Top News

ஜனாதிபதியிடம் வடபுல முஸ்லிம்கள் கையளித்த கடிதத்தின் விபரம் இதோ!



ஜனாதிபதிக்கு கடிதம் நேரடியாக கையளிப்பு

இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தின் போது நேற்று (25/10/2017) செரட்டன் ஹொட்டலில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து 20 அம்சங்கள் / ஆலோசனைகள் அடங்கிய 'கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களை தத்தெடுப்போம்' என்ற தலைப்பிலான கடிதம் நேரடியாக கையளிக்கப்பட்டது.
அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:

Issadeen Rilwan, MBA (UK)                                                               (Author, My Son is a Leader                                             

மேன்மைதகு ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
விடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக‌:
Subject: Recommendations and suggestions for adopting unattended Hamlets. 

மேன்மைதகு ஜனாதிபதி அவர்களுக்கு !!
தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் எனக்கு எப்போதுமே இருக்கின்றது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன்.
எனக்கு இப்போது 30 வயது தாண்டிவிட்டது. நான் மன்னார் மரிச்சிக்கட்டி கிராமத்தை விட்டு அகதியாய் வெளியேறும் போது வயது 5, 1990ம் ஆண்டு பாடசாலையில் இடமில்லாமல் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்த அனுபவத்துடன் மரிச்சிக்கட்டி கிராமத்தைவிட்டு அகதியாய் வெளியேறினோம். 25 வருடங்கள் கடந்து எங்கள் சந்ததியினர் இன்று அதே போன்று ஒரு மர நிழலில் படித்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றேன்.
1990களில் எமது தாய் மண்ணைவிட்டு வெளியேறிய போது எந்த நிலையில் எமது கிராமத்தை விட்டுவந்தோமோ அதே அவல நிலையைத்தான் இன்றும் பார்க்க முடிகிறது.
இதுபோன்று இலங்கையில் பல நூறு கிராமங்கள் கவனிப்பாரற்று, அடிப்படை வசதி வாய்ப்புகளற்று அநாதரவாகக் கிடக்கின்றன. ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் கொழும்பு, கண்டி போன்ற வளர்ச்சியடைந்த, வளமுள்ள நகரங்களையே அபிவிருத்தி செய்தன, தொடராக செய்துவருகின்றன; அதற்காக பல நிதி உதவிகளையும் செய்திருக்கின்றன. ஆனால், இலங்கை திருநாட்டின் பெயரை உலகிற்கு எடுத்துச் சொன்ன, பல துறைகளிலும் நற்பெயர் ஈட்டித்தந்த பலர் குக்கிராமங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிகொணர்ந்தவர்களே. சுசந்திகா ஜயசிங்ஹ (Susanthika Jayasinghe - සුසන්තිකා ජයසිංහ) என்ற விளையாட்டு வீராங்கனை (Atnawala ,Warakapola, Kegalla,) அதனவள என்று குக்கிராமத்திலிருந்து வந்தவர். இவர் ஓய்வுபெற்ற பின் இவருக்கு ஈடாக இன்றுவரை இன்னும் யாரும் விளையாட்டுத்துறைக்கு வரவில்லை. இன்றைய திகதியில் நாட்டை ஆட்சி செய்யும் நம் கெளரவ ஜனாதிபதி ஒரு கிராமத்திலிருந்து வந்த விவசாயின் மகன். இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் கூறிப் பக்கங்களை நீட்ட விரும்பவில்லை
நாடளாவிய ரீதியில் பின்தங்கியுள்ள 100 குக்கிராமங்களைத் தேர்வுசெய்து தத்தெடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யும்படி தயவாய் வேண்டிக்கொள்கின்றேன்.
இக்கிராமங்களைத் தத்தெடுக்கும் பணியில் அதன் கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அரசியல் என்று அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்யும் வகையிலான செயற்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்குத் தனித்தனி குழுக்களை அமைக்கும் படியும் தயவாய் வேண்டுகிறேன். எப்படியான திட்டங்களை செயலுருப்படுத்துவது என்பது தொடர்பான போதிய ஆலோசனைகள் தேவைப்படும்போது அவற்றை வழங்குவதற்கும் நான் தயாராக இருப்பதாக இத்தால் உறுதியளிக்கின்றேன்
ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதன் குக்கிராமங்களை கட்டியெழுப்புவதே சிறந்த தீர்வு.
சீனா போன்ற நாடுகளின் குக்கிராம உற்பத்திகளே உலக நாடுகளில் பாவித்துக்கொண்டிருக்கின்றோம்,
கிராமங்களில் வாழும் திறமைசாளிகளின் ஆற்றல்கள் பல நூற்றண்டுகளாக இலைமறை காய்கள் போன்று மறைந்தே கிடக்கின்றன,
உதாரணமாக, நான் பிறந்த மரிச்சிக்கட்டிக் கிராமம் யுத்த காரணமாக 3 தலைமுறையின் கல்வி, பொருளாதாரத்தை தொலைத்திருக்கின்றது
இன்றுவரை எனது இந்த கிராமத்தில் ஒரு வைத்தியரோ ஒரு சட்டத்தரனியோ ஒரு பொருளியளாலரோ, ஒரு பொறியாளரோ இதுவரை உருவாகவில்லை என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
உயர்ந்த படிப்பை / தகுதியைத் தேடித்தரும் கொழும்பு டீ, எஸ், சேனாநாயக்க, ஆனந்தா போன்ற கல்லூரிகளை எங்கள் மாணவர்கள் இன்னும் கனவில்கூட கண்டதில்லை.
குக்கிராமங்களை கட்டியெகழுப்புவதற்கான ஆலோசனையாக சிலவற்றை இங்கு பட்டியலிட்டிருக்கின்றேன், எதிர்காலங்களில் மீதியை சமர்ப்பிப்பேன்.

