த.சபாரத்தினம்
உறுதி மொழி – நாங்கள் தவறின்றி எழுதுவோம்
எழுதும் போது நாங்கள் ஆறு வகையான தவறுகளை விடுகின்றோம்.
1. எழுத்து
2. சொல்
3. சொற்றொடர்
4. வாக்கியம்
5. பந்தி
6. ஆக்கம்
2. சொல்
3. சொற்றொடர்
4. வாக்கியம்
5. பந்தி
6. ஆக்கம்
1. எழுத்துப் பிழைகள்
கீழே உள்ள மூன்று எழுத்துத் தொகுதிகளில் தவறுகள் ஏற்படுகின்றன.
1. ந, ண, ன
2. ல, ள, ழ
3. ற, ர
2. ல, ள, ழ
3. ற, ர
திருந்தும் வழி : ஒவ்வொரு எழுத்தையும் முறையாக ஒலிக்கப் பழகுதல் வேண்டும்
கீழேயுள்ள வாக்கியங்களை உச்சரித்துப் பழகுங்கள்.
மல்லிகை மலர்கள் மணம் வீசின.
‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்பது ஒரு பழமொழி.
நீலன் வேலை தேடி அலைந்தான்.
குழந்தை உணவை அளைந்தது.
மாணவி என்னைத் திருமண விருந்துக்கு அழைத்தாள்.
‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்பது ஒரு பழமொழி.
நீலன் வேலை தேடி அலைந்தான்.
குழந்தை உணவை அளைந்தது.
மாணவி என்னைத் திருமண விருந்துக்கு அழைத்தாள்.
2. சொல் உபயோகத்தில் ஏற்படும் பிழைகள்
சொல்லின் வரைவிலக்கணம்: ஒர் எழுத்து தனித்து நின்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் உணர்த்தினால் அவை சொற்கள் ஆகின்றன. சொற்களை உபயோகிக்கும் போது கீழே உள்ளவற்றில் கவனம் தேவை.
அ. ஓர் – ஒரு உபயோகம்
உயிரெழுத்துடன் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன் ஓர் என்றும் மெய் எழுத்துடன் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன் ஒரு என்றும் எழுத வேண்டும் என்பது பொது விதி. இரு, ஈர் என்ற சொற்களுக்கும் இவ்விதி பொருந்தும்.
ஆ. பொருள் உணர்ந்து சொற்களைத் தெரிந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
பொருள் உணர்ந்து சொற்களை உரிய இடங்ளில் பதிக்க வேண்டும். கீழே உள்ளவற்றில்
கவனம் சொலுத்துக.
கவனம் சொலுத்துக.
1. ஒத்த வடிவமுள்ள சொற்கள்:
எடுத்துக்காட்டு: குறை – குறைவு, மாறாக – மாற்றமாக, தேர்வு – தெரிவு
எடுத்துக்காட்டு: குறை – குறைவு, மாறாக – மாற்றமாக, தேர்வு – தெரிவு
2. ஒத்த பொருள் தரும் சொறகள்:
எடுத்துக்காட்டு: இல்லம் – வீடு, பலமான – பலத்த
எடுத்துக்காட்டு: இல்லம் – வீடு, பலமான – பலத்த
3. சொல்லின் தொனிப்பொருள்:
எடுத்துக்காட்டு: உயிரிழப்பு – இறப்பு, மேற்கொள்ளப்பட்ட – நடத்தப்பட்ட
எடுத்துக்காட்டு: உயிரிழப்பு – இறப்பு, மேற்கொள்ளப்பட்ட – நடத்தப்பட்ட
4. பலமான வினைச்சொற்கள்: வினைச்சொற்கள் செய்வினைச் சொற்களாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: அழிக்கப்பட்டது – அழித்தனர் (செய்வினை எழுத்து நன்மை பயக்கும்)
எடுத்துக்காட்டு: அழிக்கப்பட்டது – அழித்தனர் (செய்வினை எழுத்து நன்மை பயக்கும்)
5. பயனற்ற சொற்கள்: பயனற்ற சொற்களைத் தவிர்க்குக
எடுத்துக்காட்டு: சொன்னார்- சொன்னார்
எடுத்துக்காட்டு: சொன்னார்- சொன்னார்
6. சொற்களை கையாள்தல்:
சொற்களை கையாளும் போது –
சிறிய சொற்களைப் பயன்படுத்துங்கள்
பொருத்தமற்ற சொற்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்
மரபைப் பேணுங்கள்
சொற்களை கையாளும் போது –
சிறிய சொற்களைப் பயன்படுத்துங்கள்
பொருத்தமற்ற சொற்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்
மரபைப் பேணுங்கள்
3. சொற்றொடர் தவறுகள்
சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருள் தருவது தொடர் எனப்படும். சில தொடர்களில் கருத்து முற்றுப்பெற்றிராது. கருத்து முற்றுப்பெறாத தொடரை எச்சத்தொடர் என்றும் சொற்றொடர் என்றும் அழைக்கின்றோம்.
