Top News

புகைப்படக்கலை

இன்று நிழல்ப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்த நிலைமைகளோடு ஒப்பிடும் போது இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பாலான மக்களின் கைகளில் நிழல்ப்படக்கருவி (கமெரா) கிடைக்ககூடிய சந்தர்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கைத்தொலைபேசிகளில் இருக்கின்ற கமெரா என ஆரம்பித்து, சில ஆயிரம் ரூபாவிற்கு டிஜிற்றல் கமெராக்கள் வரை கிடைக்கின்றன. வாழ்வில் சந்திக்கின்ற முக்கிய நிகழ்வுகளைப் ஆவணப்படுத்திக்கொள்வதில் இருந்து மனதிற்குப் பிடித்த காட்சிகள் காட்சிகள் வரை எல்லாமே இப்போது படம் பிடிக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தமது புகைப்படங்களை போஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்நது கொள்ளுதல் போன்றவையும் நிகழ்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் புகைப்படங்களின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. இவை தவிர பொதுமக்களின் கைகளில் புகைப்படக் கருவிகள் தராளமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் நிகழும் நிகழ்வுகள் அந்தந்த இடத்தில் படமாக்கப்பட்டு செய்திகளாகப்படுகின்றன.
விளம்பரத்திற்குப் படம் எடுத்தல் போன்ற விசேட தேவைகளுக்கு ஏற்ற வகையில் உயர் தரத்தில் சாதாரண பாவனையில் உள்ள கமெராக்கள் தயாரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக உயர் தரத்தில் உள்ள கமெராக்கள் தேவைப்படுகின்றன. பெறுமதி கூடிய கமெராக்கள் எல்லோராலும் வாங்க கூடிய வசதிகள் அல்லது தேவைகள் இருப்பதில்லை. துறைசார்ந்தவர்களே அதிக முதலீடுகள் செய்து, முழுநேரத்தொழிலாக ஈடுபடுகின்றனர்.
புகைப்படங்களைக் கொண்டு கருத்து வெளிப்படுத்துவது, புகைப்படங்களைக்கொண்டு செய்தி சொல்வது, புகைப்படங்களைக் கொண்டு கலைத்துவப் படைப்பக்களை உருவாக்குவது, போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. புகைப்படக்கருவி, மற்றும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் ஒன்றாக இருக்கும் போது, புகைப்படக்கருவிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், தமது ஆற்றலுக்கும், அறிவுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி தமது படைப்புக்களை உருவாக்குகின்றனர்.
அன்றாட வாழ்வில் புகைப்படம் பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மனிதனின் பிறப்பில் இருந்து இறக்கும் வரையான பல்வேறு சந்தர்பங்களிலும், மனிதர்களோடு இணைந்த நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு சந்தர்பத்திலும் படங்களின் தேவைகளும், அதற்கேற்ற வகையில் தன்மைகளும் மாறுபடுகின்றன.
உதாரணமாக விளம்பரத்திற்காக எடுக்கப்படும் புகைப்படம் தெளிவாக, அழகாக, தேவைக்கு ஏற்ற அளவுகளில் உருப்பெருக்க கூடியவகையில் இருக்க வேண்டும். ஆனால் செய்திக்காக எடுக்கப்படும் படம் சிலசந்தர்பங்களில் அழகு, தெளிவு, அளவு என்பவற்றைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாது குறித்த விடயம் பற்றிய ஆதாரமாக இருந்தால் மடடுமே போதும் என்று கொள்ளப்படுகின்றது.
புகைப்பட மொழி
மனிதர்கள் தொடர்பு கொண்டு தமது அனுபவங்களை, கருத்துக்களை இன்னொருவருக்கு அல்லது பலருக்கு வெளிப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை நாம் மொழிகள் என்ற வகையில் உள்ளடக்கினால் அவ்வாறு புகைப்படமும் தொடர்பாடல் மொழி ஆகும். சாதாரணமாக மொழியைப் பயன்படுத்தம் போது அததைப்பயன்படுத்தும் முறை அதாவது இலக்கணம் உண்டு. அதைப்போலவே புகைப்பட மொழியைப் பயன்படுத்தவும் இலக்கணம் அல்லது உத்தி உண்டு. அவ்வாறு பயன்படுத்தினாலேயே அதற்கான சரியான கருத்து அல்லது பொருள் கொள்வது சுலபமாகும்.
