Top News

முன்னாள் கிழக்கு மாகாண மு.கா உறுப்பினருக்கு இணைப்பு செயலாளர் நியமனம் #Anver

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிம் கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரிடம் 2017.10.03 - செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


Previous Post Next Post