எந்த ஊடகத்திற்கும் செய்தி எழுதும் போதும் முதலில் அதன் தன்மைகளை அறிந்து கொள்வது முக்கியமாகும். வானொலியில் செய்தி எழுதுவது என்பது சில விசேட தன்மைகளைக் கொண்டது. எந்த ஊடகத்திற்கும் செய்திகளை எழுதுவதற்கு முதலில், செய்திகளின் அடிப்படைகளில் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு வானொலியில் செய்தி எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் போது பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. வானொலியில் கேட்கும் நேயர்கள் ஒலிக்கும் செய்தியை ஒரு தடவையே கேட்க முடியும். பத்திரிகைகள் போல திருப்பிப் திருப்பி படிக்கவோ அல்லது நிறுத்தி வைத்துப் படிக்க முடியாது.
2. ஆயிரக்கணக்கான நேயர்கள் வானொலி செய்திகளைக் கேட்டாலும் நாம் செய்தி எழுதி வாசிப்பது எமக்கு முன்னால் இருக்கும் ஒருவருக்கு என்பதை நினைவில் கொண்டு, பேச்சு மொழியில் சிறிய வசனங்களாக எழுத வேண்டும். .
3. வசனங்கள் எப்போதும் செய்வினையில் எழுதப்பட வேண்டும். உதாரணமாக நேற்று புதிய கட்டடம் ஒன்று அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது என்பதற்குப் பதிலாக புதிய கட்டடம் ஒன்றை அமைச்சர் திறந்து வைத்தார் என்று எழுதவேண்டும்.
4. தேவையற்ற சொற்கள் இல்லாது விடயம் நேரடியாக எழுதப்பட வேண்டும்.
5. ஒலியை மட்டும் பயன்படுத்தியே நேயர் செய்தியைக் கிரகின்றார். அதனால் கேட்கும் போது மயக்கம் இல்லாமல் இலகுவில் புரியக்கூடிய வகையில், சாதாரண பாவனையில் உள்ள சொற்களைக் கொண்டு செய்தியை எழுதவேண்டும்.
வானொலியில் (Feature) விவரணம் அல்லது சித்தரிப்பு
விவரணம் அல்லது சித்தரிப்பு என்றால் என்ன என பத்து வௌ;வேறு வானெலி தயாரிப்பாளர்களிடம் கேட்டால், நிட்சயம் வௌ;வேறான பத்து விடைகள் அவர்கள் தெரிவிப்பார்கள். ஏனெனில் நடைமுறையில் பல்வேறு விதமான சித்தரிப்புக்கள் உண்டு எந்த வரைவிலக்கணம், முழுமையாக சரியான கருத்தை வெளிப்படுத்தும் என்பதில் சிக்கல் உண்டு.
Feature என்ற ஆங்கிலப்பதத்தின் உண்மையான கருத்து (லத்தீன் மொழி மூலம்) பத்திரிகையில் ‘செய்யும் நடைமுறை’ என்றும், வானெலியில் தயாரிக்கும் நடைமுறை என்றும் கொள்ளப்படும். கட்டமைக்கப்பட்ட, ஒரு வடிவம் கொண்ட, கவரக்கூடிய பகுதி என்றம், அல்லது ஒன்றின் சிறப்பான பகுதி என்று கொள்ளப்படுகின்றது. வானெலியில் விவரணம் என்பது எதாவது விடயத்தை பற்றிய இறுக்கமான செய்தி அல்லாத ஒன்று எனக்கொள்ளப்படுகின்றது. கேட்பவர்களைக் கவரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட ஒன்று வானெலியில் சித்தரிப்பு என்று கருதப்படும்.
வானொலி சித்தரிப்பு 30 செக்கன் நேரமுடைய விளம்பரத்தில் இருந்து 4 நிமிட தொகுதி அல்லது பெட்டகம், ஏதோரு விடயத்தை பற்றிய 30 நிமிட சஞ்சிகை, 60 நிமிட ஆவணம் வரை உள்ளடக்கப்படும்.
வானொலி ஆவணம்
ஏதாவது ஒரு விடயம் பற்றி ஆழமாக கையாளவதைக் குறிக்கும். இது சாதாரணமாக 20 நிமிடங்கள் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை இருக்கும். இது பல்வேறு வகையில் சொல்லப்படுவதுண்டு. நேரடியாக, தர்க்க ரீதியாக, தெளிவாக பல்வேறு நபர்களின் பல்வேறு கோணங்களில் செவ்விகள்; கொண்டதாக இருக்கும். இது நாடகம் கொண்டாதக கூட இருக்கலாம். நடிப்பவர்களைக் கொண்டு குறித்த நிகழ்வினை, உரையாடல்களைத் திருப்பி செய்தல். இது கவிதைகள், இசை, குரல்கள் மற்றும் ஒலிகள் கொண்டதாக இருக்கும் அல்லது இவற்றின் கலவையாக இருக்கலாம்.