மையப்படுத்தல் அல்லது குவியப்படுத்தல்
Sales-Focus
இது புகைப்படம் எடுப்பதில் முக்கியமான விடயமாகும். இன்று அதிகமான கமெராக்களில் தன்னியக்க முறையில் குவியப்படுத்தல் நிகழுகின்றது. SLR மற்றும் DSLR கமொராக்களில் தன்னியக்க மற்றும் சாதாரண குவியப்படுத்தல் முறை உண்டு. படங்களை தெளிவாகப் பெறுவதற்காக குவியப்படுத்தல் என்பது நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் இன்னெரு வகையில் குவியப்படுத்தல் அல்லது மையப்படுத்தலானது பயன்படுத்தப்படுகின்றது. இதில் எடுக்கின்ற படத்தில் குறித்த விடயத்தை முக்கியத்துப்படுத்த குவியப்படுத்தல் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணம் ஐ அவதானித்தால், இங்கு படம் முழுவதுமே தெளிவாக காட்சியளிக்கின்றது. இப்படத்தின் நோக்கம் குறித்த படத்தில் இருக்கின்ற அனைத்து விடயங்களையும் தெளிவாகக் காட்டுதல் ஆகும். படம் – இங்கு திட்டமிடப்பட்ட வகையில் ஒரு விடயம் மட்டும் குவியப்படுத்தப்பட ஏனையவை விடயங்கள் தெளிவில்லாமல் காட்டப்பட்டுள்ளது. இது புகைப்படக்கலையில் ஒரு  உத்தியாகும்.
சட்டகம் அல்லது Frame
3464459412_d195f99705_b
மனிதர்களுடைய கண் அதனது பார்வைக் கோணத்தில் உள்ளடங்கூடிய சகலவற்றையும் காணும். இவ்வாறு பார்க்கும் போது சிலவற்றை தவிர்த்தோ அல்லது கிட்டவாக சென்று பார்ப்பதோ என்பதெல்லாம் வெற்றுக் கண்ணுக்குச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைப் படம் பிடிக்கும் போது கமெராவில் உள்ள தொலை நோக்கும் மற்றும் கிட்டப்பார்க்கும் வசதிகளைப் பயன்படுத்தி படம் எடுக்கும் போதும், பின்னர் அவற்றைப் பிரதியாக்கும் போதும் எந்தப்பகுதியைக் மட்டும் காட்ட வேண்டும் அல்லது எந்த அளவில் காட்ட வேண்டும் என்று மாற்ற முடியும். இதுமட்டுமல்லாமல் படத்தை எடுக்கம் போது பார்வைக் கோணத்தை மாற்றி எடுக்க முடியும். இதுவும் புகைப்படத்தறையில் இருக்க கூடிய உத்தியாகும். இவ்வாறு எடுக்கப்படும் படம்
நல்ல படம் எடுத்தல்
படம் எடுக்கும் போதும் சிறந்த படம் என்பது கருவிக்குப் பின்னால் உள்ள ஆளைப் பொறுத்தது. எண்ணி எடுக்காத படம் பேசமாட்டாது. சும்மா கருவியை எடுத்து படம் எடுப்பதைக் காட்டிலும் எண்ணுதல் முக்கியம்.
ஒரு நல்ல படம் நன்கு எழுதப்பட்ட ஒரு செய்திக்கு சமமானது இவ்வாறான படம் இலகுவாக வாசிக்கலாம், தேவையான தகவல்களை எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் வெளிப்படுத்தும். அவ்வாறு செய்வதற்கு படம் துள்ளியமாக மையப்படுத்தி தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் அதனால் மிக முக்கியமான பகுதி உடனடியாக தெளிவாக நிற்கும்/காணலாம்
tumblr_kqp9av0wWH1qzz5uzo1_500
    ஒருங்கமைப்பு
ஒருங்கமைப்பு என்பது படத்தில் உள்ள பகுதிகளை ஃ மூலங்களை ஒழுங்கு படுத்தல் ஆகும். ஒரு திறமையான அனுபவம் உள்ள படப்பிடிப்பாளர் எப்போதும் தான் இலக்கு வைக்கும் பிரதான பொருளின் இடத்தை எளிமையாக வைத்திருப்பார். கருவியின் பார்வை பகுதியால் அவதானித்து பின்னனிக்கு ஏற்றவாறு மாற்றி(தேவையான இடம் அல்லது அண்மித்ததாக சென்று) எடுத்துக் கொள்வார்கள் அவர்கள் ஒருங்கமைப்பு விதிகளை பின்பற்றிக் கொள்வார்கள். அமெரிக்கா பிரபல படப்பிடிப்பாளர் அன்சீல் அடம்ஸ் என்பவர் படம் எடுப்பது விபத்தல்ல அது ஒரு கருத்து என கூறியுள்ளார்.
