யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருதில் 3 நாள் தொடர் கடை அடைப்பும், ஹர்த்தால் அனுஷ்டிப்பும், நோன்பு நோற்றலும், பொதுக் கூட்டமும்
~~~~~~~~~~~~~~~~~~~~
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளாளும் அங்கீகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், அதனை வெற்றிகொள்ளுமுகமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றினைந்து நேற்றிரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டது
* எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு கடையடைப்பு
* வயது வந்த அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுவது
* உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க நேற்று இரவு இடம்பெற்ற" அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.