சஞ்சிகை நிகழ்ச்சி
சஞ்சிகை நிகழ்ச்சி பல்வேறு விடயங்களை உள்ளடக்கி 20 நிமிடங்கள் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை இருக்கலாம். இது, பெட்டகங்கள் அல்லது தொகுதிகள், பதிவு செய்யப்பட்ட செவ்விகள், செய்தியாளர்களுடனான நேரடியாக களத்தில் இருந்து வழங்கம் செய்திகள், விருந்தினர்கள் கலையகத்தில் இருந்து அல்லது தொலைபேசியின் ஊடாக வழங்கும் தகவல்கள், பொதுமக்கள் யாராவது தொலைபேசியூடாக தெரிவிக்கும் கருத்துக்கள் போன்ற விடயங்களின் கலவையாகும். இது நேரடியாகவோ அல்லது பதிவு செய்தொ ஒலிபரப்பு செய்யப்படலாம். முழு நிகழ்ச்சியம் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தால் விவரண சஞ்சிகை என்றும் அழைக்கப்படுவதும் உண்டு.
பெட்டகம் அல்லது தொகுதி
பெட்டகம் என்பது ஒலிப்பதிவு செய்யப்பட்ட விரவரணம். இது வேறு பெரிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் பயன்படுத்தப்படலாம். இது செய்தி தெரிவிப்பாளரின் ஒலிப்பதிவுடன், செவ்வி சேர்ந்த தயாரிப்பாகும். இது தேவையான விடயத்தை துல்லியமாக, தெளிவாக தேவையற்ற சொற்களை தவிர்த்து தயாரிக்கப்படும். இது 3 நிமிடங்கள் தொடக்கம் 15 நிமிடங்கள் வரை இருக்கும். ஒலிகள் மற்றும் இசை என்பவை பயன்படுத்தப்படும்.
சமூக நலனுக்கு செய்யப்படும் விவரணம்
இது பிரச்சாரத்திற்காக செய்யப்படும் விவரணம். இது சமூகத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்யும். இது 30 செக்கன் தொடக்கம் 3 நிமிடங்கள் வரை இருக்கும். வழமையாக இவ்வாறான நிகழ்வுகள் அரசாங்கத்தினால் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களால் அனுசரணையில் ஒலிபரப்பாகும். கண்ணிவெடி விழிப்புணர்வு, சிறுவர்கள் கல்வி, பெண்கள் உரிமை, போன்ற விடயங்களுக்காக செய்யப்படுவதுண்டு.
விளம்பரம்
இது நேரடியாக 30 செக்கன் தொடக்கம் 90 செக்கனுக்குள் விடயத்தை சொல்லப்படும் விவரணமாகும். இது நிறுவனங்களால் அவர்களுடைய சேவைகள் மற்றும் பொருட்களை பிரபல்யப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதுண்டு. இது மிகத்திறமையாக செய்யப்படும், உச்ச தயாரிப்பு வழமையாக விரைவானது.
உள்ளடக்கம்
விவரணம் எப்போதும் நேயர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விடயத்தை கையாளும்: அரசியல், தனிப்பட்டவர்கள் பற்றிய ஆளுமை, சமூக விடயங்கள், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுப் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.
விவரணம் தயாரிப்பதற்க முன்னர் என்ன விடயத்தைப் பற்றி சொல்ல விளைகின்றீர்கள் என்பது பற்றி தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் ஏன் அதைச் செய்கின்றீர்கள், அதை எப்படி சொல்ல சொல்லப்போகின்றீர்கள். அதற்கு என்ன விடயத்தை உள்ளடக்குவது என்பது தெரியவேண்டும். பல்வேறு கோணங்களில் நேர்காணல்களை உள்ளடக்கி குறித்த விடயத்தை பக்கச்சார்பற்றதாக தயாரிக்க வேண்டும்.
நிதானமாக சிந்தியுங்கள் யார் உங்களுடைய விவரணத்தில் இடம்பெற வேண்டும். ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆய்வு செய்யுங்கள் யார் பொருத்தமானவர், நேர்காணலைச் செய்ய முன்னர் அவருடன் தொடர்பு கொண்டு ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மிகப்பெரிய நிறவனத்தின் தலைவராக கூட இருக்கலாம். ஆனால் தெரிவு செய்யும் நபர் தனியே மக்களுக்கு விளங்காத வகையில் தொழில்நுட்பச் சொற்கள் அல்லது கலைச் சொற்களை மட்டும் உபயோகிப்பவர் அல்லது பொருத்தமில்லாத வகையில் கதைக்க கூடியவர்களைத் தெரிவு செய்யவேண்டாம்.
