முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா பற்றி பேசுவதற்கு ஆயிரம் விடயங்கள் இருப்பினும், அவர் அரசியல் குறித்து பேசவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது, அதாஉல்லா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து கிழக்கின் விடியலுக்காய பாடுபட்ட சாமான்யன் இந்த அதாஉல்லா தனது ஆசிரியர் தொழிலுக்கு அப்பால் விடுதலைப்புலிகள் உக்கிரமாக அக்கரைப்பற்றை அண்டி பகுதிகளில் குண்டுகளையும் ரவகைளையும் வீசிய போது, இந்த மக்களின் விடிவிற்காய் அரசியலுக்குள் வருகிறார், அன்று இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிக ஆதரவாளர்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், தலைவர் அஸ்ரபையும் அக்கரைப்பற்றுக்குள் கொண்டு வருகிறார். ஈற்றிலே மாகாண சபை, பாராளுமன்றம், பிரதியமைச்சு, அமைச்சு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, நாட்டின் அதிகூடிய அதிகாரத்துடன் நெருங்கிய உறவு இவைகள் எளிதில் ஒருவரை எட்டிப்பிடிக்காது,
தலைவர் அஸ்ரபுக்கு அடுத்த கிழக்கில் அதிகூடிய அதிகாரத்தை கூவைத்த பெருமை அதாஉல்லாவையே சாரும், இன்றிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத கண்டிராத அபிவிருத்தி திட்டங்களையும், தனதுாருக்கு உள்ளுராட்சி அதிகாரத்தையும், கிழக்கு வாழ் மக்களுக்கு விடிவையும் பெற்றுக் கொடுத்தார். இது அதாஉல்லாவால்தான் முடியும். இவர் கூடவே இருந்த இன்றிருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், நகர சபை முதல்வர்கள், பிரதேச சபை தவிசாரளர்கள் எத்தனை பேர், அவர் இடம் இருந்து அரசியல் கற்று வெளியுறிச் சென்றனர்.
அதாஉல்லா அக்கரைப்பற்றில் பிறக்காமல் வேறு எந்தவூரிலாவது பிறந்திருந்தால் இன்று கிழக்கு அவரை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும், யர்ரும் மறுக்க முடியாத உண்மை காரணம் அக்கரைப்பற்றின் மீது மட்டக்களப்புக்கு தென்பகுதியில் உள்ள ஏனைய முஸ்லிம் ஊர்களின் வெறுப்பு, அது வரலாற்று வெறுப்பு யாரும் எளிதில் மாற்றிக் கொள்ள முடியாது. ஆனாலும் தனக்கொரு கட்சியை ஸ்தாபித்து அதன் மூலம் மாகாண சபை, மாநகரசபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், மேயர்கள், என பல பதவிகளை கட்சிக்கு பெற்றுக் கொடுத்தார்.
இவைகளை சொல்லித்தான் ஆகவேண்டும் இன்று இருக்கும் அரசியல் சூழலை அதாஉல்லா கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சொன்னார் அன்று அவர் சொல்லும் பேர்து பலருக்கு வேடிக்கையாக இருந்தது, இன்று அதை உணர்கின்றனர், இதுதான் அவர் பின்னால் இவ்வளவு கூட்டம், நிதானமாக யதார்த்தமாக அரசியலை பட்டை தீட்டுவார் எனின் இன்னும் கூட்டம் அதிகரிக்கும், சாணக்கியத்தை கடைப்பிடித்தால் முஸ்லிம் சமூகமே அவர் பின்னால் நிற்கும். இதில்தான் அவர் சில சமயம் சறுக்க நேரிடலாம். இறைவன் துணைநிற்க,
மிசாரி ஸேக் அப்துல் மஜீத்