அஷ்ரப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அவர் மறக்கப்பட முடியாத ஒரு பாத்திரம். எனவே அவரைப் பற்றிப்பேசுவதற்கு நிறையவே அரசியல் கதைகள் இருக்கின்றன. இந்த எல்லாக் கதைகளை விடவும் அவரது மரணம் தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.
அன்றைய துறைமுக அமைச்சராக பதவி வகித்த எம்.எச்.எம்.அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி காலை பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 என்ற ஹெலிகொப்டரில் அம்பாறை நோக்கிப் பயணிப்பதற்காக ஏறுகின்றார். அப்படி ஏறியவருக்கு தான் பிறந்த அந்த மண்ணில் போய் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகாய வெளிக்குள் காலை 9.05க்கு நுழைகின்ற அந்த ஹெலி 25 நிமிடங்கள் கழிந்து மாவனல்ல- அரநாயக்க என்ற இடத்தில் மலைப்பாங்கான பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகின்றது. இந்த விபத்தில் அஷ்ரப் உட்பட இன்னும் 14 பேர் கொல்லப்படுகின்றார்கள். இந்த மரணங்கள் தொடர்பான மர்மங்கள் இன்னும் புரியாத புதிராக இருந்து வருகின்றன.
2000 ஆம் ஆண்டு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதி. 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி நடக்கின்ற பொதுத் தேர்தல் தொடர்பில் நாட்டில் அரசியல் களம் சூடேறி இருந்த நாட்கள் அவை. இந்த காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகளும் அஷ்ரப் புதிதாக ஆரம்பித்த தேசிய ஐக்கிய முன்னணியும் (நுஆ) நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் தொடர்பான சமிக்ஞைகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.
சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த அந்தக் காலப்பகுதியில் நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்திற்கான செயல்பாட்டில் அஷ்ரப் இறங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் அஷ்ரஃபின் மரணம் எல்ரீரிஈ நடவடிக்கையாகவும், அரசியல் சூழ்ச்சியாகவும் மற்றும் சாதாரண விபத்தாகவும் ஊடகங்களிலும் பொது மக்களிடத்திலும் பேசப்பட்டு வந்தது.
இதனால் என்ன நடந்தது என்பது தொடர்பாக அந்த நாட்களில் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இதுபற்றிய தகவல்களைத் தேடிப்பிடிப்பதற்காக தனி நபர் ஆணைக் குழுவொன்றை நிறுவினார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.கே.ஜீ.வீரசேகர என்பவரை நியமித்திருந்தார்.
இந்த ஆணைக்குழு தனது தேடுதல்களை நடாத்தியபோது அஷ்ரபின் மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட தகவல்கள் வெளியே வந்தன. எனினும் அவை ஊடகங்களில் விளக்கமாக சொல்லப்படவில்லை.
அப்படி வெளிவந்த ஒரு கதைதான் தட்டச்சுக்காரர் மூர்த்தி என்பவர் பற்றியது. இந்த மூர்த்தி வைத்திருந்த தட்டச்சை பரிசோதிக்க முயன்ற போது அது தேவையில்லை; இவர் என்னுடைய ஆள் என்று அஷ்ரப் அந்த இடத்தில் சொல்லியதான கதை.
இந்த மூர்த்திதான் பயணத்தின் நடுவில்வைத்து ஹெலியை தகர்த்துவிட்டிருக்கின்றார். இவருக்கு பிற்காலத்தில் எல்ரீரிஈ தலைவர் பிரபாகரன் தியாகிகள் பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கின்றார். பொலிஸ் மற்றும் உளவுத்துறையினர் கூட மூர்த்திக்கு இப்படி விருது வழங்கப்பட்டிருந்தது என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.
