Top News

நேர்காணல்

எந்தச் செய்திக் கதைக்காகவும் ஒரு செய்தியாளன் பல நேர்காணல்களைச் செய்யவேண்டியேற்படலாம். ஆனால் சில முக்கிய பிரமுகர்கள் பிரபலமான சினிமா நட்சத்திரங்களைத் தவிர ஏனையவர்களின் விடைகள் சொல்லுக்குச் சொல்லாக பிரசுரிக்கப்படுவதில்லை.
நேர்காணல் வகைகள்

1. வீதியில் நிற்கும் மனிதன் (Man on the street)
ஒரு செய்தி தெரிவிப்பவர் (Reporter) இதற்காக முன்கூட்டியே நேர நியமிப்பு செய்யத் தேவையில்லை. நிலைமையுடன் சம்பந்தப்பட்ட எந்த சாதாரண மனிதனையம் நீங்கள் நேர்காணல் செய்யமுடியும். உதாரணம் :- பெற்றோல்விலை உயர்வு காரணமாக துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்தும் ஒருவர்.
இச்சந்தர்ப்பங்களில் பொதுசனத்தொடர்பு பற்றிய எந்தத் தடைகளும் இல்லை. ஆனால் நீங்கள் யாரை நேர்காணல் செய்யப்போகிறீர்களோ அவருடைய நம்பிக்கையை நீங்கள் வெல்லவேண்டும்.
2. சந்தர்ப்பச்சூழலில் பெறப்பட்ட நேர்காணல் (Casual interview)

ஒரு செய்திப் பெறுமதி மிக்க ஒருவரை சந்தர்ப்பவசமாக நீங்கள் சந்திக்கிறபொழுது அவரை நீங்கள் நேர்காணல் செய்யமுடியும்.
உதாரணம் :- நீங்கள் ஒரு முக்கியஸ்தரை பஸ் வண்டியில், புகையிரதத்தில், விமானத்தில் உங்கள் சகபயணியாகச் சந்திக்க நேரிடலாம். அவரைப்பற்றிய ஓரளவான அறிவு உங்களுக்கு இருக்குமானால் அல்லது அவருடன் பேசவுள்ள விடயம் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் நேர்காணல் செய்யலாம். இந்தவகையான நேர்காணலை சந்தர்ப்பச் சூழலில் பெறப்பட்ட நேர்காணல் எனலாம்.
3. செய்தி நேர்காணல் (News Interview)
உங்கள் செய்திப்பத்திரிகையில் மட்டுமே பிரசுரிக்கப்படுகின்ற ஒரு தனித்துவ விசேடம் மிக்க செய்தியொன்றுக்காக இவ்வகையான நேர்காணல் செய்யப்படுகிறது. இவ்வகை நேர்காணல் சமகால விவகாரம் ஒன்று தொடர்பாக கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறது.
பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் (PRO) மூலமாக இவ்வகையான நேர்காணல் ஒழுங்கு செய்யப்படுகிறது. சுருக்கெழுத்து முறையிலோ ஒலிப்பதிவு முறையிலோ இவ்வகை நேர்காணல் பேணப்படவேண்டும். துல்லியத் தன்மையுடன் நேர்காணலைப் பிரசுரிப்பதற்கு மட்டுமல்ல, கூறப்பட்டவை மறுக்கப்பட்டாலோ, வேறு சவால்கள் விடப்பட்டாலோ எவ்வகையிலேனும் பதிவைப் பேணுதல் உதவியாக அமையும். நன்கு தயார் செய்யப்பட்ட 30நிமிட நேர்காணல்மூலம் ஒரு 1000 சொற்கள் அடங்கிய செய்திக்கதையைத் தயாரித்துவிடலாம்.
4. ஆர்வமூட்டத்தக்க ஆளுமையும் குணவியல்பும் கொண்டவருடனான நேர்காணல் (Personality interview)
செய்தி நேர்காணல் போல, ஆர்வமூட்டத்தக்க ஆளுமையும் குணவியல்பும் கொண்டவருடனான நேர்காணலும் முக்கியத்துவம் பெறுகிறது. செய்தி நேர்காணலில் நேர்காணப்படுபவரின் அபிப்பிராயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவ்வகை நேர்காணலுக்கு ஆர்வமூட்டத்தக்க ஆளுமையும் குணவியல்பும் கொண்ட ஒரு நபர் நேர்காணல் செய்பவரால் கைப்பற்றப்படுகிறார்.
5. தொலைபேசி நேர்காணல் (Telephone Interview)
நேர்காணலின் அடிப்படை நுட்பங்களை நீங்கள் அறிந்துகொண்ட பின்னர் பெரும்பாலான நேர்காணல்களை தொலைபேசிக்கு ஊடாகவே நீங்கள் மேற்கொள்ள முடியும். பிரயாணத்துக்கான செலவையும் நேரத்தையும் மீதப்படுத்த அது உதவும். ஆனால் நேர்காணல் செய்யப்படுபவர் தேவையில்லாமல் தனது கருத்துக்களைத் தற்காத்துக்கொள்வதற்காக ஆயத்தமாக இருக்க வேண்டியிருக்கும்.
