இன்று அதிகம் அதிகம் மாலை நேர வகுப்புக்களில் கவனம் செலுத்தும் நாம் நமத பிள்ளைகள் சரியாக குர்ஆன் ஓதுகிறதா என்பதில் கவனம் எடுக்க தவறுகிறோம், அதுமாத்திரமின்றி அதிக பணங்களை அள்ளி இறைக்கும் நாம் குர்ஆனை கற்றுக்கொள்ள நமது பிள்ளைக்கு செலவு செய்கிறோமா?
இன்று அநேக பிள்ளைகளுக்கு அல்குர் ஆன் ஓத தெரியாது, ஆனால் ஆங்கிலத்தில் சரளம், உலக கல்வியில் டொப் ரேங், புலமைப்பரிசிலில் சித்தி இதுவே இன்றைய எதிர்பார்ப்பு, இது பிள்ளைகளின் தவறு அல்ல பெற்றோர்களின் தவறு, இவற்றை பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும்.
இன்று குர்ஆன் ஓதவே தெரியாத ஒரு சமுதாயம் உருவாகி கொண்டு வருகின்றது என முஸ்லிம் தேசப்பற்றுள்ள ஒன்றியம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.