சிறப்பு நேர்காணல் - எஸ்.என்.எம்.ஸுஹைல்
இருபதாம் திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் ஏன் அவசரப்பட்டது?
மாகாண சபைகளுக்கான தேர்தலை மஹிந்த அரசாங்கம் தனது தேவைக்கும் அரசியல் இலாபத்துக்குமாக வெவ்வேறு தினங்களிலேயே நடத்தியது. இதன்போது, அரசாங்கத்தின் முழு அதிகாரத்தையும் குறித்த ஒரு மாகாணத்திற்கு பயன்படுத்தியது. அத்துடன், அரச சொத்துக்கள், பணம் அந்த மாகாண தேர்தலுக்கு பயன்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகளை நலிவடையச் செய்ய பாதாள உலகத்தினரையும் இதன்போது பயன்படுத்தினர். இதுவே மஹிந்த அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கையாக இருந்தது. தமது சுயநலத்திற்காக மாகாண சபைத் தேர்தலை பிரித்து பிரித்து தேர்தல்களை நடத்தினர். இதனால், எமது அரசாங்கம், அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த தீர்மானித்தது. இதனடிப்படையிலேயே 20 ஆம் திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. இதை அமுல்படுத்த மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் இத்திருத்தம் கொண்டுவரப்படவில்லை.
ஏன் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு சென்றிருக்கலாம்தானே?
இவ்வாறு நாம் சென்றிருந்தால் நீண்ட காலமொன்று தேவைப்பட்டிருக்கும்.
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு செல்லாமை, அரசாங்கத்திற்கு மக்கள் செல்வாக்கின்மையே என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனவே?
அப்படியல்ல, நாம் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல முன்னரே மூன்று மாகாண சபைகளின் காலம் முடிவடைவந்துவிடும். அப்படி பதவிக் காலம் முடிவடைந்த மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருப்போம். அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவதில் அர்த்தமில்லாமல் போயிருக்கும். நாம் கால விரயத்தை விரும்பவில்லை.
அரசாங்கத்திற்கு 20 ஆம் திருத்தத்தை கொண்டுவர முடியாதநிலையில், உள்ளடக்கங்களை அரசாங்கம் திருட்டுத்தனமாக சபையில் திருத்தப் பிரேரணையை முன்வைத்து கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றதே?
பாராளுமன்ற தேர்தலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களும் தொகுதி முறையிலேயே நடத்தப்படவிருக்கின்றன. இந்நிலையில் மாகாண சபை தேர்தலையும் தொகுதி ரீதியில் நடத்துவதற்கே இந்த திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
விகிதாசார தேர்தல் முறையில்தான் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இந்நிலையில், தொகுதி முறை முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்து விடுமென்று அச்சம் கொள்கின்றனரே?
விகிதாசார தேர்தல் முறையினால் கடந்த காலங்களில் பல பிரச்சினைகளுக்கு நாடு முகம்கொடுத்திருக்கிறது. குறிப்பாக, பணம் இருப்பவர்களுக்கு இது சாதகமாக அமைந்தது. மாவட்டம் முழுவதும் விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ள அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஒரே கட்சிக்குள் போட்டித்தன்மைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் அனேகமானோர் இத் தேர்தல் முறைக்கு கடந்த பத்துபதினைந்து ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பல சந்தர்ப்பங்களில் பலதரப்பட்டவர்களினால் இத்தேர்தல் முறை மாற்றுவது குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக் ஷவும் இதே வாக்குறுதியை வழங்யிருந்தார். யாரும் இதனை நிறைவேற்ற முன்வரவில்லை. 2015 ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நாம் இதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்தோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியடிப்படையில், உள்ளூராட்சி தேர்தல் முறையை மாற்றினோம். அத்துடன், மாகாண சபை தேர்தல் முறையையும் மாற்றவேண்டுமென்றே இத் திருத்தங்களை முன்வைத்தோம்.
விருப்பு வாக்குமுறைமை வேண்டாம் என கூறுவதன் காரணம் அதிகமான தொகுதிகளில் இன்று எந்தக் கட்சிகளினாலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாதிருக்கிறது. இதனால், பல பகுதிகள் எந்த தரப்பினராலும் கவனிக்கப்படாதிருக்கிறது. பெரும்பாலும் பணப் பலமுள்ளவர்கள் மாவட்டமுழுதும் எவ்வாறாயினும் வாக்குகளை பெற்றுக்கொள்வதாலேயே இந்த பிழைகள் ஏற்படுகின்றன.