நேர்காணல்கள், செய்தி தெரிவிப்பாளரின் இணைப்பு, ஒலிகள் மற்றும் நிசப்பதம் என்பனவற்றின் கூட்டுடாக தேவையான வெளிப்பாட்ற்க ஏற்ற வகையில் விவரணம் தயாரிக்கப்படும்.
செய்திக்கும் விவரணத்திற்கம் இடையிலான வேறுபாடு
நடப்பு விடயம் ஒன்று இறுக்கமான செய்தியாக அல்லது விவரணமாகத் தயாரிக்கப்படலாம். செய்திக்கும் விவரணத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்பது சிலவேளைகளில் இனம் காண முடியாத வகையில் இருக்கும். செய்தி முக்கியமான தகவல்களை வரிசையாக கொண்டிருக்கும். மிக முக்கியமான தகவல்கள் செய்தியின் முதலில் இருக்கும். மிகச்சரியாக சொல்வதனால் சரியான தகவல்கள் மட்டும் சொல்வது மகிழ்ச்சியூட்டுவது அல்ல. உதாரணமாக மரபணு மாற்றப்பட்ட தாவரங்களால் சூழல் சமநிலையில் மாற்றம் ஏற்படும் என சூழலியலளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விவரணம் அதே விடயத்தை பொதுவாக மென்மையாக கையாளும். இது சில வேளைகளில் குறித்த விடயத்தின் பின்னணித் தகவல்கள் மற்றும் அதன் புறச்சூழல் என்பவற்றை கொண்டிருக்கும். இது பேச்சுப்பாணியில், தனிப்பட்ட ஒருவர் தன்னடைய பாணியில் சில சந்தர்பங்களில் விவரிப்பாக எழுதலாம். இது நேயர்களை அதிகமாக கவரும் அதுமட்டுமல்லாமல் காட்சிகளை உருவகிக்கும்.
‘இந்த ரம்மியமான கிராமத்து சூழலில், என்னைச் சுற்றி பல வர்ணங்களில் நூற்றுக்கணக்காக பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் பறக்கின்றன. அவை மரம் விட்டு மரம் இடம்மாறி, தாவரங்களுக்கு இடையில் மகரந்தச் சேர்கையை செய்வதூடாக எங்களுடைய கிராமப்புறங்களை மேலும் மேலும் கவர்ச்சியாக்குகின்றன. ஆனால் இந்த உயிரினங்கள் விரைவில் மரபணுமாற்றப்பட்ட மகரந்தங்களை இடம்மாற்றப்போகின்றன, இதனால் சூழல் பாரிய விளைவுகளைச் சந்திக்கவுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை கொள்கின்றனர்.’
இந்த விவரணம் விரிவான தகவல்களை இயலுமான வரை விபரிக்கும். இறுக்கமான செய்தியில் மிக ஆழமாக விபரிப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். விபவரணம் நடப்பு விடயங்கள் சார்ந்தாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நடப்பு விடயங்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒலிகளின் முக்கியத்துவம்
விளம்பரம், பெட்டகம், சஞ்சிகை மற்றும் ஆவணம் போன்றவை வேறுவேறு வகையாக இருந்தாலும் விவரணம் அல்லது சித்தரிப்பு என்ற வகையில் எல்லாமே ஒன்றாகும். எல்லா நல்ல விவரணங்களுக்கும் கேட்கும் போது நேயர்களின் மனதில் காட்சியை உருவாக்கும். சொற்கள் ஆற்றல் உள்ளதாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் இருந்தால், சொல்ல வந்த விடயத்தை சொற்களை மட்டும் பாவித்து செய்ய முடியும். எப்படி இருந்தாலும் விடயத்தை மையத்தைச் சுற்றி நேயர்களின் மனதில் கற்பனைகளை அதிகரிப்பதற்கு ஒலிகளும் பயன்படுத்த முடியும். ஒலிகள் அல்லது ஒலி தாக்கங்கள் வானெலியில் குறித்த விடயங்களை மேலும் கவர்ச்சியுள்ளதாக மாற்றும்.
