நவீன தொழில்நுற்ப வளர்ச்சி மழையில் நனைகிறோம் என்ற பெறுமாப்பில் புதிய தலைமுறையினர் வழி தவறிச் செல்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் என்று இலகுவில் கிடைக்கும் புதிய புதிய மென்பொருள்கள் புதிய டீனேஜ் தலைமுறையினரை திசைமாற்றி இருட்டு வழிப்பாதையை காண்பித்துக்கொண்டிருப்பது வேதனையாகும்.
பாடசலை கல்வியை தொடரும் வயதிலேயே பேஸ்புக் மூலம் உலகை சுற்றும் பயணத்தை தொடர்கிறது, அறியாப் புரத்திலிருந்து பிரன்ட் ரிகுஅஸ்கள் வந்து குவிகின்றன.
ஹாய் என்று ஆரம்பமாகும் அறிமுகம் மிகமோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது நாளாந்த பத்திரைகைச் செய்திகள் வெளியிடுவது போன்று.
ஆணுக்கும் ஆணுக்குமான தொடர்பு
பெண்ணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு
ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு என்று நினையா விதத்தில் உலக ஆச்சரியமாய் போய்க்கொண்டிருக்கின்றது சம்பவங்கள்.
டீன் ஏஜில் பேஸ்புக் நட்பு தொடர்கிறது, ஆணும் ஆணும் நண்பராக அறிமுகமாகின்றார்கள், இதில் ஒருவர் அப்பாவி மற்றவர் இவனை வழிகெடுக்க வந்தவர்.
பாலியல் தொடர்பு ஏற்படுகிறது, தேவையற்ற போட்டோக்கள், வீடியோக்கள் பகிரப்படுகிறது, ஆரம்பத்தில் மறுக்கின்றார், சிலர் மொத்தத்தில் ஒதுங்கி வாழ முயற்சிக்கின்றனர், விடாமல் தொடரும் க்ஷைத்தானின் உழைப்பு வெற்றியடைகிறது.
இரண்டுபேரும் தனிமையில் நட்பு ரீதியாக சந்திக்கின்றார்கள், வெட்கம் விலகி ஓப்பனாக பேச ஆரம்பிக்கிறார்கள். கே அல்லது லெஸ்பியல் செக்ஸ் மூலம் அங்கு சந்திப்பு சிலருக்கு நீடிக்கின்றது, ஒருநாள் ஆரம்பம் அதை விடமுடியாமல் மனநோயாளியாக பாடசாலை மாணவனே மாறிப்போகின்றான்.
பாடசாலை மாணவனை குறிவைத்து 30 தாண்டிய பல மாமாக்கள் கூட நட்புக்களை தேடி முயற்சித்து சிறிய தொகை பணம் அல்லது ஏதோ ஒன்றை காண்பித்து டீன்களுக்கு தெரியா உலகிற்கு இவர்களை அழைத்துச் செல்கின்றனர்.
வீட்டில் ஒரே மகன்(ள்) அல்லது அன்பின் அதிகரிப்பு முழுமையாக சுதந்திரம் வழங்கப்படுகிறது.
பெற்றார் கவனக்குறைவாக இருப்பதை அல்லது பெற்றாரின் அதிக நன்பிக்கைத் தன்மையை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்கின்றர் புதிய தலைமுறையினர்.
வெளிநாடுகளுக்கு சம்பாதிக்க செல்லும் சிலரின் நிலையும் இப்படித்தான்.
ஆணோ பெண்ணோ வெளிநாட்டு வேளைவாய்ப்பு என்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் மாதாந்த சம்பளத்தை மட்டுமே கவனத்தில்கொள்வர் பெற்றோர், வெளிநாடு சென்ற மகன்(ள்) தனிமையில் மது மாது கொலை கொள்ளை என்று முழுமையாக மாறிப்போகும் செய்திகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை முகம்கொடுக்கமுடியா பாரிய பிரச்சினையில் மாட்டும் வரை.
கண் திறந்து கவனம் செலுத்துவோம், பிள்ளைகள் சக நண்பனின் வீட்டில் கூட்டாக படிப்பதாக எங்கு செல்லுகிறார்கள் என்பதை கவனம் செலுத்த வேண்டும்,
மேலதிக வகுப்புக்கள் என்று வெளிச் செல்லும் பயணங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்,
மாணக்கருக்கு மொபைல் போன் கொடுத்து அழகு பார்ப்பதை நிருத்திக்கொள்வோம்,
பிள்ளைகளின் நண்பர்கள் யார்? என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.