Top News

வடபுல முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்; ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கையிடம் மனு


1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப்  தெரி­வித்தார். 
பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  தொடர்ந்தும்  தாம­த­மாக்க வேண்டாம். இவ்­வாறு தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டை தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.  எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக   நம்­ப­க­ர­மான பரந்­து­பட்ட சுயா­தீ­ன­மான வெளிப்­ப­டைத்­தன்­மை­மிக்க  அனை­வரும் பங்­கேற்­கக்­கூ­டிய பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  முன்­வைக்­க­வேண்டும்   என வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.  இலங்­கைக்கு 14  நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான  ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று  தனது  இலங்கை விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு  நாடு திரும்­பு­வ­தற்கு முன்­ப­தாக கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து தனது மதிப்­பீ­டு­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­த­போதே மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார்.  \
ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்   நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்பில்  மேலும்  குறிப்­பி­டு­கையில், 
நான் இலங்­கைக்கு ஐந்­தா­வது தட­வை­யாக விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யங்­களை ஆராய்ந்­தி­ருக்­கின்றேன். 
நான் இம்­முறை அளுத்­கம, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார்,  மாத்­தறை,  முல்­லைத்­தீவு, புத்­தளம், மற்றும் திரு­கோ­ண­மலை  ஆகிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்தேன். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன்.
கொழும்பில் ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர்,  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், தேசிய சக­வாழ்வு,  அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர்,  சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம்,  இந்­து­ச­மய விவ­கார அமைச்சர், நீதி அமைச்சர், கல்வி அமைச்சர், ஜனா­தி­பதி செய­லாளர்,  பாது­காப்பு செய­லாளர்,  சபா­நா­யகர், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர்,  இரா­ணு­வத்­த­ள­பதி,  கடற்­படை தள­பதி, விமா­னப்­ப­டைத்­த­ள­பதி, தேசிய  புல­னாய்வு சேவை தலைமை அதி­காரி, பொலிஸ்மா அதிபர், சாட்­சி­களைப் பாது­காப்­ப­தற்­கான அதி­கா­ர­ச­பையின் தலைவர், நல்­லி­ணக்­கத்தை கூட்­டி­ணைப்­ப­தற்­கான செய­ல­கத்தின் செய­லாளர்,  மனித உரிமை  ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் மதத்­த­லை­வர்கள்,  அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், இரா­ஜ­தந்­திர முக்­கி­யஸ்தர்கள், கல்­வி­யா­ளர்கள், சிவில் சமூக பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள், வடக்கு, மற்றும் கிழக்­கு­மா­காண ஆளு­நர்கள்,  உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். எனக்கு  முன்னர்  இலங்­கைக்கு  பல்­வேறு துறை­களைச் சேர்ந்த ஐ.நா. நிபு­ணர்கள் வருகை தந்­துள்­ளனர். அவர்­களின் விட­யங்­க­ளையும் நான் கவ­னத்தில் எடுத்­துள்ளேன். 
2015 ஆம் ஆண்டு நான் இங்கு வருகை தந்­ததன் பின்னர் தற்­போது நிலை­மையை பார்க்­கும்­போது சில மாற்­றங்­களை அவ­தா­னிக்­கின்றேன். குறிப்­பாக 19 ஆவது  திருத்த சட்­டத்தைக் குறிப்­பி­டலாம். நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான  ஆலோ­ச­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான  செய­லணி அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டாலும் அதன் பங்­கு­தா­ரர்­க­ளாக  சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் இருந்­தனர்.