கருத்து முற்றுப்பெற்று நிற்கும் தொடரை வாக்கியம் என்கின்றோம்.
கருத்து முற்றுப்பெற்று நிற்கும் தொடரை வாக்கியம் என்கின்றோம்.
சொற்களைப் போன்று சொற்றொடர்களையும் மிகவும் கவனமாக உபயோகிக் வேண்டும்.
அ. சொற்றொடரின் தொனிப்பொருள்
அ. சொற்றொடரின் தொனிப்பொருள்
சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட பொருள் இருப்பதைப் போன்றே சொற்றொடர்களுக்கும் வரையறுக்கப்பட்ட பொருள் உண்டு. அதைப் பேண வேண்டும். எடுத்துக்காட்டு: சுற்றுப்பயணம் மேற்கொண்டார் – சுற்றுப்பயணம் செய்தார்.
ஆ. சொற்சேர்க்கை
சில சொற்கள் சேர்ந்து வருது மரவு. எடுத்துக்காட்டு: கேள்வி கிளப்பினார் – கேள்வி கேட்டார் அல்லது கேள்வி எழுப்பினாhர்.
இ. உளுத்துப்பொன சொற்றொடர்கள் (Clutches)
பழமொழிகள், உவமைகள், உவமேயம் அவற்றின் உபயோகத்தைத் தவிர்த்தல் வேண்டும். எடுத்துக்காட்டு: பொலிஸார் கையும் மெய்யுமாகப் பிடித்தனர் – பெலிஸார் பிடித்தனர்.
ஈ. சொற்களும் சொற்றொடர்களும் உரிய இடங்களில் இருத்தல்
சொற்களும் சொற்றொடர்களும் உரிய இடங்களில் இருக்காவிட்டால் வாக்கியம் தவறான பொருளைக் கொடுக்கும். எடுத்துக்காட்டு:
ஆண்டு தோறும் மறைந்த தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் நினைவுக்கூட்டம் நடைபெறும். இந்த வாக்கியத்தில் செல்வநாயகம் ஆண்டுதோறும் மறைந்தார் என்ற அர்த்தமும் தொனிக்கின்றது. ஆண்டுதோறும் என்ற சொல்லை இடம் மாற்றிக்கூட்டம் நடைபெறும் என்ற சொற்றொடருக்கு முன்னால் எழுதினால் அக்குழப்பம் நீங்கி விடும்.
தலைவி ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்துடன் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்ததும்அ.தி.மு.கவினர் சிலர் குறுக்கீடு செய்தனர். தலைவி ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்துடன் சட்டசபையில்
காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர் என்ற கருத்தையும் மேலே உள்ள வாக்கியம் கொடுக்கின்றது. அதற்குக் காரணம் தலைவி ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்துடன் என்ற சொற்றொடர் தவறான இடத்தில் இருப்பதே ஆகும்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர் என்ற கருத்தையும் மேலே உள்ள வாக்கியம் கொடுக்கின்றது. அதற்குக் காரணம் தலைவி ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்துடன் என்ற சொற்றொடர் தவறான இடத்தில் இருப்பதே ஆகும்.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்ததும் தலைவி ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்துடன் அ.தி.மு.கவினர் சிலர் குறுக்கீடு செய்தனர் என்று வாக்கியத்தை அமைத்தால் குழப்பம் ஏற்படாது.
4. வாக்கியப் பிழைகள்
4. வாக்கியப் பிழைகள்
வாக்கியங்களில் நான்கு வகையான பிழைகள் ஏற்படுவது வழக்கம். அவை:
அ. எழுவாய் – பயனிலை பொருத்தமின்மை
எழுவாயும் பயநிலையும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் ஒத்திருத்தல் வேண்டும். திணை என்பது உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். உயர்திணை எழுவாய் – உயர்திணை பயனிலையும், அஃறிணை எழுவாய்
அஃறிணைப் பயனிலையும் பெற வேண்டும்.
