Top News

அக்கரைபற்றிலிருந்து தேசிய காங்கிரசின் மாகாண சபை வேட்பாளராக சபீஸ்; மகிழ்ச்சி



பளீழ் நஜா

தேசிய காங்கிரசில் இருந்து இதுவரை அக்கரைப்பற்றிற்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கிடைக்கப்பெறவில்லை என்பது அக்கரைப்பற்று மக்களின் கவலையாகும் அக்கரைப்பற்று மக்கள் வாக்களித்து சம்மாந்துறை அமீரையும், நிந்தவூர் ஆரிப் சம்சுதீனையும் அட்டாளைச்சேனை உதுமாலெவ்வையையும் மாகாண சபைக்கு அனுப்பினர் இன்று அக்கரைப்பற்றிற்கு ஏற்பட்டு தேசிய காங்கிரசின் அரசியல் வெற்றிடம் அக்கரைப்ற்று மகனை அனுப்பியிருந்தால் நடந்திருக்காது, இனி அது நடைபெறவும் மாட்டாது.

இது ஒருபுறமிருக்க மாகாண சபை உறுப்புருமை பெற்றுச் சென்றவர்களும் விலகினர், இன்னும் சிலர் கொப்புதாவினர் சிலர் தாவ காத்திருக்கின்றனர், அப்படியொரு நிலை மீள நடைபெறாதிருக்க தேசிய காங்கிரஸ் தலைவர் ஒரு வியூகம் வகுத்துள்ளதாக தெரியவருகிறது. அதுதான் ஆரம்பகால போராளி சபீசை எதிர்வரும் மாகாண சபைக்கு அனுப்புதல் சகலதுறையில் பாண்டித்தியம் பெற்றுள்ள சபீசை அனுப்புவதில் எவ்வித சிக்கலுமில்லை, என்ற எண்ணமும் இருக்கிறது. இப்படி நடந்தால் உள்ளுராட்சி தேர்தலில் சட்டத்தரணி பஹீஜை மேயராகவும், அஸ்மி ஏ.கபூரை பிரதி மேயராகவும் மாற்றுவார் என நம்ப படுகிறது. இல்லையேல் பஹீஜை மாகாணசபை அனுப்பினால் சபீசை மேயராகவும் ஆக்குவார் எனவும் பேசப்படுகிறது. 
Previous Post Next Post