Top News

யாழ் முஸ்லீம்கள் வேறு எங்கும் சலுகை பெற்றிருந்தால் யாழில் வீடு கிடையாது



பாறுக் ஷிஹான்

நாட்டில் எந்த மாவட்டத்திலும் சலுகை பெற்றிருக்காத மற்றும் குடும்பத்தில் ஒருவரேனும் யாழ் மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்திருந்தால் மட்டுமே அவர்களின் குடும்பத்துக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கும் யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்ட அமுலாக்க விடயத்தில் நாம் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியே வருகின்றோம். இதனை எதிர்காலத்திலும் தொடர்ந்து அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 யாழ் முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பிலான விஷேட சந்திப்பு மாவட்ட செயலகத்தில்இடம்பெற்ற பின்னர்  யாழ் முஸ்லிம் மக்களினால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குறித்த சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சின் 'நீண்டகால அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி' ஊடாக யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களையும் இவ்வாண்டுக்குள் முழுமையாக முஸ்லிம் மக்கள் பயனடையும் வகையில் அமுலாக்குவதனையும் 
யாழ்ப்பாணம் அராலிவீதி பறச்சேறிவயல் காணிகளில் வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்காக விண்ணப்பித்திருக்கின்ற குடும்பங்களுக்கு குறித்த காணிகளில் வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பரிந்துரை செய்தல்
யாழ்ப்பாணத்தில் காணிகளையுடைய மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ள குடும்பங்கள் இங்கு நிரந்தரமாக மீள்குடியேறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு துரிதமாக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்தல்.
தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றவேளையில் அவற்றை துரிதமாக நிர்மானிப்பதற்கு ஏற்ற விதமாக உதவிகள் வழங்கப்படுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன .


இவைதொடர்பில் கருத்து வெளியிட்ட மாவட்டச் செயலாளர் இ யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்ட அமுலாக்கத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதேவேளை இங்கே பதிவுகளை மேற்கொண்ட குடும்பங்களில் குறைந்த பட்சம் ஒருவரேனும் மாவட்டத்தில் நிரந்தமாக வசிக்க வேண்டும். அதேவேளை வீட்டுத் திட்டம் தொடர்பில் நாட்டின் எப்பகுதியிலும் சலுகை பெற்றிருத்தல் ஆகாது.


ஒருவேளை நாட்டின் ஏனைய பகுதியில் குடும்பத் தலைவரின் பையரில் வீட்டுத்திட்டம் பெற்றிருப்பின் அதனை பிள்ளைகளிற்கு வழங்கினால் அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதேநேரம் இங்கு பதிவினை மேற்கொண்டவர்களில் 84 குடும்பங்களின் தரவுகள் புத்தளம் மாவட்டத்தில் பரீட்சிக்கப்பட்டவேளையில் 51 குடும்பங்களின் விபரமே இதுவரை சிபார்சுடன் மீளக் கிடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 228 முஸ்லிம் குடும்பங்களுக்கு கடந்த 5 வருடகாலப் பகுதிக்குள் வீட்டுத்திட்டங்கள் அல்லது வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் விஷேட மீள்குடியேற்ற செயலணியினால் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதற்கென பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது சுமார் 30இ000ற்கும் அதிகமான வீடுகள் யாழ்மாவட்டத்திற்கு அவசியப்படும் சூழலில் நாம் 200 வீடுகளையும் முழுமையாக அமுல்படுத்தவே விரும்புகின்றோம். அந்தவகையில் சொந்தக்காணியுள்ள மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்தோர் 255 குடும்பங்களாகும். அதிலே 169 குடும்பங்கள் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள்இ ஏனைய 86 குடும்பங்கள் காணியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. எனவே இவ்வாறு காணியுள்ள 255 குடும்பங்களையும் அடிப்படைப் பயனாளிகளாக வைத்து 200 வீட்டுத்திட்டத்தையும் முழுமையாக அமுலாக்கவே நாம் விரும்புகின்றோம்.

அதேபோன்று பறைச்சேறிவயல் காணிகள் தொடர்பில் ஏற்கெனவே கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அக்காணியில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக முறைப்படி விண்ணப்பங்களை விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திடம் வழங்கி அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


இவற்றின் அடிப்படையில் மீள்குடியேறுகின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுத்திட்டத்தினை பெற்றுத்தர எம்மாலான முழுமையான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் சமூக ரீதியான சரியான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் நீங்களும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். என்றார். 


மேற்படி சந்திப்பில் யாழ் மாவட்டச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும்இ யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post