உதாரணமாக, உதைபந்தாட்ட செய்தியாளருக்கும், உதைபந்தாட்ட குழு முகாமையாளருக்கும் இடையிலான செவ்வி ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஆனாலும் குறித்த செவ்வியின் பின்னணியில் மைதானத்தில் எழுகின்ற ஒலிகள் சேர்த்து தயாரிக்கப்பட்டால் அதிகமான நேயர்களை கவரும்.
எந்த வகையான ஒலியை பயன்படுத்த வேண்டும்?
உதைபந்தாட்ட மைதானத்தில் மக்கள் எழுப்புகின்ற ஒலிகள், தோற் பந்தில் காலால் அடிக்கும் சத்தம் போன்றவை உதைபந்தாட்டம் சம்பந்தமான எந்த ஒரு விவரணத்திற்கும் பாவிக்கலாம். இவ்வாறான ஒலிகளைக் நேயர்கள் கேட்டதும் அவர்களுடைய கவனம் குறித்த விடயத்தில் குவியும் அதேவேளை உதைபந்தாட்டம் சம்பந்தமான அவர்களுடைய சொந்த அனுபவம் ஒன்றை ஞாபகப்படுத்தும். கேட்கின்ற விவரணம் தங்களுக்கு நெருக்கமானது என்று உணர்ந்து கொள்வார்கள்.
எந்த விதமான விவரணம் தயாரித்தாலும்…
பல்வேறு விதமான விவரணங்கள் இருக்கின்றது. அவை எல்லாம் குறித்த ஒரு விடயத்தை விபரிப்பதற்கு ஒரே விதமான ஒலிகளைப் பயன்படுகின்றன.
உதாரணமாக, உதைபந்தாட்டம் எப்படி கடந்த 50 வருட காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது என்று ஒரு விவரணம். நீங்கள் ரசிகர்களின் கூச்சல் சத்தம், விசில் சத்தம், பாட்டுகள் மற்றும் அவர்களுடைய மனம்கவர்ந்த வீரர்களின் புள்ளிகள் அல்லது தேவையான புள்ளிகள் போன்றவை கேட்கலாம். சஞ்சிகை நிகழ்ச்சி எந்த அணி குறித்த விளையாட்டில் வெற்றி பெறும் என்று எதிர்வு கூறலாம் அதில் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிகள் அல்லது நேரடியாக அதே மாதிரியான ஒலிகளாக இருக்கலாம். சிறிய பெட்டக நிகழ்ச்சி அநேகமாக சந்தர்பத்தில் நேரடியான ஒலிகளைக் கொண்டிருக்கலாம் மேலும் வர்ணையாளரின் வெற்றி பெறும் வேளையில் வர்ணணை ஒலியும் இருக்கலாம்.
வைல்ட் றக் (Wild track)
நேர்காணல் ஒலிப்பதிவு செய்யும் போது குறித்த சூழலில் இருக்கும் பின்னணி இரைச்சல் 30 நிமிடங்கள் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை இருக்கும் இதை வைல்ட் றக் என்று சொல்வார்கள்.
இது அமைதியாக இருக்கும் அலுவலகத்தின் சத்தம் அல்லது பறவைகளின் பாடல்கள் அல்லது வாகன இரைச்சல் எதுவாக கூட இருக்கலாம். விரைவாக அசையும் சத்தம் அல்லது ஒரு சந்தையில் எழுகின்ற ஒலிகளாக கூட இருக்கலாம்.
என்ன ஒலிகளாக இருந்தாலும், அவை உங்களுடைய விவரணத்தை ஒன்றாக சேர்க்க உதவும், விசேடமாக உங்களுடைய தயாரிப்பு பல்வேறு குரல்களை வௌ;வேறு இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல்களை கொண்டிருக்கும் போது ஒன்றாக சேர்க்க உதவும். கலையகத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்படும் குரல்களுக்கு இவ்வாறான ஒலிகளை சேர்க்ககும் போது உங்களுடைய விவரணம் மென்மையாக நகர்வதை உணரலாம்.
இசை
ஒலிகள் எப்படி உங்களுடைய விவரணத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றதோ அதைப் போல் இசையும் உபயோகிப்படலாம்.