ஒரே கட்சிக்குள் வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் கடந்த காலங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
ஒரே கட்சிக்குள் வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் கடந்த காலங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதி செய்வதென்று நாம் பேசியே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முறை மாற்றத்தை எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த மாற்றத்தின்போது, சிறுபான்மை, சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள சட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
விகிதாசார தேர்தல் முறையில் அதிகமான பணம் வீண்விரயம் செய்யப்படுவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். தேர்தல்களின்போது, கடந்த காலங்களில் ஒரு உறுப்பினர் மாவட்டம் முழுவதும் செலவிட்ட பணத்தை இதன்பிறகு ஒரு தொகுதியில் செலவிடுவாரல்லவா? இதனை எப்படி கட்டுப்படுத்துவது, அதற்கு ஏதும் சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றனவா?
தேர்தல் திருத்தச் சட்டத்தில் அதிகப்படியான திருத்தங்கள் கொண்டுவரவேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக ஒரு வேட்பாளர் தேர்தலுக்காக எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்ற வரையறை ஏற்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டியிருக்கிறது. அப்படியானதொரு சந்தர்ப்பத்திலேயே ஜனநாயக ரீதியிலான தேர்தல் ஒன்றை எம்மால் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும்.
பணம் இல்லாத சமூகத்தை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். திறமையான அவர்களால், தேர்தலில் போட்டியிடுவது முயல்கொம்பான கதையாக இருக்கிறது. இன்று பணத்தை வைத்துக்கொண்டு எவ்வித தகுதியுமற்றோர் அரசியலில் ஈடுபடுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
பணம் இல்லாத சமூகத்தை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். திறமையான அவர்களால், தேர்தலில் போட்டியிடுவது முயல்கொம்பான கதையாக இருக்கிறது. இன்று பணத்தை வைத்துக்கொண்டு எவ்வித தகுதியுமற்றோர் அரசியலில் ஈடுபடுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
அத்தோடு ஒரு அபேட்சகர் எவ்வாறு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும் என்றும் சட்ட ஏற்பாடுகள் அவசியப்படுகின்றன. தற்போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களினூடாக சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுவருகிறதே?
இந்த திருத்தங்கள் தொடர்பில் சரியான விளக்கமில்லாமல் சிலர் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனால் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் கூறுகின்றனர்.
இந்த திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆதரவைப் பெறவிடாது தடுத்து அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சில இயக்கங்களும் கட்சிகளும் சில அரசியல்வாதிகளும் முயற்சித்தனர். அதனூடாக தமக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படுமென்றே அவர்கள் நினைத்தனர். அது அன்றைய வாக்கெடுப்பின்போது இடம்பெறவில்லை. இதனால் மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரும் வழி மூடப்பட்டுவிட்டது. அது அவர்களுக்கு பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்ததாக தெரிகிறது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாகநின்று கதைக்க முடியாதவர்கள், இன்று முஸ்லிம் பிரதிநிதிகளின் விகிதாசாரம் குறைகின்றதென பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
எங்களுக்கு மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு அமர்த்தவேண்டும் என்ற தேவை கிடையாது. நாட்டிற்கு நல்லதொரு தேர்தல் முறையே அவசியம் என்பது எமது தேவை. அந்த தேர்தல் முறைமையினுள் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்ளும் விடயம் குறித்தே நாம் பேசவேண்டியிருக்கிறது.
புதிய முறையினால் ஒரு தொகுதிக்கு பொறுப்புக் கூறவேண்டிய ஒரு உறுப்பினர் நேரடியாகத் தெரிவாகிறார். அவர் எந்த இனம், மதம் என்ற தேவை இல்லை. விகிதாசார முறையினால் இவ்வாறு பிரதிநிதி இல்லாமையால் பல கிலோ மீற்றர்கள் தூரம் பல மணித்தியாலங்கள் மக்கள் அலைந்து திரிகின்றனர். சில எம்.பி.களுக்கும் அமைச்சர்களுக்கும் அவர்கள் போட்டியிடும் மாவட்டத்தில் அலுவலகம்கூட இல்லை. தேர்தல் காலத்தில் பரசூட்டில் வந்து வாக்குகளை அள்ளிக்கொண்டு பறந்துவிடுகின்றனர். அவர்களை மாவட்டத்தில் காண்பதற்கு மறுதேர்தல் வரவேண்டும். எனவே புதிய முறை இதனை சீர் செய்வதாக அமையும்.