அஃறிணைப் பயனிலையும் பெற வேண்டும்.
பால் என்பது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும். எழுவாயும் பயனிலையும் ஒரே பாலைச் சேர்ந்தனவாக இருக்க வேண்டும். பால் வழுக்கள் ஏற்படுவது குறைவு எனறாலும் அதிலும் கவனம் தேவை.
எண் என்பது ஒருமை – பன்மை. எழுவாயும் பயனிலையும் ஒன்றில் ஒருமையாக அல்லது பன்மையாக இருக்க வேண்டும். எண் தவறுகள் ஒருமை – பன்மை தவறுகள் என்று சொல்கின்றோம். அதில் அதிக கவனம் தேவை. எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருக்க வேண்டும். எழுவாய் பன்மையாக இருப்பின்
பயனிலையும் பன்மையாக இருக்க வேண்டும்.
பயனிலையும் பன்மையாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கு அருகில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாடசாலைகள் பன்மை. எனவே, அப்பகுதிகளிலிருந்து என வரவேண்டும்.
பாடசாலைகள் பன்மை. எனவே, அப்பகுதிகளிலிருந்து என வரவேண்டும்.
ஒரு, ஒவ்வொரு, எந்த, எந்தவொரு ஆகிய சொற்கள் ஒருமைத் தன்மயைக் குறிப்பன. தவறு: ஒவ்வொரு வரிகளும் பத்திகளும் ‘நான் எழுதியது’ என்ற வரியில் எழுதுவதுதான் ‘தனி நடை’ என்ற வகையைச் சார்ந்ததாகும். சரி: ஒவ்வொரு வரியும் பத்தியும்….
தன்மை முன்னிலை படர்க்கை என இடம் மூவகையானது. இவற்றிலும் எழுவாயும் பயனிலையும் ஒத்திருக்க வேண்டும்.
ஆ. கால வழு
வாக்கியம் ஒரே காலத்தில் அமைய வேண்டும். இறந்த காலத்தில் தொடங்கும் வாக்கியம் இறந்த காலத்திலும், நிகழ் காலத்தில் ஆரம்பிக்கும் வாக்கியம் நிகழ் காலத்திலும், எதிர் காலத்தில் தொடங்கும் வாக்கியம் எதிர் காலத்திலும்
முடிய வேண்டும்.
நேற்றும், இன்றும், நாளையும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும். இன்றும் நாளையும் மழை பெய்யும் என்பது சரி. நேற்று ?
முடிய வேண்டும்.
நேற்றும், இன்றும், நாளையும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும். இன்றும் நாளையும் மழை பெய்யும் என்பது சரி. நேற்று ?
இ. செய்வினை – செயற்பாட்டுவினை பிரச்சனைகள்
நீங்கள் செயலைச் சொல்ல வேண்டும். செயலைச் சொல்வது செய்வினை. செய்வினைச் சொற்களை உபயோகித்தல் ஊடகவியலின்
அடிப்படை விதி. எடுத்துக்காட்டு: தமிழ் மொழிச் சட்டத்தை அமுலாக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதுவது சிறந்தது.
செய்யப்பட்ட செயலைச் சொல்வது செயற்பாட்டு வினை. அதன் உபயோகத்தைக் குறைக்க வேண்டும்.
அடிப்படை விதி. எடுத்துக்காட்டு: தமிழ் மொழிச் சட்டத்தை அமுலாக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதுவது சிறந்தது.
செய்யப்பட்ட செயலைச் சொல்வது செயற்பாட்டு வினை. அதன் உபயோகத்தைக் குறைக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை:
1. செய்வினையில் ஆரம்பித்து செயற்பாட்டு வினையில் முடிக்க வேண்டாம். எடுத்துக்காட்டு: ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை மேதினக் கூட்டத்தை கண்டியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்று வரவேண்டும்.
2. செயற்பாட்டுவினை வாக்கியத்தை செய்வினையில் ஆரம்பிக்க வேண்டாம். எடுது;துக்காட்டு: பத்திரிகையில் உண்மையை மட்டுமே சொல்லப்பட வேண்டும். பத்திரிகையில் சொல்லப்பட வேண்டிய விடயம்பற்றிய இவ்வாக்கியத்தை செய்வினையில் ஆரம்பிக்க கூடாது.
உண்மையைச் சொல்ல வேண்டும். உண்மை சொல்லப்பட வேண்டும் என்பதே சரி.
