03 வருடங்கள் கடமையாற்ற வாய்ப்பிருந்தும் 02 வருட காலத்திற்குள்ளான இடமாற்றம் சட்டவிரோத மண் அகழ்வு தொழிலை மீண்டும் செய்வதற்கு எத்தனிக்கும் வேலையாக இருக்கலாம் என அம்பாறை தீகவாவி ரஜமகாவிகாரையின் விகராதிபதி தெரிவித்துள்ளார்.
பொறியியலாளர் முகம்மட் பாரிஸ் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அம்பாறை தீகவாவி ரஜமகாவிகாரையின் விகராதிபதி ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்பியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆற்று மணல், கிறவல் மண், களிமண் போன்ற மண் அகழ்வு தொழில் ஒரு கட்டுப்பாடின்றி சட்டவிரோதமாகவும் களவாகவும், உத்தரவு பத்திரம் பெற்ற இடத்தை விட்டு வேறு இடங்களில் மண் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் ஊடாக சூழல் சுற்றாடலுக்கு மிகவும் மேசமான பாதிப்பான நடவடிக்கையில் பலர் கடந்த ஆட்சியின் போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் இதன் பின்னணியில் பல அரசியல் வாதிகளும் செல்வந்தர்களும் பக்க பலமாக மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நாட்டில் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனதிபதி சூழல் சுற்றாடல், மண் அகழ்வுக்கான அமைச்சுப் பொறுப்பை தனதாக்கி மண் அகழ்வு நடவடிக்கையில் புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய சந்தர்ப்பத்தை சாதகமாக கருதி புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான பிராந்திய பொறியியலாளராக எம்.ஆர்.முகம்மட் பாரிஸ் நியமிக்கப்பட்டார்.
தற்துணிவான பல அதிகார நடவடிக்கைகளின் ஊடாக பலரின் பலவிதமான எதிர்புகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டும் மண் அகழும் தொழிலில் ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டை ஏற்படுத்தி சூழல் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுத்து நிறுத்தியதுடன் அம்பாறை மாவட்ட மக்களின் உண்மையான மண் தேவையினை இணங்கண்டு தட்டுபாடு இன்றி விநியோகம் செய்வதற்கான பொறி முறையை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் இவர், பலரின் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது. இருந்தும் இவரின் துணிச்சலான அதிரடி நடவடிக்கைகளை சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள், உயர் அதிகாரிகள் என பலரும் இவரை பாராட்டிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் திடீர் இடமாற்றம் ஒன்று வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இன்னும் 03 வருடங்கள் இப்பகுதியில் கடமையாற்ற வேண்டிய வாய்ப்பிருந்தும் 02 வருட கால கடமைக்குள் இவர் இடமாற்றம் பெற்றுள்ளது மண் அகழ்வு தொழிலை மீண்டும் சட்டவிரோதமாகச் செய்வதற்கு எத்தனிக்கும் கூட்டத்தின் வேலையாக இருக்கும் என சந்தேகம் அடைகின்றோம்.
சூழல் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களே உங்களுடைய சூழல் சுற்றாடல் பாதுகாப்பதற்கான எண்ணத்தை ஈடேட்டுவதற்கு சூழல் சுற்றாடலையும் அம்பாறை மாவட்ட மண் வழத்தினையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறான இடமாற்றங்களை ரத்து செய்து இலங்கை வாழ் மக்களின் வளத்தை பாதுகாக்குமாறு தயவன்புடன் கோருகின்றோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.