தொகுதியிலுள்ள அனைத்தின, மத மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது புதிய முறையில் தெரிவாகும் பிரதிநிதியின் பொறுப்பு. சில தொகுதிகளை பொறுத்தவரையில் அங்கு முஸ்லிம்களின் வாக்குகளை நம்பி பெரும்பான்மையின வேட்பாளர் இருக்கவேண்டிய நிலை ஏற்படும். அவர் முஸ்லிம்களிடம் தங்கியிருப்பதால் எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு சேவையாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளவே முயற்சிப்பார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தோம், இனி ஒவ்வொரு பிரதேசசபை, மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருக்கப்போகிறோம். இன்னுமொரு விடயத்தையும் சொல்லலாம் பாராளுமன்றில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக சிறுபான்மை கட்சிகள் இருப்பதுபோல் இனி ஒவ்வொரு தொகுதிகளிலும் சிறுபான்மை மக்கள் இருப்பர்.
இது இவ்வாறிருக்க 50 வீதம் பட்டியல் ஊடாக தெரிவாகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். அத்தோடு, பல் அங்கத்துவ தொகுதிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை பலவகையிலும் நன்மையளிக்கக்கூடியதாக இருக்கும்.
அத்தோடு எல்லை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றவேண்டும். எமது அங்கீகாரத்துடன் அது நிறைவேற்றப்படவிருப்பதனால் எமக்கு எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது அரசியல் அறிவில்லாத, மஹிந்த ஆதரவு அணியினரால் பரப்பப்படும் விஷமப்பிரசாரமேயாகும்.
அத்தோடு எல்லை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றவேண்டும். எமது அங்கீகாரத்துடன் அது நிறைவேற்றப்படவிருப்பதனால் எமக்கு எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது அரசியல் அறிவில்லாத, மஹிந்த ஆதரவு அணியினரால் பரப்பப்படும் விஷமப்பிரசாரமேயாகும்.
மாகாண சபை திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றுக்குகொண்டுவரப்பட்டபோது அரசாங்கத்திற்குள்ளே இருக்கும் சில முஸ்லிம் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக சொல்லப்படுகின்றது. அப்படி யாரும் செயற்பட்டனரா?
மஹிந்த ராஜபக் ஷவுடன் தொடர்பு இருந்தது பற்றி எனக்கு தெரியாது, அரசாங்கத்திலுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த திருத்தம் வந்தபோது பிரதமர், ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்தி பல திருத்தங்களை முன்வைத்தனர். நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் நாமும் அவ்வாறான சில யோசனைகளை முன்வைத்தோம். அவர்களுடன் இணைந்து ஆதரவளித்தோம்.
அரசாங்கத்திற்கு வெளியில் அதிகாரத்துக்கு வரத் துடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.
அரசாங்கத்திற்கு வெளியில் அதிகாரத்துக்கு வரத் துடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.
நாம் விருப்பத்துடன் மாகாண சபை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பாராளுமன்ற திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடக அறிக்கை விடுகின்றனர். அத்தோடு அவர்கள் ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மக்கள் முன் தெரிவிக்கின்றனரே. இவ்வாறு ஏதாவது நடந்ததா?
யாரும் அவ்வாறு வற்புறுத்தப்படவில்லை. அவர்களுக்கு விருப்பமாயின் அன்று வாக்களிக்காமல் இருக்கவிருந்தது. அன்று மஹிந்த ராஜபக் ஷ சில விடயங்களுக்கு ஆதரவு திரட்ட அச்சுறுத்தியதுபோல் நாம் செய்யவில்லை. அத்தோடு கோப்புகளை வெளியிடுவோம் என பயமுறுத்தவும் இல்லை. கோத்தாபயவை பயன்படுத்தி இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்கள் மூலம் யாரும் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்படவில்லை. அப்படி அவசியம் இந்த அரசாங்கத்திற்கில்லை.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் கீழ் 2013 இல் உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சராக அதாவுல்லாஹ் இதனை சமர்ப்பித்தார். அதில் 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 வீதம் பட்டியல் மூலமும் என்றே இருந்தது. இன்று பாராளுமன்றில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் எந்த மறுப்புமின்றி அன்று கையுயர்த்தினர். அன்று முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று அவர்களுக்கு நினைவிற்கு வரவில்லையா? மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் மீண்டும் மீண்டும் ஆட்சி பீடமேற்ற 18 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும் எந்த எதிர்ப்புமின்றி ஆதரவளித்தனர்.