உண்மையைச் சொல்ல வேண்டும். உண்மை சொல்லப்பட வேண்டும் என்பதே சரி.
ஈ. வேற்றுமை உருபு குளறுபடிகள்
வேற்றுமை உருபைக் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்காது விடுவதும், தேவையற்ற இடத்தில் கொடுப்பதும், தவறான உருபுகளை உருபுகளை எழுதுவதும் கருத்துக் குழப்பத்திற்கு வழி வகுக்கும்.
1. வேற்றுமை உருபைக் கொடுக்காது விட்டதால் ஏற்பட்ட மயக்கத்திற்கு எடுத்துக்காட்டு: நான்கு குண்டுகளில் முதற்குண்டு காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள அனுமார் கோவிலில் வெடித்து. இவ்வாக்கியத்தை, உருபைச் சேர்த்து ஆலயத்திற்கு அருகிலுள்ள என்று எழுதியிருந்தால் பொருள் தெளிவாக இருக்கும்.
2. தேவையற்ற இடத்தில் வேற்றுமை உருபைக் கொடுப்பதும் குழப்பத்தை உண்டாக்கும். எடுத்துக்காட்டு: எரிபொருட்களின் விலைகளை அண்மையில் அதிகரிக்கப்பட்டமையினால் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மாதாந்தம் ஏற்பட்ட 800 மில்லியன் ரூபா நட்டம் 600 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள்களின் விலைகள் என்றிருப்பதே சரி. அல்லது விலைகளை அண்மையில் அதிகரித்தமையினால் என்று எழுதியிருக்க வேண்டும்.
3. தவறான உருபுகளை உருபுகளை எழுதுவதும் கருத்துக் குழப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு: மாட்டிறைச்சி சாப்பிடுவதிலிருந்து முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள். இது மாட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றிருக்க வேண்டும்.
ஐ.தே.க உறுப்பினர் சிலர் ஆளும் கட்சியோடு சேர்ந்தனர். கட்சியில் சேர்ந்தனர் என்பதே சரி.
ஐ.தே.க உறுப்பினர் சிலர் ஆளும் கட்சியோடு சேர்ந்தனர். கட்சியில் சேர்ந்தனர் என்பதே சரி.
5. பந்திப் பிழைகள்
நாம் எழுதுவனவற்றில் ஒழுங்கும் தெளிவும் இருக்க வேண்டும். எழுத்தில் ஒழுங்கும் தெளிவும் ஏற்படுவதற்கு:
1. ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாக தெரிந்தெடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் பதிக்க வேண்டும்.
2. ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒழுங்காக, தெளிவக எழுதவேண்டும். அவற்றிடையே தொடர்பு இருக்க வேண்டும். அதைப்போன்றே
3. ஒவ்வொரு பந்தியையும் தொடர்புபடுத்திச் சொல்லும் இணைப்புச் சொற்களை கருத்தோட்டம் முறியாதவாறு அமைக்க வேண்டும்.
பந்திகளுக்குள்ளே ஒழுங்கையும், சீரமைவையும், பந்திகளுக்கிடையே கருத்தோட்டத்தையும் தொடர்பையும் பேணவேண்டும். அதற்கு
1. ஒரே பந்திக்குள் செய்வினையையும், செயற்பாட்டுவினையையம் போட்டுக் குழப்பக்கூடாது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று மாத்தளையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை குழப்ப முயன்ற சிலர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு உதைக்கப்பட்டனர்.
இப்பந்தியின் முதலாவது வாக்கியம் செய்வினையிலும், இரண்டாவது வாக்கியம் செயற்பாட்டுவினையிலும் உள்ளன. பந்தியின் சீரமையைப் பேணுவதற்கு இரண்டாவது வாக்கியத்தையும் செய்வினையில் எழுத வேண்டும்.
இப்பந்தியின் முதலாவது வாக்கியம் செய்வினையிலும், இரண்டாவது வாக்கியம் செயற்பாட்டுவினையிலும் உள்ளன. பந்தியின் சீரமையைப் பேணுவதற்கு இரண்டாவது வாக்கியத்தையும் செய்வினையில் எழுத வேண்டும்.
2. வாக்கியங்களில் தவிர்க்க வேண்டிய வழுக்களை பந்திகளிலும் தவிர்க்க வேண்டும். ஒரே பந்தியில் ஒரே வாக்கியத்தை இறந்த காலத்திலும், இன்னொன்றை நிகழ் காலத்திலும் எழுதக்கூடாது.
நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா கொடிஏற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. யாழ்குடாநாட்டின் பல பாகங்களிலிருந்து பெருந்தொகையான அடியார்கள் கலந்து கொண்டணர். கோவிலின் வெளி மண்டபத்தில் வாலிபர் குழாம் ஒன்று இளம் பெண்களை தள்ளியும் கிள்ளியும் அங்க சேஷ்டை செய்துகொண்டிருக்கிறது. இதில் முதல் இரண்டு வாக்கியங்கள் இறந்த காலத்திலும், மூன்றாவது வாக்கியம் நிகழ் காலத்திலும் உள்ளன. மூன்றாவது வாக்கியத்தையும் இறந்தகாலத்தில் எழுதுவதே சரி.
3. பந்திகளுக்குள்ளே மட்டுமல்லாது பந்திகளுக்கிடையேயும் சீர்மையையும், ஒழுங்கையும், தொடர்பையும் பேண வேண்டும். பந்திகள் வௌ;வேறு கருத்தைக் கூறுகின்ற போதிலும் அவை முழுமையான எழுத்தாக்கமொன்றின் அங்கங்களாக அமைகின்றன. மேலேயுள்ள பந்தி கூறும் கருத்தை அடுத்து வரும் பந்தி உறுதிப்படுத்த வேண்டும்.
4. வாக்கியங்களுக்குள்ளே ஏற்படும் தவறுகள் பந்திகளுக்கிடையேயும் நேருகின்றன. ஒரு பந்தியை செய்வினையிலும், அடுத்த பந்தியை செயற்பாட்டுவினையிலும் எழுதலாகாது.
கொழும்பு தமிழச் சங்கத்தில் நேற்று கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஐந்து பிரபல கண் வைத்திய நிபுனர்கள் உட்பட 12 வைத்தியர்கள் வைத்தியம் செய்தனர். இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இதனால் நன்மையடைந்தனர்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த இலவச கண் சிகிச்சை முகாமை சுகாதார அமைச்சு அதிகாரிகள் வெகுவாகப் புகழ்ந்தனர். ஒரு நாள் முழுவதும் நோயாளிகளைப் பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் ‘செயற்கரிய செய்த சிறந்தோர்’ என்று போற்றப்பட்டனர்.
இங்கு முதலாவது பந்தி செய்வினையிலும் இரண்டாவது பந்தி செயற்பாட்டுவினையிலும் எழுதப்பட்டுள்ளன.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த இலவச கண் சிகிச்சை முகாமை சுகாதார அமைச்சு அதிகாரிகள் வெகுவாகப் புகழ்ந்தனர். ஒரு நாள் முழுவதும் நோயாளிகளைப் பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் ‘செயற்கரிய செய்த சிறந்தோர்’ என்று போற்றப்பட்டனர்.
இங்கு முதலாவது பந்தி செய்வினையிலும் இரண்டாவது பந்தி செயற்பாட்டுவினையிலும் எழுதப்பட்டுள்ளன.
தொடர்புபட்டு நின்று கருத்தினை வளர்த்தல், பொருளைத் தெளிவாக்குதல், வாசிப்பதைச் சுலபமாக்குதல் ஆகிய வேலைகளை பந்திகள் செய்ய வேண்டும்.
6. நீங்கள் எழுதிய ஆக்கம் சீராக இருக்கிறதா என்பதை அறிவதற்கு கீழக் காணும் கேள்விகளைக் கேளுங்கள்:
1. நான் சொல்ல வேண்டியதை ஆரம்பத்தில் சொல்லி விடடேனா?
2. நான் அதை ஏன் சொல்லுகிறேன் என்ற சூழலை இரண்டாம், மூன்றாம் பந்திகள் கொடுக்கின்றனவா?
3. நான் சொல்லும் கருத்தை அடுத்துவரும் பந்திகள் விளக்குகின்றனவா?
4. நான் சொல்லும் கருத்தை வாசகனின் அல்லது கேட்போனின் மனதில் கடைசிப் பந்தி பதிய வைக்கின்றதா?
5. நான் கூறும் விடயத்தை வலியுறுத்த ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் கருத்துக்களைக் கொடுத்துள்ளேனா?
6. நான் வலியுறுத்தும் விடயம் சம்பந்தமான மறு பக்கத்தையும் கொடுத்திருக்கின்றேனா?
7. நான் சொல்வதை வலியுறுத்த மேற்கோள்கள் கொடுத்திருக்கின்றேனா?