காட்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு
பொருத்தமான இசை காட்சியை உருவாக்கும் அல்லது தேவையான சூழ்நிலைய தோற்றுவிக்கும். இசை அமைப்பாளர்கள் பல ஆண்டுகளாகவே பொருத்தமான மன உணர்வை உருவாக்கும் இசைகளை உருவாக்கி வருகின்றார்கள். தவில் நாதஸ்வர இசை – மங்களமான உணர்வு, உடுக்கு – பக்தியை, பல்வகையான மேளங்கள் சோகம், எழுச்சி போன்ற பல்வேறு விதமான மன உணர்வுகளைத் தோற்றுவிப்பதைக் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
காலம் காட்டுவதற்கு அல்லது ஒன்று விரைவாக மாறுவது
விவரணத்தின் வேகத்தை மாற்ற அல்லது முன்நகர்த்த இசை பயன்படுத்தப்படலாம். விவரணத்தின் இரண்டு பகுதிகள் வேறு வேறு உணர்வுகளைக் கொண்டதாக இருக்கும் வேளை ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு இசை பெரிதும் உதவும்.. சோகமான அல்லது மனநிலையைப் பாதிக்கின்ற விடயங்களை தொடர்ந்து கேட்பது சிரமமாக இருக்கும் இவ்வாறான சந்தர்பங்களில் மென்மையான இசை குறித்த சூழ்நிலைக்கான வேகத்தை மாற்றும். விரைவு படுத்தப்படுவதால் இரண்டிற்கும் இடையிலான பாலமாக அமையும்.
விபரிப்பு
இசை, குறித்த விவரணத்தில் மகிழ்ச்சி ஊட்டும் விடயமாக இருந்தாலும், மகிழ்ச்சி உட்டினாலும் அல்லத சோகமான அல்லது ஏக்கங்களை உருவாக்க கூடிய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சொல்ல வருகின்ற விடயத்தை அழுத்திச் சொல்ல வைக்கும். குறித்த ஒரு பகுதியை, தனியாக வாத்திய ஒலியைப் பயன்படுத்தி அல்லது கதைக்கும் குரல்களில் கருத்துக்கு ஏற்ற பாடல் வரிகளாக கூட இருக்கலாம் அவற்றைப் பயன்படுத்தி விடயத்தை அழுத்திச் சொல்லலாம்.
அதிகரிக்கும் வாகனங்களால் உலகச் சூழல் மாசடைகின்றது போன்றதொரு விவரணத்தில் மனதிற்கு பிடிக்காத இசை, இரைச்சலான இசை, போன்ற இசை பயன்படுத்தப்படலாம், இவ்வாறான இசை மனதிற்கு ஒவ்வாத சூழ்நிலையை மனத்தில் ஏற்படுத்தும். இதேவேளை ஆண்கள் மற்றும் பெண் சாரதிகளை வேறுபடுத்தி காட்டுவதற்கு பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் வரிகள் மூலம் காட்டலாம்.
சில எச்சரிகை வரிகள்
சும்மா தேவை இல்லாமல் இசையைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய விவரணத்திற்கு ஏதாவது வகையில் உதவும் என்றால் மட்டும் உபயோகிக்கவும். ஏற்கனவே பல விவரணங்களில் பயன்படுத்திய இசையை அடிக்கடிப் பயன்படுத்தவேண்டாம். எதாவது புதிய இசை பயன்படுத்த முடியுமா என்று தேடுங்கள்.
ஒலி மற்றும் இசையைப் பயன்படுத்துவது எப்படி
ஒலிகளையும், இசைகளையும் சேர்த்தும், தனியாகவும் பயன்படுத்தலாம். நேரடி ஒலிபரப்பிலும் பார்க்க ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதே சுலபமானது.
இசை
சில சந்தர்பங்களில் இசையின் ஆரம்பத்தை விவரணத்தில் ஆரம்பத்தில் பயன்படுத்தியும், இசையின் இறுதியை பகுதியை விவரணத்தின் இறுதியின் பயன்படுத்துவதும் மிகப்பொருத்தமாக இருக்கும். இது சிறிய பெட்டக நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும். இது நிகழ்ச்சியை முழுமையாக உரண வைப்பதற்கு உதவும்.
விவரணத்தின் ஆரம்பம்
ஒலி அல்லது இசை எப்போதும் விவரணத்தின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்படும். உங்களுடைய விவரணம் நேர்த்தியாக, உறுதியாக ஆரம்பிக்க முடியும் அல்லது பொதுவாக இசையை அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கலாம்.
நேயர்களின் மனதை உறுதியாக ஆயத்தப்படுத்திக்கொண்டு உங்களின் முதலாவது வசனத்தை உள் இறக்குவதற்கு ஆயத்தமாகுங்கள். முக்கியமான விடயம் என்னவென்றால் திடிரென மறைந்து போவதற்குச் செய்ய வேண்டாம். மறைப்பதற்கு முன்பாக மெல்லிதாக குரலக்கு கீழே வைத்துக்கொள்ளுங்கள். நேயர்களின் ஆர்வம், சொல்லும் விவரணத்தின் நீளம், ஒலி மற்றும் இசையின் நீளம் என்பன எவ்வளவு நேரம் இசை நீடிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தீர்மானிக்க உதவும்.
