நல்லாட்சி அரசு அரியணை ஏறிய காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களுக்கு இனவாத கும்பல்களால் ஏற்பட்ட பொருளாதார நஷ்ட ஈடுகளுக்கு யார் உதவி புரிந்தது? சற்று சிந்தித்து பாருங்கள்.
கடைகள் எரிந்தது? பள்ளிகள் தாக்கப்பட்டது என செய்திகளில் பார்த்து பகிர்ந்திருப்போம், எத்தனை கடைகளில் கோடிக்கணக்கில் நஸ்டம் ஏற்பட்டத அந்த உரிமையாளர்கள் எவரும் காப்புறுதி செய்திருக்கவில்லை அந்த உரிமையாரளர்கள் என்ன பாவம் செய்தனர்? முஸ்லிம் என்ற ஓரே ஒரு காரணம்தான்.
மஹியங்கனையில் தீக்கிரையான ஓர் கடை உரிமையாளரின் விடயம் ஞாபகத்திற்கு வருகிறது அதுதான் அவருக்கு திருமண வயதை எட்டிய பெண் பிள்ளைகள், இருத நோய் அவஸ்ததை 50 இலட்சத்திற்கு மேற்பட்ட இழப்பு அவரின் துயர் துடைக்க யாரும் முன்வந்தனரா? அல்லது வழங்கப்பட்ட தொகைதான் அவருடைய இழப்பிற்கு ஈடானதா? இல்லை வெறும் வீர வசனம் பேசும் அரசியல் தலைமைகள் அதன் அடிவருடகள் இழப்புகள் குறித்தும் இழப்புகளி்ன் தாக்கம் குறித்து சிற்திக்க வேண்டும், அரசிடம் அதற்கான நஸ்ட ஈட்டை பெறவேண்டும் அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
சமூக வலலையில் வெறும் வசனங்கள் பேசுபவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படும் சமூகமாக நாம் மாறுவோம். எமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்போம்.