Top News

செல்வந்த நாடுகளின் ஆய்வு கூடமான ஆப்ரிக்கா பற்றி பலரும் அறியாத திகைக்க வைக்கும் உண்மைகள்



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஆதி மனிதன் பிறந்த இடம் என புகழப்படும் இடம் ஆப்ரிக்கா. இயற்கை அன்னையாக கருதப்படும் காடுகளை தன்னுள் பெருமளவு கொண்டிருக்கும் கண்டம். இங்கு தான் வெளியுலகம் அறியாத எண்ணிலடங்காத பழங்குடி மக்கள் இன்றளவும் இயற்கையை ஆராவாரமாக கொண்டாடி மகிழ்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அடர்ந்த மலை காடுகள் கொண்டிருக்கும் ஆப்ரிக்காவில் இன்றளவும் மனிதனின் கால்தடம் பதியாத இடங்கள் ஏராளம் உள்ளன. அவதாரிலும் நாம் கண்டிராத பல அவதார விலங்குகள், பூச்சிகள் இங்கிருக்கும் மலை காடுகளில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறது. இதே ஆப்ரிக்காவை தான் உலகின் வளர்ந்த நாடுகள் லேப் ரெட் (Lab Rat) போல பயன்படுத்தி, பல வைரஸ்களை பரப்பி பரிசோதனை செய்து வருகிறது. எண்ணற்ற சோகங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆப்ரிக்கா பற்றி பலரும் அறிந்திராத சில வியக்க வைக்கும், திகைக்க வைக்கும் உண்மைகள்...
#1 ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் வாழ்ந்து வரும் சான் மக்கள், இன்றும் 44,000 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கருவிகளை தான் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறார்கள். இவை அக்காலத்து குகை வாழ் மக்கள் பயன்படுத்திய கருவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
#2 நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான ஆப்ரிக்க யானைகளுக்கும், நிலத்தில் வாழும் உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கிக்கும் ஆப்ரிக்கா தான் தாய்வீடு. மற்றும் ஆப்ரிக்காவின்மிகவும் பயங்கரமான விலங்காக காணப்படுவது நீர்யானை ஆகும்.
#3 ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கான தண்ணீரை எடுத்து வர தினமும் ஆறு கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை வெறும் கால்களில் கடந்து வந்து சேமித்து எடுத்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களில் ஆப்ரிக்கா முதன்மை இடத்தை பிடித்துள்ளது.
#4 1525 முதல் 1866 வரை இக்காலத்திற்கு உட்பட்ட முன்னூற்று நாற்பத்தியோரு ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1.8 மில்லியன் பேர் பயணத்தின் இடையிலேயே இறந்துவிட்டார்கள்.
#5 ஆப்ரிக்காவில் வாழ்ந்து வரும் ஐந்து முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 41% பேர் குழந்தை தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். மேலும், மிகவும் பின்தங்கியிருக்கும் இடமாக கருதப்படும் ஆப்ரிக்காவில் நூறு மில்லியன் ஆக்டிவ் ஃபேஸ்புக் பயனாளிகள் இருக்கிறார்கள்.
#6 யானைகளுக்கு பெயர்போன பகுதி ஆப்ரிக்கா. அதிலும், உலக யானைகளுடன் ஒப்பிடும் போது ஆப்ரிக்க யானைகளின் தரம் மிகவும் உயர்ந்ததாக உலக சந்தையில் காணப்படுகிறது. தந்தம் மற்றும் இதர விஷயங்களுக்காக தினமும் 96 யானைகள் ஆப்ரிக்காவில் கொல்லப்படுகின்றன.
#7 மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த டகோன் (Dogon) எனும் இனத்தை சேர்ந்த திருமணமான பெண்கள், வெளிப்படையாகவே வேறு ஆண்களுடன் உறவில் ஈடுபடுவதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை அந்த பெண்களின் தாயார் ஊக்குவிக்கிறார்கள்.
#8 தென்னாப்பிரிக்காவை வானவில் தேசம் என்றும் அழைக்கிறார்கள். இதற்கு காரணம், தென்னாப்பிரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழிகளின் எண்ணிக்கை ஆகும். இங்கே 11 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக விளங்குகின்றன.
