Top News

கணவன் - மனைவி பிரச்சினைக்கு இன்று முக்கிய காரணம் பேஸ்புக் - பரபரப்பு தகவல்




இலங்­கையில் நிகழும் விவா­க­ரத்­து­க­ளுக்கு, வீட்டு வன்­மு­றை­களும், கணவன் -மனை­வியின் தவ­றான காதல் தொடர்­பு­களும் பிர­தான கார­ண­மாக இருப்­ப­தாக சட்­டத்­துறை வட்­டா­ரத்தை சேர்ந்தோர் தெரி­வித்­துள்­ளனர்.
பொரு­ளா­தாரப் பிரச்­சினை, மது அருந்­துதல், வர­தட்­சணை, மரு­ம­கள்-­ - மா­மியார் சண்டை போன்ற பிரச்­சி­னை­களும் இதற்கு கார­ண­மாக இருப்­பது போன்று சமூக வலைத்­த­ளங்கள், கைய­டக்க தொலை­பே­சிகள் ஆகி­ய­வற்றில் நடை­பெறும் கருத்துப் பர­வ­லாக்­கமும் இதற்கு சாத­க­மாக அமை­வ­தாக கூறு­கின்றார் இலங்கை சட்ட உத­விகள் ஆணை­ய­கத்தை சேர்ந்த சட்­டத்­த­ரணி சஜி­வனி அபே­யகோன்.
"இதன் மூலம் பிற­ரோடு தொடர்பு ஏற்­ப­டுத்­துதல், பிறரை அறிய வருதல், தொடர்­பு­களை பலப்­ப­டுத்தும் வசதி ஆகி­யவை எளி­தா­கி­விட்­டது. இதனால், ஆண் - பெண் இரு தரப்பும் கள்ளத் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள இவை சாத­க­மாக அமை­கின்­றன. அதுவே குடும்ப அமை­திக்கு பாதிப்­பையும் தாக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன" என்றும் அவர் தெரி­விக்­கின்றார்.
சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக படங்­களை பரி­மாறிக் கொள்­ளுதல் மற்றும் இணைய அரட்டை (chat) மூலம் தவ­றான உற­வு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வதை தங்­க­ளிடம் சட்ட உத­வி­களை நாடி வரு­வது மூலம் அறிய முடி­வ­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.
கைய­டக்க செல்­பே­சிக்கு வரு­கின்ற, அழைத்து பின்னர் துண்­டிக்­கப்­படும் அழைப்­புகள் (மிஸ்ட் கோல்) மூலமும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி இணை­யத்தில் ஆபாச வீடி­யோக்கள் பதி­வேற்­றப்­ப­டு­கின்­றன என்றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
இலங்கை சமூ­கத்தில் குடும்ப பொரு­ளா­தார பலம் கண­வ­னி­டமே தங்­கி­யி­ருப்­பதால், பெண்கள் துன்­பங்­களை சகித்துக் கொண்டு பொறு­மை­யுடன் இருப்­பதால் முறைப்­பாடு செய்ய முன்வரு­வ­தில்லை. சிலர் விவா­க­ரத்­துக்கு செல்­லாமல் பரா­ம­ரிப்பு பணத்தை பெற்று குடும்­பத்தை நடத்திச் செல்­கின்­றார்கள்.
எப்­படி இருப்­பினும், சட்­டத்தின் முன் கொண்டு வரப்­படும் விவா­க­ரத்து வழக்­கு­களில் கணவன் - மனை­வியை பிரிக்­காமல் தீர்க்க முயற்­சிகள் எடுக்­கப்­படும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரச்சினை உக்கிரமடையும்போது அதனை தீர்க்க முடியாமல் போகின்றது" என்றும் சட்ட உதவிகள் ஆணையகத்தை சேர்ந்த சட்டத்தரணி சஜிவனி அபேயகோன் குறிப்பிடுகிறார்.
Previous Post Next Post