இந்த மூர்த்திதான் பயணத்தின் நடுவில்வைத்து ஹெலியை தகர்த்துவிட்டிருக்கின்றார். இவருக்கு பிற்காலத்தில் எல்ரீரிஈ தலைவர் பிரபாகரன் தியாகிகள் பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கின்றார். பொலிஸ் மற்றும் உளவுத்துறையினர் கூட மூர்த்திக்கு இப்படி விருது வழங்கப்பட்டிருந்தது என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.
ஆனால் இந்தத் தகவல்களை எல்லாம் உறுதி செய்த எந்த ஆவணங்களையும் இதுபற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சந்திரிகாவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக் ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி கூட இந்த ஆணைக் குழுவின் அறிக்கையை இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
இப்போது இதுபற்றிய பேச்சு 17 வருடங்களுக்குப் பின் விவாதத்திற்கு வந்திருக்கின்றது. முன்னாள் அமைச்சரும் மு.கா.வின் கடந்த காலத் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், அஷ்ரப் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியைத் தகவல் அறியும் உரிமையின் கீழ் எழுப்பி இருக்கின்றார். இந்தக் கேள்விக்குப் பதில் வழங்குவதை ஜனாதிபதி செயலகம் நிராகரித்திருக்கின்றது.
இது தொடர்பாக பஷீர் சேகுதாவூத் தற்போது முறைப்பாடொன்றை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்கின்றார். அவரின் இந்த முறைப்பாடு தொடர்பாக வருகின்ற 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அவர் கேட்கப்பட்டிருக்கின்றார். அந்த நாட்களில் அவர் வெளிநாட்டில் இருப்பதால் ஆஜராக முடியாது என்று தெரிவித்திருந்தார். என்றாலும் இப்போது அவர் ஆணைக்குழு முன் ஆஜராகத் தயாராக இருப்பதால் 17 வருடங்களின் பின்னர் இன்று இந்த அஷ்ரஃப் மரணம் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக ‘ஜனயுகய’ என்ற சிங்கள வார ஏடு தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பிலவிடம் விளக்கம் கேட்ட போது இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதால் அது பற்றி இந்த நேரத்தில் தான் பதில் வழங்குவது பொருத்தமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது பற்றி அஷ்ரபின் மனைவி ஊடகங்களூடாக விடுத்த வேண்டுகோளுக்கும் இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் பஷீர் சேகுதாவூத் 'ஜனயுகய' இதழுக்கு வழங்கிய செவ்வியை தமிழில் தருகிறோம்.
அஷ்ரப் மரணித்து இன்று 17 வருடங்களாகின்றன. என்ன திடீரென இப்போது இது பற்றித் தேட முனைந்திருக்கின்றீர்கள்?
பதில்: இந்த விடயத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பதனை இந்த நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற தேவை எனக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்து கொள்ளும் உரிமையின் கீழ் மறைந்திருக்கின்ற இந்த விடயத்தில் உண்மைகளைக் கண்டறிகின்றபோது, இது தொடர்பாக உத்தியோகப்பற்றற்ற ரீதியில் சில குழுக்கள் முன்னெடுத்துச் செல்கின்ற பொய்கள் எல்லாம் முடிவுக்கு வரும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பல மாதங்கள் கடந்தே இந்த தனிநபர் ஆணைக்குழுவை நியமனம் செய்தார். அத்துடன் இதுபற்றிய அறிக்கையும் அந்தக் காலத்தில்தான் கையளிக்கப்படுகின்றது. அப்படியானால் ஏன் அந்த நாட்களில் இது வெளிவரவில்லை.?
அந்த நாட்களில் இதுபற்றி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். 2001 ஜனவரி முதலாம் திகதி தனிநபர் ஆணைக்குழு நியமனம் செய்யப்படுகின்றது. இதுபற்றிய தகவல்களைத் தேடிய ஆணைக்குழு மூன்று மாதங்களின் பின்னர் தனது அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருக்கின்றது. என்றாலும் அது மக்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொழிநுட்பக்கோளாறால் நடந்ததா? அல்லது எல்ரீரிஈ வேலையா அல்லது வேறு ஏதும் சதியா என்று அறிவிக்க வேண்டும். சிக்கல் இல்லாவிட்டால் ஏன் நாட்டுக்கு இதனைப் பற்றி சொல்லாமல் மறைக்க வேண்டும்.