#9 தென்னாப்பிரிக்காவில் இருக்கும் விட்வாட்டர்ஸ்ரான்ட் (Witwatersrand) எனும் இடத்தில் இருந்து தான் உலகில் இருக்கும் பாதி அளவிலான தங்கம் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
#10 பெரும் காடுகள் கொண்டிருக்கும் ஆப்ரிக்காவில், காட்டின் முக்கிய விலங்கான புலி இல்லை. புலி ஆசியாவில் மட்டும் தான் இருக்கிறது என நம்பப்பட்டு வருகிறது.
#11 பிரான்ஸை விட, பிரான்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதி ஆப்ரிக்கா. மற்றும் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து மட்டுமே, சீனாவில் ஒருந்து ஆப்ரிக்காவிற்கு ஒரு கோடி சீனர்கள் முற்றிலுமாக இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
#12 உலகளவில் தடகள போட்டியான ஓட்டப்பந்தயத்தின் சிறந்த வீரர்கள் உருவாகும் நாடு கென்யாவில் இருக்கும் கலஞ்சின்ஸ் என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் ஆவார்கள்.
#13 ஆப்ரிக்காவின் தன்சானியா எனும் பகுதியில் உலகில் அதிகப்படியான அல்பினீசம் (Albinism) தாக்கம் இருக்கிறது. இது உடல் நிறம் வெளிறிப் போகும் தன்மையை ஏற்படுத்தும் தாக்கமாகும்.
#14 உலகிலேயே நிலத்தில் இருந்து முற்றிலும் ஆயிரம் மீட்டர்களுக்கும் மேலான உயரத்தில் மேலோங்கி இருக்கும் ஒரே நாடு ஆப்ரிக்காவின் லெசோதோ (Lesotho) ஆகும்.
#15 ஆப்ரிக்காவில் இருக்கும் கானா எஎனும் இடத்தில் ஏற்கனவே பயன்படுத்திய உள்ளாடைகளை இரண்டாம் விற்பனை செய்யும் முறை இருந்து வந்தது. இந்த வழக்கத்தால் பல நோய் தொற்றுகள் ஏற்படும் என்பதால் சுகாதார பாதுகாப்பு கருதி கடந்த 2010ம் ஆண்டு கானா அரசு இதற்கு தடை விதித்தது.
#16 ஆப்ரிக்காவின் ஸ்வாசிலாந்து (Swaziland) எனும் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களில் நான்கில் ஒரு அடல்ட் நபர்களுக்கு உயிர் கொள்ளும் பால்வினை நோய் தொற்றான எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது.
#17 மொசாம்பிக் (Mozambique) எனும் ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு நாட்டின் தேசிய கொடியில் மிக சாதாரணமாக எ.கே. 47-னின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
#18 உலக மொழிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆப்ரிக்கா கண்டத்தில் இருக்கும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவில் உயிர்வாழ்ந்து வரும் மக்களில் 37% பேர் படிப்பறிவு அற்றவர்கள்.
#19 1986ல் கேமரூனில் இருந்த ஒரு எரிமலை சிதறலின் போது வெளியான CO2 வாயுவின் தாக்கத்தால் ஒரே நிமிடத்தில் 1,746 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
#20 மில்லியன் டன் எடை கணக்கில் ஆண்டுதோறும் எலக்ட்ரானிக் கழிவுகள் ஆப்ரிக்காவில் கொட்டப்படுகின்றன. இதனால், உலக எலக்ட்ரானிக் கழிவுகளின் குடோனாக மாறி வருகிறது ஆப்ரிக்கா.
#21 ஒவ்வொரு ஆண்டும் ஆப்ரிக்காவில் நாற்பது இலட்சம் ஹெக்டர்கள் நிலப்பரப்பு அளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஹெக்டர் என்பது 2.47 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பாகும்.
#22 புதிய நீர் பரப்பு உருவாகி வருவதால் ஆப்ரிக்கா இரண்டாக பிரிய துவங்கியுள்ளது. கடந்த 2005ல் பத்தே நாட்களில் 26 அடி அகலமும், 60 கிலோமீட்டர் நீளமும் கொண்ட அளவில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.
#23 பண்டையக் காலத்தில் இருந்து ஒரு கண்டத்தின் சிறிய பகுதி இந்தியாவில் இருந்து மடகாஸ்கர் நடுவே இருக்கிறது எனவும், இதை மொரிசியஸ் தீவில் இந்தாண்டு கண்டுபிடித்தனர் என்றும் கூறப்படுகிறது.
Previous Post Next Post