உங்கள் வினாக்களுடன் நீங்கள் நன்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். நேர்காணப்படுபவர் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள் உட்பட்டுவிடுவதைத் தவிர்க்கும் வகையில் நேர்காணல் சுருக்கமானதாகவும் தொடர்ச்சியான பரிமாற்றம் உடையதாகவும் இருக்கத்தக்கவகையில் அமையவேண்டும். நேருக்கு நேர் சந்தித்துக் காணப்படும் நேர்காணல்களில் ஒருவர் இவ்வாறான உணர்ச்சிப் பிரச்சனைகளை சமாளித்துகொள்வது இலகுவாகும்.
நீங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நபர் சென்றடையப்பட முடியாதவராகவும் காலநேரம் போதுமானதாகவும் இல்லாதபோது தொலைபேசி நேர்காணல் பயன்தரத்தக்கதாக இருக்கும். ஒரு முறையான தொலைபேசி நேர்காணலில், நீங்கள் நேர்காணல் செய்யவிரும்பும் நபரிடம் என்ன விடயங்கள் தொடர்பாக வினாவ இருக்கிறீர்கள் என்பது பற்றிய மேலோட்டமான எண்ணங்களையும் எவ்வளவு நேரம் எடுப்பீர்கள் என்பது பற்றியும் முன்கூட்டியே கூறிவிடுவது நல்லது.
6. தபால் மூலமான ஃ ஈ-மெயில் மூலமான நேர்காணல்
நேர்காணல் செய்யப்படவேண்டியவரை நேரடியாகச் சந்திக்க முடியாவிட்டாலோ தொலைபேசிமூலம் அவருடன் பேசமுடியாவிட்டாலோ தபால் மூலமாக நேர்காணல் செய்யபப்டுகிறது. ஆனால் நேர்காணப்பட வேண்டியவரின் அஞ்சல் முகவரியை, அவர் பத்திரிகைச் செய்திக் குறிப்பு அனுப்பும் கடிதத்திலிருந்தோ அல்லது முகப்பிலிருந்தோ வேறு உறுதியான ஆவணங்களிலிருந்தோ பெறவேண்டும்.
நேர்காணப்படுபவர் பிரபல்யம் மிக்கவராக இருக்கவேண்டியதில்லை. ஆனால் அவரது பங்களிப்பு சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மக்களுக்கு முக்கியத்துவம் மிக்கதாக இருக்கவேண்டும். ஒரு ஆய்வுவிடயம் சார்ந்த ஆக்கம் தயாரிப்பதற்கான வினாக்கொத்துக்கான விடைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தபால் மூலமான அல்லது ஈ-மெயில் மூலமான நேர்காணல் முறை பயன்படுகிறது.
வினாக்கள் ஃ குறிப்புக்களின் வகைகள்
1. பின்புலம் ஃ புவியியல் – குடித்தொகை சார்ந்த அவரது வாழ்வுத்தளம். (உங்களைப்பற்றி எனக்கு சொல்லுங்களேன்!)
2. தெரிவிக்கும் தகவல்கள் (யார், என்ன, எங்கே, எப்பொழுது, ஏன், எப்படி)
3. அறிவு (அதைப்பற்றி நீங்கள் என்ன அறிகிறீர்கள்……?)
4. அபிப்பிராயம் அல்லது விழுமியம் (அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்….?)
5. உணர்ச்சிகள் (அதற்கான உங்களுடைய உணர்வுப+ர்வமான வெளிப்பாடுகள் எவை?…..)
6. புலன் சார்ந்தவை (என்ன கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள் , முகர்கிறீர்கள், சுவைக்கிறீர்கள், எப்பொழுது …….)
1. நேர்காணல் நுட்பங்கள்
குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாக ஒரு நேர்காணலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அவ்விடயத்தில் நீங்கள் ஏதோ பெரிய நிபுணராக இருக்கவேண்டியதில்லை. நிபுணர்கள், நிபுணர்களை நேர்காணல் செய்கின்ற வேளைகளில், அவ்விடயம் தொடர்பாக எதுவுமே தெரியாத வாசகர்களின் ஆவலுக்குரிய தகவல்களை வழங்குவதாக அந்த நேர்காணல்கள் அமைவதில்லை என்பதே அடிக்கடி கிடைக்கும் அனுபவங்களாகும்.
உங்கள் செய்திப்பத்திரிகை வாசகர்களைக் காட்டிலும் சற்று அதிகமான விடயங்களை, நேர்காணல் செய்யும் விடயம் தொடர்பாக நீங்கள் அறிந்து வைத்திருந்தாலே அது போதுமானதாகும். உங்கள் கேள்விகள் எளிமையானவையாக இருப்பதுபற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. அவ்வகை எளிமையான வினாக்களைக் கேட்குமாறுதான் வாசகர்கள் உங்களைக் கேட்கின்றனர்.