விவரணத்தின் நடு
விவரணத்தின் நடுவில் எதாவது ஒலிகளைக் கொண்டுவர விரம்பினால் மெதுவாக, படிப்படியாக குரலுக்கு கீழாக அறிமுகப்படுத்துங்கள். குரல் நிறைவு பெற்றதும் ஒலி நிலைபெறுவதற்கு சிறிது நேரம் ஒலியை அனுமதியுங்கள், அடுத்த ஒலியைச் சேர்க்கும் வரை சிறிது அமிழ்த்தி வையுங்கள். பின்னர் படிப்படியாக குறையங்கள்.
விபவரணத்தின் இறுதியில்
விவரணத்தின் இறதியில் ஒலி அல்லது இசையை படிப்படியாக மறைக்க உங்களுக்கு தேவையாக இருக்கலாம். முடிப்பதற்க முன்பாக 20 அல்லது 30 செக்கன்களுக்கு ஒலிக்கவிடுங்கள். இது பொருத்தமான வழிகாட்டல்: உள்ளடக்கம் மற்றும் விவரணத்தின் நடை என்பவற்றை பொறுத்து நீங்கள் நேரத்தை தீர்மானிக்கலாம்.
இயலுமான வரை குரலுக்கு கீழே கேட்கும் வரை சத்தமாக வையுங்கள், ஸ்பீக்கரில் சத்தமாக வைப்பதற்கு செய்ய வேண்டாம். ஒலியைக் குறைக்கும் இடத்தில் குரல்கள் வந்தால் இதனை மீண்டும் நிலை நிறுத்துவற்கு அனுமதியுங்கள்.
நடிப்பு பற்றியது.
உங்களுடைய விவரணத்தை மேலும் சிறக்கச்செய்ய இன்னுமொரு வழி பல்வேறு நபர்களின் குரல்களில் வாசிக்க செய்வது. உங்களுடைய செய்திக்கு தொடர்பான எதாவது ஆவணங்கள், கடிதங்கள், நினைவகள் இருக்கின்றாதா எனக் கண்டுபிடியுங்கள் அதில் முக்கிய பகுதி ஒன்றைத் தெரிவு செய்து இன்னெருவர் மூலம் குரல் கொடுங்கள்.
இவ்வாறான ஒலிப்பதிவுகளை உங்களுடைய விவரணத்தில் பொருத்தமான இடத்தில் பாவிக்கவும். உதாரணத்திற்கு உங்களுடைய நேர்காணலில் பிரச்சனைக்குரிய ஒரு அணைக்கட்டுடன் தொடர்பான விவரணத்தில் ஒரு இடத்தில் அவர் ஒரு விடயம் கூறுவதாக வைத்துக்கொள்வோம், ‘1956 ஆம் ஆண்டு யூன் மாதம் எடுத்த தீர்மானத்தின் படி இரண்டு நாடுகளும் இணைந்து சூழல் பாhதுகாப்பிற்காக அணைக்கட்டுப் பகுதியில் எந்த விதமான புதுக்கட்டுமானத்தையும் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்’ என்ற விடயத்தை வேறு குரலில் வெளியிடலாம்.
குறித்த விடயம் தொடர்பான ஏதாவது கவிதைகள், பழமொழிகள், பாடல்கள் இருக்கின்றதா எனக் கண்டுபிடியுங்கள். இவ்வாறான விடயங்கள் சொற்களால் அழகான உருவத்தைக்கொண்டுவந்து உங்களுடைய விவரணத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும், குறித்த ஒலிப்பதிவு முற்கூட்டியே நன்கு ஒலிப்பதிவு செய்யபட்டிருந்தால் விசேடமாகும்.
ஒரு விடயத்தை சித்தரிப்பதற்கு நடிப்பு என்பது சிறந்த வழி ஆனால் குறித்த நேரத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட முடியாது. நடிப்படன் சேர்ந்த தயாரிப்பு முறை உண்மையான தகவல்களின் அடிப்படையில் முற்கூட்டியே தயாரித்த எழுத்துருவைக் கொண்டு தயாரிக்கப்படும். சட்ட விரோத செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அல்லது நேயர்களை வரலாற்றுக் காலங்களுக்கு திருப்பி அழைத்துச் செல்லும் வகையில் இருக்கக் கூடும். ஏனெனில் நடிப்பு என்பது கூடிய வகையில் விபரிக்குமே தவிர அதிக தகவல்களை வழங்க மாட்டாது. விவரண வகைகளில் இது கூடுதலாக ஆவணத்தயாரிப்பிலேயே அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அதிக நேரமுடைய நிகழ்வுகளில் நடிப்புக்கு போதியளவு நேரம் கிடைக்கும்.
