Top News

பள்ளிவாசல் நிர்வாகிகளிற்கான வக்பு சட்டம் தொடர்பான கருத்தரங்கு

பாறுக் ஷிஹான்

வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட    பள்ளிவாசல் நிர்வாகிகளிற்கான வக்பு  சட்டம் தொடர்பான கருத்தரங்கு யாழில் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று(21)  நடைபெற்றது.

இதன் போது   பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல்அமீன்  வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட   முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல்அமீன்  தனது கருத்தில் 

மத ரீதியான இணக்கப்பாட்டு ஒன்றினை கட்டியேழுப்ப வேண்டும் என்ற நோக்கில் தற்போதைய முஸ்லிம் கலாசார அலுவல் செயற்பாடுகள் முக்கிய வாய்ந்தாக காணப்படுகின்றது.எனவே அவ்வாறான செயல்வடிவத்திலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு  வடமாகாணத்தினை பிரதித்துவப்படுத்தும் பள்ளி நிர்வாகங்கள்  முயலவேண்டும்  

எனவே தான் இது தொடர்பான செயற்றிட்டங்களை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்து இருக்கின்றோம்.அவ்வாறான வடிவத்திலான பங்குபற்றுதல்களை பள்ளிவாசல்  நிர்வாகத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
மேலும் இம் முறை தேசிய மீலாத் விழாவினை கொண்டாட யாழ்ப்பாணத்தில் உள்ளதோடு  அதற்காக ஒரு முன்னேற்பாடுகள்  தொடர்பாகவும் இக் கலந்துரையாடல் அமைந்துள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

மேலும் இக்கருத்தமர்வில் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைத்தலைவர் சுபியான் மௌலவி உட்பட    முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post