1. இதுவரை வீடில்லாத, ஓலைக்குடுசைகளில் வாழும் குடும்பங்களுக்கு வீடு வழங்குதல்,
2. இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்படவேண்டும், (சூரிய சக்தி மற்றும் காற்று ஆலைகள் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்தல், இவற்றின் மூலம் எமது பிரதேசங்கள் அனுபவித்து வரும் தொடரான வரட்சிக்கு முடிவு காணலாம்)
3. பாடசாலைகள் தரமுயர்த்தப்படல் வேண்டும், (அடிப்படைத் தேவைகள் கூட நிறையேற்றப்படாமல் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிக்கின்றன)
4. வடக்கு அகதிகளின் மீள்குடியேற்றம் துரிதகதியாக அனைத்துவசதிகளுடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற நடவடிக்கை எடுத்தல், (மீள்குடியேற்றத்திற்குத் தேவையான போதிய அத்தியவசிய, அடிப்படை வசதிகள் இன்மையால் பலர் அகதி முகாம்களிலேயே இன்னும் வாழ்ந்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது).
5. கிராமிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபித்தல், (Small industrial hub),  
 
6. சுற்றுச் சூழல், நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிருவனங்களை கிராமங்களில் முதலீடுசெய்வதற்கு ஊக்குவித்தல்,
 
7. தொழில்வாய்ப்பு, மேற்படிப்புக்குத் தேவையான வட்டியில்லா கடன் முறையை அறிமுக செய்தல், 
 
8. பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் முறையைமை தடுத்தல்,
9. பிரதேச மட்டத்தில் அனைத்துவசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானங்களை நிர்மானித்தல், (play ground / stadium with full facilities),
10. பிரதேச மட்டத்தில் சந்தைத் தொகுதிகளை கட்டுதல்,
11. ஒவ்வொரு பிரதேசங்களையும் ஏதாவது ஒரு துறையில் அபிவிருத்தி சார்ந்த பிரதேசமாக பிரகடப்படுத்தல் வேண்டும்.
12. பிரதேச மட்டத்தில் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுத்தல்,
13. மாவட்ட மட்டத்தில் கல்லூரிகள் / பல்கலைக்கலகங்கள் அல்லது அதன் அலகுகளை நிர்மானித்தல், (college of educations, Universities or its units)

14. புதிய தலைமுறையினர் விரும்பி வாழும் வகையில் கிராமிய உட்கட்டமைப்பு பணிகளை அவசர அவசியமாக ஆரம்பிக்கவேண்டும்,
15. வருடத்தில் ஒரு பருவமாய் மழையை மட்டும் நம்பி வாழும் விவசாய்களுக்கு ஏனைய காலங்களில் வருமானம் ஈட்டும் வகையில் புதிய பயிற்சிகள், வழிகாட்டல்களை வழங்குதல், (Attracting good-paying non-agricultural jobs to the community to provide diversification and additional income opportunities),

16. விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பை முழுமையாக நம்பி வாழும் கிராமங்களுக்கு அதற்குத் தேவையான நவீன தொழில்நுற்பகளை அறிமுகம் செய்ய / கற்பிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,

17. பிரதேச மட்டத்தில் நூலம், கலாச்சார மண்டம் அடங்கிய நிலையங்களை நிர்மாணித்தல்.
18. சுகாதாரத்துறையை மேன்படுத்த அவசர நடவடிக்கை எடுத்தல், (சில பிரதேசங்களில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் வைத்தியர் விஞயம் செய்வது சுகாதார ரீதியாக வரிய மக்கள் பாரிய சவால்களை முகங்கொடுக்க நேரிடுகிறது).
19. கிராமிய, பிரதேச மட்டத்தில் லங்கா ஒசுசல போன்ற அரச மருந்தகங்களின் கிளைகளை நிருவி ஏழை மக்களுக்கு உதவுல்,
20. கடலுடன் இணைந்த கிராமங்களுக்கு கடற்தொழிலை மேம்ப்படுத்தும் வகையில் துறைமுகங்களை உருவாக்கள், தரமுயர்த்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் சாதாரன மக்கள் நிம்மதியாக வாழும் மாதிரிக் கிராமங்களை கட்டியெழுப்புவதே இந்த பரிந்துரையின் முழு நோக்கமாகும்.

நன்றி.
இவண்,

இஸ்ஸதீன் றிழ்வான்,  25/10/2017
Previous Post Next Post