பாணி அல்லது நடை
வித்தியாசபாணி வித்தியாசமான விடயங்களுக்கு வௌ;வேறு விதமான விவரணங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
உங்களுடைய விவரணம் மென்மையானதாக, அதிமுக்கியத்துவமற்றதாக இருக்குமானால் உங்களுடைய எழுத்துரு, நேர்காணல், ஒலி, இசை என்பனவும் இவற்றைப் பிரதிபலிக்கும். சில சந்தர்பங்களில் உங்களுடைய உணர்வுகளையும் உதாரணமாக நகைச்சுவை போன்றவறை சுவஸ்சிரியமாகவும், அதிகமான நேயர்களுக்குப் புரியுமானால் நீங்கள் உள்ளடக்கலாம். நேயர்கள் சந்தோசமாக இரசிப்பதற்கு என்பதே உங்களுடைய இலக்கு. இது மகிழ்சசியூட்டுவதற்கான விவரணம் என்றால் அதனை அனுபவிப்பதற்கு அவர்களை அனுமதியுங்கள்.
உதாரணம்
உதாரணம்
உங்களுடைய விவரணம் சற்று சிரத்தையான விடயம் என்றால், அது அரசியல் அல்லது அதிக உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்களுடைய விவரணத்தின் பாணியும் சிரத்தையானதாக இருக்கவேண்டும். உண்மையான தகவலில் மட்டும் உங்களை இறுக்கி வைத்துக்கொள்ளுங்கள், குறித்த விடயத்தில் நீங்கள் மூழ்கிவிடாதீர்கள். நேர்காணல் காண்பவர்களின் உணர்வுகளைத் தவளவிடுங்கள், அதனால் நேயர்கள் தங்களுடைய உணர்வுகளை தொடர்புபடுத்திக்கொள்வார்கள். நேர்கண்டவரை இணைக்கும் போது உங்கள் குரலின் தொனியை பேணிக்கொள்ளங்கள். ஆனாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் குறித்த விடயம் தொடர்பாக குரலளிப்பவர். உங்களுடைய தொனி செய்தி சொல்வதற்கு அதிகாரபூர்வமானதாக இருக்க வேண்டும்.
உதாரணம்
உதாரணம்
நகர்வு
உங்களுடைய விவரணத்தின் நகர்வு என்பது செயல்முறை நகரும் வேகமாகும். இது விடயம் மற்றும் அதன் அமைப்பு சார்ந்தாகும்.
நகர்வும் விடயமும்
ஒரு சிரத்தையான விடயமெனில், விடயத்தின் முக்கியத்தவம் காரணமாக ஒவ்வொரு சொல்லும் கேட்டு விளங்கிக்கொள்ளும் வகையில் மெதுவாக நகரக்கூடும். ஒரு மென்மையான விவரணம் உயர்ந்த சுருதியில் விரைவாக நகரும்.
நகர்வு வேகத்தை மாற்றுதல்
ஒவ்வொரு நிமிடங்களும் நகர்வு மாறக்கூடும், சிலவேளைகளில் எதுவித மாற்றமும் இல்லாமல் நகரக்கூடும். ஒரு சிறிய விவரணத்தில் அடிக்கடி நகர்வு வேகத்தை மாற்றுவது சாத்தியமில்லாது போகலாம். இதனை அதிகளவில் செய்தால் குறித்த விவரணம் கேட்பதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்.
ஒரு நீண்ட நேர ஆணவ நிகழ்ச்சியில் ஒரே வேகத்தில் நகர்ந்தால் சில சந்தர்பங்களில் நேயர்கள் ஆர்வமற்றவர்களாக காணப்படலாம். அதனால் நீங்கள் எங்கே எப்போது மாற்றம் கொண்டு வரவேண்டும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மீண்டும் கவனம், அதிகமாக செய்து விடவேண்டாம். ஆவணத்தயாரிப்பில் நீங்கள் நகர்த்தும் மாற்றங்கள் குறுகிய பெட்டக நிகழ்சியிலும் பார்க்க மேலதிக நேரமாக………………..
மாற்றத்தை நிகழ்த்த அல்லது வேகத்தை மாற்றவதற்கு முன்பதாக, உங்களுடைய விவரணம் நிலைப்படுத்த வேண்டும். உங்களடைய நேயர்கள் என்ன விடயம் என்பதை அறிய அனுமதியுங்கள். பின்னர் விடயம் அல்லது வலியுறுத்துவது சிறிதாக மாற்றம் காண ஆரம்பிக்கம் போது நகரும் மாற்றம் இயல்பாக ஏற்படும். இல்லை என்றால் குறித்த நகர்வு மாற்றம் தேவையா என்பதை கருத்தில் எடுங்கள்.