மிகவும் குறு­கிய காலத்தில் இந்த செய­ல­ணி­விரி­வு­பட்ட ஆழ­மான ஒரு அறிக்­கையை  முன்­வைத்­தது.  இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் இந்த அறிக்­கை­ மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 
புதிய அர­சாங்­க­ம் 100 நாள் வேலைத்­திட்­டத்­தி­லேயே  பொறுப்­புக்­கூறல் தொடர்­பான வாக்­கு­று­தியை வழங்­கி­யது. அந்த வாக்­கு­று­திகள் இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கிய ஐ.நா. பிரே­ர­ணை­யிலும் காணப்­ப­டு­கின்­றது. பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் இலங்கை அர­சாங்­கத்தில் காணப்­படும் தாம­த­ம் பல்­வேறு  துறை­களில்  கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருப்­ப­துடன்  நம்­ப­கத்­தன்­மையை குறைப்­ப­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது. 
குறிப்­பாக காணி விடு­விப்பு விட­யத்தை விரைவு தன்மை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.  இலங்கை பாது­காப்பு தொடர்பில் பல சவால்­களை சந்­தித்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அனைத்து மக்­க­ளுக்கும்  பாது­காப்பை வழங்­க­வேண்­டிய கடமை அர­சாங்­கத்­திற்கு இருக்­கி­றது. எனினும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் செயற்­பாட்டில் தாம­த­மா­னது   ஆபத்­துக்­களை  ஏற்­ப­டுத்தும் என்­ப­தையே பல்­வேறு நாடு­களின்  அனு­ப­வங்கள்  கற்­றுத்­த­ரு­கின்­றன. 
பாதிக்­கப்­பட்ட அனைத்து சமூ­கங்­க­ளுக்கும் நீதியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக   பொறுப்­புக்­கூறல் பொறி­முறை அமையும்.  பாதிக்­கப்­பட்ட அனை­வரும் நீதியை எதிர்­பார்க்­கின்­றனர். 600 பொலிஸ் அதி­கா­ரிகள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­திலும்  நீதி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன்  1990 ஆம் ஆண்டு முஸ்­லிம்கள்  யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பல­வந்­த­மாக  விரட்­டப்­பட்­டனர். இவ்­வாறு  பட்­டியல் நீள்­கின்­றது. இது­வொரு  முடி­வில்­லாத பட்­டியல் என்றே  கூறலாம்.  
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­வ­துடன் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்டம் சர்­வ­தேச தரங்­களைப்  பின்­பற்­று­வ­தாக அமை­ய­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பான விட­யங்­களை உட­ன­டி­யாக மீளாய்வு செய்­ய­வேண்டும்.   
இரா­ணு­வத்­தினால் வர்த்­தக செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை நிறுத்­த­வேண்டும் என்­ப­துடன் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­ப­டு­கின்ற இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் குறைக்­க­வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­திக்­கூற விரும்­பு­கின்றோம்.  இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள காணிகள் தொடர்­பான ஒரு வரை­ப­டத்தை  உட­ன­டியாக தயா­ரிக்­க­வேண்டும்.  காணி விடு­விப்பு தொடர்­பான ஒரு நேர அட்­ட­வணை அவ­சி­ய­மா­கின்­றது. மீள­ளிக்­கப்­ப­டாத காணி­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். இது தொடர்பில் இரா­ணு­வத்­த­ரப்­பினர் மட்டும் முடி­வெ­டுக்­காத வகை­யி­லான  திட்டம்  வேண்டும். 
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது தொடர்­பாக ஒரு பரந்­து­பட்ட திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இது இனம், மதம், உள்­ளிட்ட எந்­த­வொரு விட­யத்­தையும் கருத்திற்கொள்­ளாது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.  இந்­த­வி­ட­யத்தில் பால்­நிலை விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக  பெண்கள், குடும்பத் தலைவிகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். நட்டஈடு வழங்குதலானது உண்மை மற்றும் நீதியை புறந்தள்ளுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. நட்டஈடு செயற்பாடானது பொறுப்புதன்மையுடன் செயற்படவேண்டும். 
உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான  ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப்  தனது இலங்கை விஜயத்தின்போது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகள், அளுத்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரையும் சந்தித்து முஸ்லிம் சமூகம் தொடர்பான விவகாரங்களை கேட்டறிந்து கொண்டார். ஐ.நா. நிபுணர் தனது இலங்கை விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கையை 2018 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post