கல்முனை மாநகரை 4 உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் இன்று 14.10.2017 -3.00 மணியளவில் கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கல்முனை மாநகரம் நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரம சிங்க அதனை அமுல்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி அமைச்சருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்ததுடன் அதன் மேலதிக தகவல்கள் அம்பாரை அரசாங்க அதிபர் மூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான பைஷர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சட்டத்தரனி நிசாம் காரியப்பர் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.