சப்கரமுவ மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று(26ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இதனை முன்னிட்டு மாகாண சபையின் கடைசி அமர்வு இன்று காலை பத்து மணியளவில் ரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண சபை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் போது இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதன் காரணமாக ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது.
அதன் பின்னர் செப்டம்பர் 26ஆம் திகதி மாகாண சபையின் முதலமைச்சராக மஹிபால ஹேரத் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
தற்போதைய நிலையில் மாகாண சபையில் ஐ.தே.க. 14 உறுப்பினர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.