2. நேர்காணல் செய்யுமுன் விடயத்தின் அல்லது செய்திக் கதையின் பின்புலத்தை படித்தறிந்து கொள்ளுங்கள். நூல்நிலையங்கள், விடயம் சார்ந்த தொடர்ச்சியான செய்திக்கோவைகள் என்பன இதற்கு உதவியாக அமையும். பெறுமதிமிக்க கேள்விகளைக் கேட்பதற்கு இவை உங்களுக்கு உதவி செய்யும். கேள்விகள் தெளிவற்றவையாக இருந்தால் விடைகளும் அவ்வாறே இருக்கும். நேரம் விரயமாகுவதைத் தவிர்ப்பதற்காக வினாக்களை முன்கூட்டியே தயார்செய்து கொள்ளுங்கள்.
3. நீங்கள் நேர்காணலை மேற்கொள்ளும்போது நேர்காணப்படுவோருக்கு பதவி ரீதியாக கீழாக உள்ள ஒருவர் ‘ஓவ்-த-றெக்கோட்’ (ழகக-வாந-சநஉழசன) என்று சொல்லுவாராகில், நீங்கள் நேர்காணும் உயர்நிலையிலுள்ளவரை எப்படி நேர்காண வேண்டும் என்ற அணுகுமுறை உங்களுக்கு வந்துவிடும்.
(ஓவ்-த.றெக்கோட் என்பதன் கருத்து யாதெனில் நீங்கள் உங்களை நோக்கிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் சொல்லப்பட்ட விடயங்களை செய்திமூலங்களை ஆதாரம் காட்டாமல் பிரசுரிக்கலாம் அல்லது எவ்வகையிலும் பிரசுரிக்காமல் தவிர்க்கலாம் என்பதாகும்).
4. நட்புக்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நேர்காணல் செய்பவரான நீங்கள் நட்புரீதியாக நேர்காணல் செய்யப்படுபவரை வாழ்த்துங்கள்.
5. கிரகித்துக்கொள்ளுங்கள். உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள். உங்களைப் பற்றி அதிகமாகக் கதைக்காதீர்கள். நேர்காணப்படுபவர் கதைப்பதற்கு அனுமதியுங்கள். குறிப்புக்கள், விடயத்தைவிட்டு விலகிச்சென்றால் மட்டும் குறுக்கிட்டுக் கதையுங்கள்.
6. நேர்காணப்படுபவர் தயக்கம் காட்டினால் ‘ஏன்’ போன்ற வினாக்களை முன்வைத்து விளக்கத்தைக் கேளுங்கள்.
7. ஆனால் நேர்காணப்படுபவர் மிக அதிகமாகக் கதையளக்கின்றவராக இருப்பின் ‘ஆம் / இல்லை’ போன்ற ஒரு சொல் – விடைகளைத் தரக்கூடிய கேள்விகளைக் கேளுங்கள்.
8. குறைந்தளவிலாவது குறிப்புக்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் முக்கியமானவற்றைப் ப+ரணமாக மேற்கோள் காட்டுங்கள்.
9. அளிக்கப்படும் விடை உங்களுக்கு விளங்காவிட்டால் உடனடியாகவே நேர்காணப்படுபவரை மீளக்கூறுமாறு அல்லது தெளிவுபடுத்துமாறு கேளுங்கள். அவ்வாறான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காகப் பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
10. நேர்காணப்படுபவரின் கருத்தை நீங்கள் ஏற்காவிட்டால் அவருடன் வாதாட்டம் போடாதீர்கள்.
11. உங்களுக்குத் தேவையான தகவல்கள் முழுவதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளும்வரை கேள்வி கேட்டலை நிறுத்தாதீர்கள். நேர்காணப்படுபவர் விடையளிக்கத் தீவிரமாகத் தயங்கினாலோ அல்லது மனவழுத்தத்துக்கு உட்படுவது போன்ற அறிகுறிகளைக் காட்டினாலோ கேள்விகளை அவர் மீது அழுத்தித் திணிக்காதீர்கள்.
12. நேர்காணப்படுபவரின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட விடயமொன்றுபற்றி கருத்துக்கூறுமாறு கேட்காதீர்கள்.
13. கடினமான கேள்விகளை நேர்காணலின் இறுதிக் கட்டத்தில் கேளுங்கள். நேர்காணப்படுபவர் உளத்திருப்தி, பாதுகாப்பான உணர்வு என்பவற்றை உணரும் வரைக்கும் அனுபவம் மிக்க செய்தியாளர் பாதகமில்லாத கேள்விகளையே தொடுப்பார். ஆரம்பத்தில் கேட்கப்படக்கூடிய நச்சரிப்ப+ட்டக்கூடிய ஒரு கேள்விகூட முழு நேர்காணலையுமே பழுதாக்கிவிடும்.
14. நேர்காணப்பட்டவருக்கு நன்றி தெரிவியுங்கள்.
15. மென்மையான நேர்காணல் வகைகளாகவே தொலைக்காட்சி உரையாடல் – நேர்காணல்கள் அமைகின்றன. நபர்களின் ஆளுமைப் பண்புகளை மையப்படுத்தியதாகவே அந்த நேர்காணல்கள் அமைகின்றன.
Previous Post Next Post