அந்த நாட்களில் இதுபற்றி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். 2001 ஜனவரி முதலாம் திகதி தனிநபர் ஆணைக்குழு நியமனம் செய்யப்படுகின்றது. இதுபற்றிய தகவல்களைத் தேடிய ஆணைக்குழு மூன்று மாதங்களின் பின்னர் தனது அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருக்கின்றது. என்றாலும் அது மக்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொழிநுட்பக்கோளாறால் நடந்ததா? அல்லது எல்ரீரிஈ வேலையா அல்லது வேறு ஏதும் சதியா என்று அறிவிக்க வேண்டும். சிக்கல் இல்லாவிட்டால் ஏன் நாட்டுக்கு இதனைப் பற்றி சொல்லாமல் மறைக்க வேண்டும்.
இதுபற்றி ஜனாதிபதி செயலகத்தில் தாங்கள் கேட்டபோது என்ன நடந்தது?
இதுபற்றிய தகவல்களை எனக்குத் தருவதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையாகவும் தகவல் திணைக்களத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ள முயன்றபோது அதனைத்தேடுவது கடினமாக இருக்கின்றது என்று கூறிவிட்டார்கள். அவ்வாறு எப்படி சொல்ல முடியும்? இதற்கு முன்புள்ள பழைய தகவல்கள் கூட பாதுகாப்பாக இருக்கின்றது. ரீ.பி. ஜயாவுடைய தகவல்கள் கூட இருக்கின்றது. இது மட்டும் எப்படிக் காணாமல்போக முடியும்.
அப்படியானால் அந்த நாட்களிலேயே இதுபற்றி கேட்டுப் போராடி இருக்கலாமே?
அந்த நாட்களில் அஷ்ரபின் மனைவி கூட அரசாங்கத்தில் இருந்தார். அவர் சந்திரிகாவுடன் மிகவும் நெருக்கமான உறவில் இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. நான் ஒரு சின்ன மனிதன். அல்லது மு.கா.தலைவர் ஹக்கீமுக்கும் இதுபற்றி கேட்க இருந்தது. இது அவர்களின் கடமையும் கூட. அவர்கள் அதனைச் செய்யவில்லை.
இன்று அஷ்ரப் தேடிவைத்திருக்கின்ற செல்வாக்கில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இது பற்றித் தேடவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. எல்லாவற்றையும் அவர்கள் கைவிட்டிருக்கின்றார்கள். அதனால் நான் இதனைத் தேட நினைத்தேன். இதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது.
எப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது?
எனக்கு இப்படி ஒரு சந்தேகம் இருக்கின்றது. விமானமோட்டிக்குக் கூட தெரியாதவகையில் சூசகமாக ஹெலிகொப்டரில் தொழிநுட்ப ஒத்துழைப்பு வழங்கும் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
அமைச்சர் அஷ்ரபை நீங்கள் கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்? அந்த சந்திப்பில் அவர் என்ன பேசினார் என்பதனை மக்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள்.?
அது ஒரு தேர்தல் சீசன் மட்டக்களப்பில் தேர்தலுக்கு நிற்குமாறு அவர் என்னிடத்தில் கேட்டிருந்தார். அந்த நாட்களில் அஷ்ரபிடம் இரு சனி கார்கள் இருந்தன. அதில் ஒன்றை எனக்குத் தருமாறு அவர் செயலாளரிடத்தில் சொல்லி இருந்தார். இதுபற்றி என்ன நடந்திருக்கின்றது என்று கேட்பதற்காக அன்று காலை அவருடைய கொழும்பு வீட்டிற்கு சென்றேன். என்னைக் கண்டதும் 'காரைப் பெற்றுக் கொண்டீர்களா?' என்று அவர் என்னிடத்தில் கேட்டார். 'இன்னும் கிடைக்கவில்லை சேர்' என்று அவரிடத்தில் நான் சொன்னேன்.