221
    ஒருங்கமைப்பிற்கு சில விதிகள்
1)    படத்தின் இடத்தை நிரப்புங்கள்.
images
படங்கள் எளிமையாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும் நீங்கள் எடுக்கும் முக்கிய விடயம் முழு இடத்தையும் நிரப்புவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் அதனை சுற்றி சும்மா வெளிகள் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இதனை செய்வதற்கு இலகுவான வழி எடுக்க வேண்டிய பொருளுக்கு அல்லது விடயத்துக்கு அண்மையாக செல்லுங்கள்.

2)     பின்னணியை கண்காணித்துக் கொள்ளுங்கள்
5098888565_1bcdb2aee3_z
சில சந்தர்ப்பங்களில் படத்திற்கு பின்னணி முக்கியமாக இருக்கும் இது குறித்த நபரை எந்த இடத்தில் உள்ளார் என்று அதன் சூழ்நிலையை காட்டும். இதே போல் சில சந்தர்ப்பங்களில் பின்னணியை அகற்ற வேண்டிய சந்தர்ப்பம் கூட ஏற்படும். உதாரணமாக ஒரு மரத்தின் கிளை மரத்திற்கு முன்னால் நிற்கின்ற ஆளின் தலையை மறைப்பதாக வைத்துக்கொண்டால் ஆளை நகரச் சொல்வதிலும் பார்க்க குறித்த மரக்கிளையை அகற்றி விடலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பின்னனியின் அளவை குறைத்து காண்பிக்க முடியும்.
3)     படம் பிடிக்கும் போது முக்கோட்டு விதியை அவதானித்துக் கொள்ளுங்கள்
Photography-Rule-Of-Thirds
உங்கள் பார்வைப் பகுதியில் டிக் டக் டொஸ் வரை தளம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். குறித்த கோடுகளின் இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில், எடுக்க வேண்டிய பிரதான பொருளை நிலை நிறுத்துங்கள். இது படத்தில் மையத்தில் இருந்து பிரதான பொருளை வெளியில் வைத்து, இயங்கும் ஒரு உணர்வைக் கொடுக்கும். படத்தில் வானமும் பூமியும் சந்திக்கும் கோடு தென்படும் வேளையில் இவ் முக்கோட்டு விதி சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் இவ்வாரான சந்தர்ப்பத்தில் அந்தக் கோட்டை படத்தின்
3/1 அல்லது 3/        2இல் நிலை நிறுத்தும் போது படம் சிறப்பாக அமைவதை காணக்கூடியதாக இருக்கும்.

4) வழிநடத்தும் கோடுகளை பயன்படுத்துங்கள்.
leading-lines-photography
எப்போதும் மனிதக் கண்கள் ஏதாவது கோடு ஒன்று செல்லுமாயின் அதன் வழியே இயல்பாக நகரும் இதனால் அனுபவம் வாய்ந்த படப்பிடிப்பாளர்கள் அவ்வாறான கோடுகள் ஏதாவது படத்தில் இருந்தால் அதனை பயன் படுத்தி ஒருங்கமைப்பார். இவ்வாறான கோடுகள் பார்வையாளரை படத்தில் உள்ள கோட்டின் வழி நகர்த்திச் செல்லும்.
5) படத்தை சட்டகத்திற்குள் (பெட்டிக்குள்) கொண்டு வருதல்.
taj
உங்களுடைய படத்திற்கு நீங்கள் முப்பரிமான தோற்றத்தை கொடுக்கலாம். உதாரணமாக படத்தில் ஏதாவது பொருள் அல்லது மரக்கிளையை முன்னனிக்கு கொண்டு வரும் போது நீங்கள் முக்கியப் படுத்தும் பொருள் பின்னனிக்கும், முன்னனிக்கும் இடையில் வந்து முப்பரிமான தோற்றத்தை அளிக்கும். முன்னனிக்கு தெரிவு செய்யும் பொருளை படத்தில் ஏதாவது ஒரு மூளைக்கு நிலைப்படுத்துங்கள் இது பார்ப்பவர்களை அழைத்து பார்க்க வைக்கும்.
Previous Post Next Post