பங்ளாதேஷின் கொக்ஸ் பஸாருக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ள ரோஹிங்யர்கள் மீது நிகழ்ந்த பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியினையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான முகவரகத் தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையிலிருந்து தப்பி வந்த ரோஹிங்ய அகதிகள் இராணுவத்தினர் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது வன்புணர்வில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டியதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வில்லியம் லாஸி ஸ்விங் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மியன்மார் அரசாங்கம், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினைச் சேர்ந்த வைத்தியர்கள் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பாலியல் வன்கொடுமைகளுக்குட்படுத்தப்பட்ட டசின் கணக்கான ரோஹிங்யா பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைதவிட அதிகம் என முகவரக அறிக்கையொன்று தெரிவின்றது.
ஸ்திரமான சூழல் தற்போது காணப்பட்டபோதிலும் இந்த அதிர்ச்சிதரும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அறிக்கையிடப்படவில்லை என ஸ்விங் தெரிவித்தார்.
கடந்த மாதம் மாத்திரம் 160,000 ரோஹிங்ய பெண்களும் இளம் சிறுமிகளும் பங்களாதேஷை வந்தடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டள்ளது.
அல்-ஜெஸீராவிடம் பேசிய இரு சகோதரிகள் மியன்மார் படையினரால் தாம் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். 'இராணுவத்தினர் எம்மை சித்திரவதை செய்தனர்', என தெரிவித்த 25 வயதான மினாரா, 'எமது பெற்றோரை அவர்கள் கொன்று விட்டனர். எங்களை காட்டுக்குள் கொண்டு சென்றனர். எங்களை தரையில் தள்ளிவிட்டனர்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது சகோதரியான 22 வயதான அஸீஸா இரு ஆண்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு சுயநினைவை இழந்தார்.
ஏனைய அகதிகளால் காப்பற்றப்பட்ட இவ்விரு சகோதரிகளும் பங்களாதேஷுக்கு வருவதற்காக ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்யப்பட்டனர்.
ஏனைய அகதிகளால் காப்பற்றப்பட்ட இவ்விரு சகோதரிகளும் பங்களாதேஷுக்கு வருவதற்காக ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்யப்பட்டனர்.