Top News

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் பசீர்; ரணில் - மைத்திரியின் சம்மதம் பெறப்படும்



தமிழ் ஆப்தன்

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சபை இணைந்த  வடகிழக்காக இருக்குமா அல்லது தனி சபையாக இருக்குமா என்ன கேள்வி எழுந்திருந்தாலும் ஒருபோதும் அவை நடக்க மாட்டாது என்று நோர்வேயின் இராஜந்திர முக்கியஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியிளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

வடகிழக்கில் ஒரு ஆயுத போராட்டம் இடம்பெற்றது, அன்று முஸ்லிம்களுக்கு ஒரு தனியலகு தேவைப்பட்டது அது மாத்திரமின்றி தமிழர்களுக்கு ஈழம் தேவைப்பட்டது அன்றிருந்தது ஆயுதக் கலாச்சாரம் அன்று தேவையானது வேறு ஆனால் இன்று அவைகள் இன்று இல்லை - வடகிழக்கு இணைய வேண்டிய தேவை இல்லை மாறாக மக்களுக்கு அபிவிருத்திகள் தேவை புதிய தொழிற்சாலைகள் தேவை மாறாக அரசியல் பொய்ப்புரைகள் தேவையில்லை வடக்கில் தமிழரும் கிழக்கில் முஸ்லிம் ஒருவரும்  முதலமைச்சராக இருப்பதுதான் நல்லாட்சிக்கு அழகு என்றார்.

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முஸ்லிம் முதலமைச்சர் யார் என்பது சிந்திப்பது இந்த சந்தர்ப்பத்தில் சரியானது இல்லை என்றாலும், தமிழ் முஸ்லிம்களை திருப்தி படுத்தக்கூடிய அரசியல் போராளி என்றால் பசீர் சேகுதாவுத் தான் என்பது மறுக்க முடியாது, தமிழ் தலைமைகளின் நன்மதிப்பை வென்று்ள்ள பசீர் தமிழ் தலைமைகளால் மதிக்கப்படுபவர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கூட்டு ஒன்று உருவாகியுள்ளது, அந்த கூட்டில் பசீர் முக்கிய பங்கை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post