கிழக்கு மாகாணத்திற்கு கிழக்கு முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் அப்போதுதான் முஸ்லிம்களின் அபிலாசைகள் வெற்றி கொள்ளப்படும் என்ற அரசியல் போராளிகளின் கோசத்திற்கு கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி அரசினால் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சு பதவி வழங்க்ப்பட்டது, முதலமைச்சு மாத்திரமின்றி மாகாண அமைச்சு மற்றும் ஆளம்கட்சி பிரதிநிதித்துவம் என அதிகாரங்கள் இருந்தது, சாதித்தது தான் என்ன? இது விமர்சனம் அல்ல வெறும் கேள்விகள்தான்? விடைகள் இருப்பின் மகிழ்வுதான்
தேர்தல் வருகிறது, வாக்களிக்கின்றோம், பின்னர் தொழிலுக்காக அலைகிறோம், கொந்தராத்துகளுக்காய் வரிந்து கட்டுகிறோம், டிரான்ஸ்ருக்காய் வலைவிரிக்கிறோம் அற்ப அபிவிருத்திகளை பெரிதாய் எண்ணுகிறோம், இவ்வளவும் தானா கிழக்கு முஸ்லிம்களுக்கு தேவை,
நமது கலாச்சாரம் பாரம்பரியம், வாழிவியல் முறை, நமக்கான அடையாளம், நமது எதிர்கால சந்ததிகளுக்கான சிந்தனை, நமது நிலங்களை காப்பதற்கான போராட்டம், அடக்குறைகளுக்கு எதிரான குரல்கள் இவைகள் குறித்து கவனம் எடுக்கப்பட்டதா? அல்லது நீங்கள்தான் இதுகுறித்து கவனமெடுத்தீர்களா? இல்லை இவைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும்தான் பிறகு இல்லை, மீண்டும் மீண்டும் கோசங்களுடன் வாழாமல் நமது அடையாளங்களுக்காக நமது இறைபணிக்காக, நமக்காக வாழுவோம் அதற்கான தலைவர்களை தலைமுறைகளை உருவாக்குவோம்? இந்த பதிவிற்கு கட்டாயமயம் கருத்துப்பதிவிடுங்கள்.