எம்.எஸ்.எம்.ஸாகிர்
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஸாஹிரா பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்கும் நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை சாஹிராவைப் பொறுப்பேற்று, கல்லூரியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவரும் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், மௌலவி யு.எல்.எம்.முபாறக் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், சாய்ந்தமருது கல்முனைக்குடி பிரதேச பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், விடுதி மாணவர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் என். ஆரிப் உள்ளிட்ட பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சபைச் செயலாளர் ஏ.பி.ஜவ்பர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி ஆசிரியர் மௌலவி ஏ.எம்.அன்ஸார் மஹ்ரிப் தொழுகை நடாத்தியதுடன், மஸ்ஜிதுல் ஸாஹிரா பள்ளிவாசல் புனர்நிர்மாண வேலைகளுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.