பௌத்த மதம் அழிவடையக் கூடும்; அபயாராமயவின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரர்

NEWS


அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் இனமும், பௌத்த மதமும் அழிவடையக் கூடும் என நாரஹென்பிட்டி அபயாராமயவின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் நாரஹென்பிட்டி அபயராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்தால் பௌத்த மதமும் இனமும் அழிவடைந்து விடும்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பௌத்த பிக்குகளை காவியுடை தரித்தோர், சோற்றுக்காக குரல் கொடுப்போர் என மிகவும் இழிவாக பேசி வருகின்றனர்.
இந்த அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகும். மக்களின் கண்களில் மண்ணைத் தூவி அரசாங்கம் தனக்குத் தேவையானவற்றை செய்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top