கி­றது. இதற்கு புதி­தாக உரு­வெ­டுத்­துள்ள ரோஹிங்ய குழு­வான அர்சா எனப்­படும் 'அரக்கான் ரோஹிங்ய சால்­வேஷன் ஆர்மி' தான் காரணம் என கூறப்­பட்­டது.
ஒரு தொடர்ச்­சி­யான இரா­ணுவ அடக்­கு­மு­றையால் அதி­க­ளவில் மக்கள் கொல்­லப்­பட்­டனர். ரோஹிங்­யர்கள் அங்­கி­ருந்து விரட்­டப்­பட்டு, அவர்­களின் கிரா­மங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன என பல குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.
ரோஹிங்ய சிறு­பான்மை மக்கள், பங்­க­ளா­தேஷில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யே­றி­ய­வர்கள் என்று மியன்மார் அரசு கூறு­கி­றது. அவர்­களை பெங்­காலி முஸ்­லிம்கள் என்று அது குறிப்­பி­டு­கி­றது. இந்த விவ­காரம் குறித்த நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய சூகி கூறு­கையில், 
கடந்த செப்­டம்பர் 5ஆம் திகதி முதல் எந்த மோதலோ அல்­லது, வெளி­யேற்றும் நட­வ­டிக்­கையோ இடம்­பெ­ற­வில்லை.
பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் இங்கு தங்­கவே முடி­வெ­டுத்­துள்­ளனர், இதுவே தற்­போ­தைய சூழல், அவ்­வ­ளவு தீவி­ர­மா­னது இல்லை என்­பதை காட்­டு­கி­றது.
ரக்கைன் மாநி­லத்தில் வாழும் முஸ்­லிம்கள் உட்­பட அனைத்து மக்­களின் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்ற அரசு அண்­மைய ஆண்­டு­களில் பல முயற்­சி­களை எடுத்­துள்­ளது.
சரி­பார்ப்பு செயல்­முறை முடிந்த பின்பு அனைத்து அக­தி­களும் தங்கள் இடங்­க­ளுக்குச் செல்ல அனு­மதி அளிக்­கப்­படும்.
பர்­மிய இரா­ணுவம், ராக்கைன் மாநி­லத்தில் உள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களின் அடித்­த­ளத்தை நீக்கும் வகை­யி­லேயே செயல்­ப­டு­வ­தாக கூறு­வ­தோடு, பொது­மக்­களை குறி­வைப்­ப­தாக வரும் குற்­ற­சாட்டை மீண்டும் மீண்டும் மறுக்­கி­றது. சாட்­சி­யங்கள், அக­திகள் மற்றும் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் இதை மறுக்­கின்­றனர்.
தற்­போது நியூயோர்க் நக­ரி­லுள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் பொதுச் சபைக் கூட்டம் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் அதில் உரை­யாற்­றிய பல நாடு­களின் தலை­வர்­களும் மியன்மார் வன்­மு­றை­களை கடு­மை­யாக கண்­டித்­துள்­ளனர்.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சார்பில் உரை­யாற்­றிய அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி மைக் பென்ஸ், மியன்­மாரில் வன்­மு­றை­களை நிறுத்த உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஆங் சாங் சூகி­யுடன், தொலை­பே­சியில் பேசிய அமெ­ரிக்க வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் ரெக்ஸ் டில்­லர்சன், சரி­பார்ப்­பிற்கு பின்பு அக­திகள் நாடு திரும்­பலாம் என்று சூகி கூறி­யுள்­ளதை வர­வேற்­ப­தாக கூறி­யுள்ளார். ஆனால், மனி­தா­பி­மான உத­வி­களை எளி­தாக்­கு­மாறு அவர் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், அதிக பிரச்­ச­ினை­களை உரு­வாக்­கி­வரும் ,மனித உரிமை அத்­து­மீ­றல்கள் குறித்த குற்­ற­சாட்­டுகள் குறித்து பேசு­மாறும் கேட்­டு­கொண்­டுள்­ள­தாக வெளி­யு­ற­வுத்­துறை கூறி­யுள்­ளது.
ஐ.நா சபை கூட்­டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமா­னுவேல் மக்ரோங், "இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­பட வேண்டும். மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­பட வேண்டும். அங்கு, இன சுத்­தி­க­ரிப்பு மூல­மாக நீதியின் ஆட்சி நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளது" என்றார்.
