பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவான “கோப் குழுவில்” அங்கம் வகிக்கும் காலப்பகுதியில் தம்மால் எந்த தரப்பினருக்கும் தகவல் வழங்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரோஸி சேனாநாயக்கவினால் கோப் குழுவில் அங்கம் வகிக்கும் காலத்தில் அவரது மகன் மூலம் அர்ஜுன் ஆலோசியஸுக்கு தகவல்கள் வழங்கியதாக வெளியான குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பான விசாரணையின் போது தமது மகனின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் அது தொடர்பான எந்த தரவுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் என் மீதும் எனது மகன் மீதும் சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த அரசியலை முன்னெடுத்த தம்மீது சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.