அப்போது சத்தம் போட்டு 'ரபீக்' என்று கூப்பிட்டார். அவர்தான் அவருடைய செயலாளர். அந்த நாட்களில் அவர்தான் துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவர். கார் பற்றி அவரிடம் கேட்க இன்னும் கொடுக்கவில்லை என்று அவர் கூற, 'அவசரமாக காரை எடுத்து வாருங்கள்' என்று ரபீக்கிடம் அஷ்ரப் கூறினார்.
அப்போது சத்தம் போட்டு 'ரபீக்' என்று கூப்பிட்டார். அவர்தான் அவருடைய செயலாளர். அந்த நாட்களில் அவர்தான் துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவர். கார் பற்றி அவரிடம் கேட்க இன்னும் கொடுக்கவில்லை என்று அவர் கூற, 'அவசரமாக காரை எடுத்து வாருங்கள்' என்று ரபீக்கிடம் அஷ்ரப் கூறினார்.
அப்போது உள்ளே இருந்து காரை டிரைவர் ஒருவர் எடுத்து வந்தார். அஷ்ரப் டிரைவர் கையிலிருந்த சாவியை எடுத்துக் கொண்டார். 'பஷீர் போவோம்' என்று என்னை முன் ஆசனத்தில் அமரவைத்துக் கொண்டு அஷ்ரஃப் காரை எடுத்தார். அஷ்ரப் காரை எடுப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரியும், அசித பெரேராவும் (மு.கா தேசிய பட்டியல் உறுப்பினர்) காரில் ஏற வந்தார்கள். அவர்களை வேறு ஒருகாரில் பின்னால் வருமாறு அஷ்ரப் சொல்லி விட்டார். அதன் பின்னர் நாங்கள் நேரே அலவி மௌலானாவின் கல்கிஸ்சை வீட்டிற்கு போனோம்.
'பஷீர் தேர்தலுக்கு நிற்கின்றார் அவருக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்' என்று அஷ்ரப் மௌலானாவிடம் கேட்டார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்து காரைத் திறந்து கொண்டு இறங்கும் போது அந்த இடத்தில் ரபீக்கும் அசித்த பெரேராவும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடத்தில் அஷ்ரப் 'என்ன நீங்கள் பஷீருடன் கோபமா?' என்று கேட்டு விட்டு என்னைக் கட்டி அணைத்துவிட்டு காரின் சாவியை என்னிடத்தில் தந்தார்.
அப்போது 'என்னுடன் ஹெலியில் போகலாமே' என்று அவர் என்னிடத்தில் கேட்டார். 'வாருங்கள் வாருங்கள் ஹெலியில் போகலாம்' என்றார். அஷ்ரப். அப்போது நான் அவரிடத்தில் சொன்னேன் 'சேர். 72 மணி நேரமாக தூங்காமல் இருக்கின்றேன். நான் காரில் மருதானைக்குப் போய் எனது சிறிய அறையில் சற்றுத் தூங்கி ஓய்வெடுத்துவிட்டு மட்டக்களப்புக்கு போகின்றேன்' என்று அவரிடத்தில் குறிப்பிட்டேன்.
அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தலைவர் அஷ்ரப் தேர்தல் வேலைகளுக்கு வைத்துக் கொள்ளுமாறு மூன்று இலட்சம் ரூபாவை எனக்குத் தந்திருந்தார்.