எப்படி நகர்வு மாற்றத்தை செய்தல்
நகர்வை மாற்றுதல் என்பது நீண்ட நேர அல்லது குறுகிய நேர நேர்காணலைப் பயன்படுத்துவது எனக் கருதப்படும். ஒரு நேர்காணலில் இருந்து இன்னொரு நேர்காணலுக்கு மாறும் போது, விசேடமாக குரல்கள் அல்லது செய்யப்படும் பாணி வெகுவாக மாறும் போது நகர்வு மாறும். நகர்வை மாற்றவதற்கு நீங்கள் ஒலி மற்றும் இசையை கூட பயன்படுத்தலாம்.
அமைப்பு
நல்ல விவரணம் ஆரம்பம், நடு மற்றும் முடிவு என்பன கட்டாயம் இருக்கும். இது கட்டாயமாக வேறு வேறான பக்கங்களை பிரதிபலிக்க வேண்டும், முக்கிய கேள்விக்குப் பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும், இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் அமைப்பு என்று வரும்போது எந்த விதமாக இறக்கமான விதிகளும் இல்லை.
எப்படி ஆரம்பிப்பது.
நேர்காணல் ஒலிப்பதிவு செய்வதற்கு முன்பதாக நீங்கள் சிந்திக்க வேண்டும் எங்கு ஆரம்பிப்பது, விவரணம் என்ன தொனியில் இருக்க வேண்டும்.
விவரணத்தின் ஆரம்பம் மிக முக்கியம். இது நேயர்களை இழுத்துப் பிடிக்க வேண்டும். அது அவ்வாறு செய்யவில்லை எனில் நேயர்கள் அதனைக் கேட்கமாட்டார்கள்.
விவரணம் கால ஒழுங்கில் முன்னேற வேண்டும் என்று இல்லை. ஆரம்பிப்பதற்க ஒரு வழி இறுக்கமான உணர்ச்சி ஊட்டக்கூட்டிய நேர்காணலின் ஒரு பகுதியாக இருக்கலாம். அதிலிருந்து மிகுதிச் செய்தியை நீங்கள் விபரிக்க முடியம்.
விரைவாக நகரக்கூடிய விவரணங்கள்
உங்களுடைய விவரணம் அதிகளவு ஒலிகளுடன், நேர்காணல்கள், இசை, வாசிப்புக்கள், நடிப்பு என்பவற்றுடன் விரைவாக முன்னேற்றக்கூடியதாக இருக்க வேண்டியதாக இருக்கலாம். இந்த இடத்தில் அமைப்ப என்பது அநேகமாக சிக்கல் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் அதிக உத்திகளைப் பயன்படுத்த வேண்டி வரலாம். இதில் பின்வருவன இடம்பெறலாம்
குறித்த இடத்தில் இருந்து பெறப்பட்ட ஒலிப்பதிவு – இயற்கையான பின்னணி ஒலியைப் பெறுவதற்காக
ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இசை கலந்த கலவை.
ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இசை கலந்த கலவை.
ஒரு நேர்காணலுக்கு பின்னர் அறிவிப்பாளரின் இணைப்பு இல்லாது நேரஅடுத்தாக மற்றய நேர்காணல் இடம்பெறுவது.
ஒலிகளால் படத்தை உருவாக்க பல்வேறு ஒலிகள் அல்லது நேர்காணல்களைப் பயன்படுத்தல்.
மக்கள் கருத்து – ஒலிப்பதிவு செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களின் கருத்து
மக்கள் கருத்து – ஒலிப்பதிவு செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களின் கருத்து
மெதுவான விவரணங்கள்
உங்களுக்கு மெதுவான விவரணம் தேவை எனில் சுவாசிப்பதற்கு இடம்கொடுக்க வேண்டும். இது கோட்பாட்டு ரீதியாக நேர்காணல்களில் நீண்ட மூச்சு, சிறிய நிறுத்தங்கள் மேற்கொள்ளுதல். அதாவது 2 நிமிடங்கள் நேர்காணலை ஒலிபரப்பவதிலும் பார்க்க 4 நிமிடங்கள் ஒலிபரப்புவது. அல்லது மன நிலையை உருவாக்குவதற்காக ஒலி அல்லது இசையைப் நீண்ட நேரம் பயன்படுத்தல்