இன்று பாராளுமன்றில் எமது அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளுக்கமைய உள்ளூராட்சி தேர்தல் முறையில் 60 வீதம் தொகுதி அடிப்படையிலும் 40 வீதம் பட்டியல் அடிப்படையிலும் என திருத்தியிருக்கிறோம். மாகாண சபை தேர்தலிலும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் ஆலோசனைகளை உள்ளடக்கியிருக்கிறோம். அதனாலேயே, எந்த தொகுதியையும் வெற்றிகொள்ள முடியாத மக்கள் விடுதலை முன்னணியும் இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது.
அதாவுல்லா கொண்டுவந்த திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏதுவான வகையில் பல்அங்கத்துவ தொகுதிகளும் உருவாக்கப்படவில்லை. சிங்கள பகுதிகளில் பல அங்கத்தவர்களை பெற்றுக்கொள்வதற்கமைய திருத்தங்கள் இருந்தன. மத்திய கொழும்பின் அமைப்பாளர் என்றவகையில் எமது ஆலோசனைகூட அன்று பெறப்படவில்லை. அனைத்தும் பசில் ராஜபக் ஷவின் தேவைக்கேற்றதுபோல் இடம்பெற்றன. இப்படியெல்லாம் இருந்த அந்த திருத்தத்திற்கு எந்த ஆட்சேபனையுமின்றி அன்று கை உயர்த்தியவர்கள்தான் இன்று மக்கள் முன் நடிக்கின்றனர்.
இன்று சில இயக்கங்கள் தவறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அவர்களை இயக்குபவர் யாருமல்ல கோத்தாபய என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.
தேர்தல்களை பிற்போடுவதற்காகவே இந்த அரசாங்கம் திருத்தங்களை கொண்டுவந்து தாமதங்களை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?
இந்த தேர்தல்கள் தாமதமாக காரணமானவர்கள் நாம் அல்ல. மஹிந்த அரசாங்கம் சீரான முறையில் எல்லை நிர்ணயம் செய்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிராது. இன்றும் சிறுபான்மையினருக்கு எல்லை நிர்ணயத்தில் குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் திருத்தத்தில் அவர்களது யோசனைகளையும் உள்ளடக்குகிறோம்.
அதாவுல்லா இன்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் அவர் அன்று செய்த பிழைகளே இன்று எமக்கு தலைவலியாக தொடர்கிறது.
அதாவுல்லா இன்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் அவர் அன்று செய்த பிழைகளே இன்று எமக்கு தலைவலியாக தொடர்கிறது.
மாகாண சபை தேர்தலில் திருத்தங்களை கொண்டுவர 6 மாத காலம் தேவைப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்குள் திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்தவே எதிர்பார்க்கிறோம்.
அன்று மஹிந்த முஸ்லிம்களுக்கு எதிராக நேரடியாக செய்தவற்றை, இன்று நல்லாட்சி அரசாங்கம் மறைமுகமாக செய்வதாகத் தெரிகிறதே?
இந்த அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறது. அத்தோடு, முஸ்லிம் கட்சிகளின் அபிப்பிராயங்களை ஆராய்கிறது. மற்றும் மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஆணைக்குழுக்களையும் நியமிக்கிறது. அதனடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தால் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.
20 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இதற்கு பதிலாக தேர்தல் முறையில் மாற்றங்களே ஏற்படுத்தப்பட்டன. தேர்தல் முறை மாற்றப்பட்டமை முஸ்லிம்களுக்கு எதிரானவை, முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன, முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சினை என விடயங்கள் பற்றிய தெளிவு இல்லாத சிலர் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இது கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக இருந்த சிலரும் கோத்தாபயவின் பின்னாலிருந்து செயற்படும் இயக்கங்களுமே இந்நடவடிக்கையில் முன்னணியில் இருக்கின்றன. இதந்தக் குழுவினர் யார் என்பது குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நன்றி - விடிவெள்ளி