சம்பவம் அன்று நான் மன்னம்பிட்டியால் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது வானொலி செய்தியில் தலைவர் அஷ்ரப் விபத்தில் சிக்கி இருக்கின்றார் என்று தெரிந்து கொண்டேன். உடனே காரைத் திருப்பிக்கொண்டு மீண்டும் வந்தேன். என்னிடம் சாவி கொடுத்ததை நினைவில் வைத்துக் கொண்டு கட்சியில் என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் 2015 வரை அதனைப் பாதுகாத்து வந்தேன்; ஹக்கீம் யாப்பை மாற்றும்வரை.
அமைச்சர் ஹக்கீம் மு.கா. யாப்பை மாற்றிய முறை பிழையா?
இப்போது மு.கா. ஹக்கீம் சொத்தாகி விட்டது. அஷ்ரப் காலத்தில் கட்சியில் கருத்துச் சுதந்திரம் இருந்தது. இப்போது முசோலினியுடைய ஏகாதிபத்தியம் கட்சியில் நடக்கின்றது. என்றாலும் இப்போதும் நான் மு.கா. அங்கத்தவன்.
அந்த நாட்களில் இப்படி ஒரு கதை இருக்கின்றது. முன்னைய நாள் அம்பாறை போக இருந்த அஷ்ரப் அடுத்தநாள் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று?
ஆம் அந்தக் கதை உண்மையானது. 15ஆம் திகதி அங்கு போவதற்கு ஹெலி கூட வந்திருந்த நிலையில்தான் பயணம் ரத்தானது.
அந்த நாட்களில் தலைவர் அஷ்ரப் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார். சந்திரிகாவுக்கு 18 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றையும் எழுதி இருந்தார். இதனால்தான் அந்த ஹெலி பயணம் ஒருநாள் தாமதமானது.
அந்த நாட்களில் தலைவர் அஷ்ரப் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார். சந்திரிகாவுக்கு 18 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றையும் எழுதி இருந்தார். இதனால்தான் அந்த ஹெலி பயணம் ஒருநாள் தாமதமானது.
அந்தக் குழப்பமான அரசியல் நிலை பற்றி தலைவர் அஷ்ரப் உங்களிடத்தில் ஏதாவது பேசி இருந்தாரா?
ஆம், சில விடயங்களை இந்த சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் என்னிடத்தில் கூறினார். அது அன்று எனக்கு பணம் கொடுத்த நேரம். இந்தத் தேர்தலில் எமக்கு 10- - 12வரை ஆசனங்கள் கிடைக்கும். அவர் சொன்னபடி 11 ஆசனங்கள் கிடைத்தன. அன்று அவர் சொன்ன விடயங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.
இந்தத் தேர்தலை வெற்றி கொண்டதும் நான் மக்காவுக்குப் போய்விடுவேன். நான் வரும் வரை நீங்கள் ஆளும் தரப்பில் போய் அமர்ந்து விடாதீர்கள் எதிரணியில் போய் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏதும் பேசாமல் அங்கு அமைதியாக இருங்கள்.
நான் நாட்டுக்கு வந்ததும் சந்திரிகா என்னிடத்தில் கூறுவார் அஷ்ரபுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்போம் என்று. அதுவரை இருங்கள். அமைச்சுக்களைப் பொறுப்பேற்காமல் தேவைக்கு ஏற்றவாறு மட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அஷ்ரப் குறிப்பிட்டார்.
அந்த திட்டம் நிறைவேறவில்லை?
ஆம். அதற்கு முன்னர் விபத்து நிகழ்ந்து விட்டது.
அஷ்ரப் வகுத்த திட்டத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லையே?
ஆம், அதற்காக இன்றும் மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கின்றது. நாம் போய் ஆளும் தரப்பில் உடனே அமர்ந்து கொண்டோம். பேரியல், ஹக்கீம் அமைச்சுக்களை எடுத்துக் கொண்டார்கள். எவரும் அஷ்ரப் பேச்சை மதிக்கவில்லை.சிங்களத்தில்: ரமேஷ் வரல்லேகம
தமிழாக்கம்: நஜீப் பின் கபூர்