ஐ.நா சபை பொது­செ­ய­லா­ள­ரான ஆண்­டோ­னியோ குட்­டெ­ரிஷும், "இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்" மற்றும், "பல ஆண்­டு­க­ளாக தீர்வு காணப்­ப­டாமல் இருக்கும் ரோஹிங்­யர்­களின் குறை­களை தீர்ப்­பது குறித்த பேச்சை நடத்த வேண்டும்" என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
துருக்கி அதிபர், ரஜப் தையிப் அர்­துகான், சர்­வ­தேச சமூ­கத்தை இந்த நெருக்­கடி குறித்துப் பேச அழைத்­துள்­ள­தோடு, "மியன்­மாரில் நடக்கும் சோகத்தை நிறுத்­தா­விட்டால், மனித இனம், வர­லாற்றில் அடுத்த மிக கடு­மை­யான கறையின் அவ­மா­னத்தில் வாழ­வேண்டி இருக்கும்" என எச்­ச­ரித்­துள்ளார்.
ஐ.நா. மாநாட்டில் உரை­யாற்­றிய நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹாரி, மியன்­மாரில் தற்­போது நடை­பெற்று வரும் வன்­மு­றைகள் பொஸ்­னியா மற்றும் ருவாண்­டாவில் நடை­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­களை ஒத்­தவை எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
ஐரோப்­பிய யூனி­யனின் செய்தித் தொடர்­பாளர் ஒருவர் கூறு­கையில், முன்பு எல்­லை­க­ளுக்கு அப்பால் இருந்த பாதிக்­கப்­பட்ட இடங்­களை, சர்­வ­தேச தூதர்கள் பார்ப்­ப­தற்கு ஆங் சாங் சூசி அழைப்பு விடுத்­துள்­ளது என்­பது "ஒரு­படி முன்­னேற்றம் " ஆகும் என்­கிறார். மேலும் கூறிய அவர், "மியன்மார் அரசு எந்த ஜன­நா­ய­கத்­திற்­காக கடு­மை­யாக போரா­டு­கி­றதோ, அது, இனம், சமூகம் , மதம் ஆகிய எல்­லை­களை கடந்து, மியன்­மாரின் அனைத்து மக்­க­ளுக்கும் செயற்­படும்" என்­பதை நிரூ­பிக்கும் தேவை மியன்மர் தலை­மைக்கு உள்­ளது என்றார்.
இங்­கி­லாந்து பிர­தமர் தெரீசா மேவும், ரக்கேன் மாநி­லத்தில் நடக்கும் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­பட வேண்டும் என்றார். வன்­மு­றைகள் நடக்­கின்­றன என்­கிற பேச்­சுக்கள் உள்­ளதால், மியன்மார் இரா­ணு­வத்­திற்கு பயிற்சி வகுப்­புகள் அளிப்­பதை இங்­கி­லாந்து தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்­ள­தாக கூறி­யுள்ளார்.
ஆங் சாங் சூகியின் பேச்சு குறித்து கருத்து கூறி­யுள்ள ஆம்­னெஸ்டி இண்­டர்­நே­ஷனல், அவரின் பேச்சு, "பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீது குற்றம் சாட்­டு­வ­தா­கவும், உண்­மை­யற்­ற­தா­கவும் இருந்­தது" என்­றுள்­ள­தோடு, இரா­ணுவ அத்­து­மீ­றல்­களை கண்­டு­கொள்­ளாமல், ஆங் சாங் சூசி, "மணலில் தலையை புதைத்­துள்ளார்" என குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.
முன்­ன­தாக, பாது­காப்பு நட­வ­டிக்கை மூலம் மியன்­மாரில் உள்ள ரோஹிங்ய முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­வது, "இன அழிப்­புக்­கான மிகச் சிறந்த எடுத்­துக்­காட்டு போல இருக்­கி­றது" என ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர்  ஹுசைன் தெரி­வித்­தி­ருந்தார்.
ராகைன் மாகாணத்தில் "மோசமான இராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மியன்மார் அரசிடம் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் வலியுறுத்தியிருந்தார்.
பல ஆண்டுகள் இராணுவ சர்வாதிகாரத்தில் இருந்த மியான்மரை, அதில் இருந்து வெளிகொண்டுவர போராடியதற்காக, 1990 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூசி , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அவர் இன்னும் மியன்மாரில் மிகவும் பிரபலமானவராகவே உள்ளார். எனினும் தற்போது அவருக்கு எதிராக பலத்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது நற்பெயரையும் இழந்து வருகிறார் என்பதே நிதர்சனமாகும். 
Previous Post Next Post